வைர விழா நிறைவில் சேனையூர் மத்திய கல்லூரி
இன்னாள் நம் பொன்னாள்
உயிருக்கு நிகர் நம் உணர்வுக்கு மொழி
11.02.1957
11.02.2017-11.02.2018




எந்த சுவடுகளும் இல்லாமல் வெறும் முக நூல் பதிவுகளிலும் வீரகேசரியில் ஒரு பக்க மலர் பதிவோடு மட்டுமே அது தன் கொண்டாட்டமாய் முடங்கிப் போனது.
ஒரு கிராமத்துப் பாடசாலைக்கு 60 ஆண்டுகள் என்பதும் அது அறுபது ஆண்டுகளில் ஒரு மத்திய கல்லூரியாக தரம் உயர்ந்து தலை நிமிர்ந்து நிற்பது என்ற வரலாறு அபூர்வமான ஒரு சாதனை என்பதை நாம் மறந்து விட்டோமா?
சேனையூர் மத்திய கல்லூரியின் வரலாறு ஒரு வைரம் பாய்ந்த போராட்ட வரலாறு அந்த நாட்களில் தலைமை தாங்கி வழி நடத்திய அதிபர்களின் சாணக்கியமும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனான சேவையும் பெற்றோர்களின் பெரும் ஒத்துழைப்பும் மாணவர்களின் விடா முயற்சியும் பல தடைகளை தாண்டி ஒரு வெற்றி வரலாறு படைத்தது நம் சேனையூர் மத்திய கல்லூரி.
இக் கல்லூரியில் படித்த பலர் கடந்த அறுபதாண்டுகளில் பல நூறு பேர் பட்டதாரிகளாகவும் ,பல் அரசாங்க உத்தியோகம் வகிப்பவர்களாகவும் ஆசிரியர்களாகவும்,அதிபர்களாகவும்,கல்வி அதிகாரிகளாகவும்,பொறியியலாளர்களாகவும்,வைத்தியர்களாகவும்,உயர் அதிகாரிகளாகவும் பணியில் உள்ளனர்
தென்னமரவாடி முதல் வெருகல் வரை உள்ள தமிழ் மாணவர்களுக்கு எழுபதுகளின் பிற் கூறிலும் எண்பதுகளிலும் கல்வி மறு மலர்ச்சிக்கான ஊற்றுக் கண்ணாய் இருந்து வழி காட்டியது சேனையூர் மத்திய கல்லூரி என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது திருகோணமலையில் பணியாற்றிய கல்வி அதிகாரிகளின் பிள்ளைகள் கூட இங்கு வந்து படித்தார்கள்.என்பது இங்கு குறிப்பிடத் தக்க வரலாற்று பதிவு.
1957 மாசி மாதம் 11ஆம் திகதி இன்றைய சேனையூர் மத்திய கல்லூரி சேனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயருடன் சேனையூர் கிராம முன்னேற்றச் சங்கத்தினால் ஆரம்பிக்கப் பட்டு அரசுக்கு பாரம் கொடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது.தலைவராக.திரு ஆ.கணபதிப்பிளை அவர்களும்.செயலாளராக திரு.க மாற்கண்டு அவர்களும்,பொருளாளராக திரு.தங்கத்துரை அவர்களும் போசகராக திரு.க.நா.நடராஜபிள்ளை உடையார் அவர்களும் பொறுப்பாக இருந்து பாடசாலையின் ஸ்தாபக பெருமைக்குரியவர்களாக மதிக்கப் படுகின்றனர் அவர்கள் இட்ட விதையே இன்று பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய உயர் கல்விக் கூடமாக தலை நிமிர அடிப்படையாக அமைந்தது.
ஆரம்பத்தில் அறுபத்து ஏழு மாணவர்களை கொண்டே பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது முதலாவது தலமை வாத்தியாராக திருமிகு.வே.ஞானமுத்து அவர்கள் பொறுப்பேற்று ஆரம்ப நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய ஆறுமாதத்தில் அவர் மாற்றலாகி செல்ல அந்த இடத்துக்கு நம் பெரிய அய்யா திருமிகு.செ.நடராசா அவர்கள் பொறுப்பேற்கிறார்.
ஆரம்பத்தில் சிறிய கொட்டில்களிலேயே பாடசாலை இயங்கியது சுற்றிவர வாகையும் பற்றைகளும் நிறந்த காடாகவே இருந்தது அந்த காலங்களில் என் அப்புச்சியே அவருக்கு வலது கரமாக தொழிற்பட்டவர்.அய்யாவின் பாலசிங்கம் என்ற குரல் அப்புச்சியயை அந்த இடத்துக்கு கொண்டு வந்து விடும்.பற்றையும் காடுமாய் இருந்த இடம் பசும் கல்விக் கூடமாய் மாறியது.பின் நாட்களில் ஒரு பள்ளிக் கூடம் எத்தகைய கட்டமைப்பு வடிவமைப்புக் கொண்டதாய் இருக்க வேண்டும் என்பதற்கான கட்டமைவு அமைக்கப் பட்டது.செழித்து வளந்த குரோட்டன் செடிகளும் பொன்னலரி மரக் கூட்டமும் அணி சேர்க்க பூக்களும் குளிர் மரச் சோலையாக படிப்பதற்கேற்ற ஒரு ரம்யமான சூழ் நிலை கொண்டதாக பாடசாலை வளவு பார்ப்போரை ஈர்த்திழுத்தது.
1968 ஆம் ஆண்டு மகாவித்தியாலையமாக தரமுயர்த்தப் படுகிறது திருமிகு.சி.நடராசா ஐயாவின் அயராத முயற்சியும் அதற்கு துணையாக அப்போதய கட்டைபறிச்சான் கிராமசபைத் தலவராக இருந்த சேனையூர் 5ஆம் வட்டார உறுப்பினராக தொழிற்பட்ட திருமிகு .ஏரம்பு சிவபாக்கியம் அவரளின் பங்கு இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.அத்தோடு நீண்ட காலம் பெற்றார் ஆசிரிய சங்க செயலாளராக இருந்த திருமிகு.க .மாற்கண்டு அவர்களின் பங்கு இங்கு முக்கிய கவனிப்புக்குரியது.
நீண்ட போராட்டத்தின் பின் மகாவித்தியாலையமாக தரமுயர்த்தப் பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது.அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் உயர்திரு.மு.திருச்செல்வம் அவர்கள் அழைக்கப் பட்டு மகாவித்தியாலைய தரமுயர்வு விழா மிகப் பெரும் விழாவாக கொண்டாடப் பட்டது.திறந்த வெளி அரங்கில் நடந்த மிகப் பெரும் விழா.
1968ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இடைக்காட்டை சேர்ந்த திரு.வி ஆறுமுகம் அவர்கள் அதிபராக ஒன்றரை ஆண்டுகள் பதவி வக்கிக்க சமாந்திரமான வளர்ச்சியயை தக்க வைத்தது கல்லூரி.
1970 ஆம் ஆண்டு தம்பலகாமத்தை சேர்ந்த திரு செ.கணேசபிள்ளை அவர்கள் அதிபராக பொறுப்பேற்று கல்லூரியில் பல முன்னேற்றகரமான நடவடிக்ககள் மேற்கொள்ளப் படுகின்றன சாரண இயக்கத்தில் பாட்சாலை திருகோணமலை மாவட்டத்தில் முதல் தர பாட்சாலை என்ற பெருமையயை பெறுகிறது.முதன் முதல் அகில இலங்கை சுற்றுலா மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகிறது.
1972 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை திருமிகு.செ.கதிர்காமத்தம்பி அவர்கள் அதிபராக கடமையாற்றுகிறார் பல புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன .கபொதௌயர் தர வகுப்பு ஆரம்பிக்கப் படுகிறது முதன் முதலாக மூதூர் தமிழ் பகுதி தமிழ் பாட்சாலையொன்று பல்கலைக் கழகத்துக்கு மாணவர்களை அனுப்புகிறது இந்த அதிசயம் சேனையூர் மத்தியகல்லூரியில் 1977ல் நிகழ்கிறது ஆரம்பத்தில் கலைத்துறையில் மாத்திரம் தொடங்கப் பட்ட க.பொ. த உயர் தர வகுப்புகள் வர்த்தகம் ,விஞ்ஞானம் என எல்லாப் பிரிவுக்களுக்கும் களம்அமைகிறது.திருகோணமலை மாவட்டத்தின் பல கிராமங்களில் இருந்தும் சேனையூர் மத்திய கல்லூரிக்கு மாணவர்கள் படை எடுக்கின்றனர்.
1982 மார்கழி மாதம் முதல் 1999ஆம் ஆன்டு வரை கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் திருவாளர் க.துரை ரெத்தினசிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றி சிறப்பு மிகு செயலாற்றினார் இவர் காலத்தில் பாட்சாலை பல தளங்களிலும் பெரும் அபிவிருத்தி கண்டது கொத்தணிப்பாட்சாலை என்ற பெருமையயயயும் இப் பிரதேசத்தில் ஒரு தாய்ப் பாட்சாலை என்ற பெரும் கெளரவம் சேனையூர் மத்திய கல்லூரிக்கு கிடைத்தது.19 பாட்சாலைகளின் தலைமைப் பாடசாலையாக சிறப்பு பெற்றது.கொத்தணி அதிபராக திருவாளர் க.துரைரத்தினசிங்கம் அவர்கள் கடமையாற்றி இப் பிரதேச கல்வி அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றினார்.
1999ஆம் ஆண்டு திருவாளர்.ம.சுந்த்ரராஜா அவர்கள் அதிபராக சிறப்பான பணியாற்றினார் பெரும் யுத்த சூழ் நிலையிலும் பாட்சாலை தன்னை தக்க வைத்துக் கொண்டது.
2000ஆம் ஆண்டில் திரு.க.பேரானந்தம் அதிபராக பொறுப்பேற்று பல இடர்பாடுகளுக்கிடையில் பாட்சாலையயை வழி நடத்தியமை குறிப்பிடத் தக்கது.
2002ஆம் ஆண்டு இப் பாடசாலையின் பழைய மாணவர் க.துரைராஜா அதிபராக பொறுப்பேற்று மிகவும் நெருக்கடியான இக்காலத்தில் பாட்சாலையின் பெருமையயை தக்க வைத்துக் கொண்டார் பாட்சாலையின் பழைய மாணவர் ஒருவர் அதிபரானமை இக்காலத்தின் சிறப்பு எனலாம்.
2002ஆம் ஆன்டு கடைசிப் பகுதியில்திரு.க.சிவதாசன் அதிபராக பொறுப்பேற்க பாடசாலை தன் சிறப்புகளோடு தொடர்ந்த வரலாறாய் நீண்டது.
2004ஆம் ஆண்டு மேமாதம் முதல் 2016 பெப்ப்ரவரி மாதம் வரை இக் கல்லூரியின் பழய மாணவரும் சிறந்த இலக்கியவாதியுமான இரா ,இரத்தினசிஙம் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பான தலைமைத்துவத்தின் மூலம் பாடசாலைக்கு அகில இலங்கை மட்டத்தில் பல வெற்றிகளை தேடிக் கொடுத்தமை குறிப்பிடத் தக்கது. 2006ஆம் ஆண்டு இடம் பெற்ற பெரும் யுத்த சூழ் நிலை எல்லோரையும் இடம் பெயர வைத்தது.பாட்சாலை இயங்க முடியாத நிலமை ஏற்பட்டது பாட்சாலையின் பெரும்பாலான கட்டிடங்கள் நிர்மூலமாக்கப் பட்டன 2009ஆம் ஆண்டு மீண்டும் பாடசாலை இயங்கத் தொடங்கிய போது மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டிய நிலமை.அதிபர் இரத்தினசிங்கத்தின் புத்தி பூர்வமான சாதுரியமான முயற்சிகளால் பாடசாலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதுப் பொலிவு பெற்றது. அழிவிலிருந்து மீண்டு தன்னை நிலை நிறுத்தி சாதனை முகத்தை தனதாக்கி கொண்டது.
இன்று 2016 முதல் இக் கல்லூரியின் பழைய மாணவர் செ.சிறிதரன் அவர்களை அதிபராகக் கொண்டு இயங்கி வருகிறது.
கல்லூரியில் புகழ் பெற்ற ஆசிரியர்கள் பலர் உதவி அதிபர்களாகவும் பிரதி அதிபர்களாகவும் கடமையாற்றி சிறப்பிடம் பெறுகின்றனர்.
திருமதி.அம்பிகை.நடராஜா
திரு.சி.அரசரத்தினம்
திரு.வ.அ.இராசரத்தினம்
திருமதி.மங்களம் சோமசுந்தரம்
திரு.சி.இராசரத்தினம்
திரு.ஆ.கனகரத்தினம்
செல்வி.தங்கமணி செல்வராஜா
திருமதி.ஜானகி.மார்க்கண்டு
திருமதி.அன்னபூரணம்.சுந்தரக்குட்டி
1990ஆம் ஆண்டு நான் கல்லூரியில் இடமாற்றமாகி வரும் போது அதிபர் தரம் இரண்டு தரா தரத்துடனேயே வந்தேன் .நா பகுதித் தலைவராக பொறுப்பேற்று ஓன்றரை ஆண்டுகளே கடமையாற்ற முடிந்தது
.
பல புகழ் பெற்ற ஆசிரியர்களின் சேவையயை இக் கல்லூரி பெற்றமை பெரும் பேறு.
1)சங்கீத பூசணம்.திரு.ம.வர்ணகுலசிங்கம்
2.பண்டிதர்.இராமசாமி
3.பண்டிதர்.உமாமகேஸ்வரன்
4.கலாபூசணம்.ச.அருளானந்தம்
5.கலாபூசணம்.செ.விபுணசேகரம்
6.நல்லாசிரியர் விருது பெற்ற.திரு.தா.ஜெயவீரசிங்கம்
மற்றும்
திரு.கந்தவனம்
திருமதி.சிவபாக்கியம்.கந்தவனம்
திரு.க.தாமோதரம் பிள்ளை
திருமதி.லில்லி.இராசரத்தினம்
திருமதி.மனோன் கணேசபிள்ளை
திரு.க.ஜீவரத்தினம்
திரு.கா.ஜீவரத்தினம்
திரு.இ.கோணாமலை
திரு.க.தங்கராஜா(ஆலையூரான்)
திரு.வ.ஜீவரத்தினம்
திரு.கோ.சண்முகநாதன்
திருமதி.சாந்தா.குணநாயகம்
செல்வி.நித்தியா
திருமதி.தேவி.கோணாமலை
திரு.கந்தலிங்கம்
திரு.கணபதிப்பிள்ளை(மட்
திரு.தவரெத்தினம்
திரு.கிருஸ்ணபிள்ளை
திரு.அ.த.குருஸ்
செல்வி.ரோஸ்மேரி
செல்வி.கெளசல்யா.கோபாலபிள்ளை
திரு.க.சின்னரெத்தினம்
செல்வி.மனோகரி
திருமதி.கமலா.ஆறுமுகம்
செல்வி.கனகரத்தினம்
திரு.வி.வசந்தன்
திரு.உருத்திரமூர்த்தி
திரு.டொமினிக்
திரு.அலோசியஸ்
திரு.கந்தசாமி(ஆங்கிலம்)
திரு.செல்லையா
திரு.கந்தசாமி
திரு.கணபதிப்பிள்ளை(யாழ்)
திரு.நாகேந்திரம்
செல்வி.அன்னபூரணம்
திரு.சி.சிவஞானசுந்தரம்
திரு.இ.முத்துராசா
திருமதி.இராகினி முத்துராசா
திருமதி.இராசலட்சுமி
திருமதி.அருள்மணி.விபுணசேகரம்
திருமதி.உதையா
திரு.மா.குருகுலசிங்கம்
திரு.க.சுந்தரமூர்த்தி
திரு.ந.நவரத்தினம்
திரு.க.பழனிவேல்
திருமதி.வசந்தா
திருமதி.உமாதேவி
திரு.வி.நவரத்தினராசா
திருமதி.தயாளதேவி.தங்கவடிவேல்
திரு.நாகராஜா
திரு.நல்லரட்டினம்
திரு.சபாரத்தினம்
திரு.ஒபட்சேனாரத்தின
திருமதி.சுலோஜனா.ஜெயபாலன்
திருமதி.நவஜோதி.நவரத்தினராஜா
திருமதி.ராமசீதா.நாகேஸ்வரன்
திருமதி.தவமனிதேவி சசிதரன்
திருமதி.நிர்மலா அழகுராஜா
திருமதி.நவசக்தி
திருமதி.ஞானநாயகி
திருமதி.மகாலட்சுமி
திருமதி.ஈஸ்வரி
திருமதி.வேணுகுமாரி
திருமதி.திரிபுரசுந்தரி சிவசுப்பிரமணியம்
திருமதி.தவமணிதேவி ரத்தினராஜா
திருமதி.மனோன்மணி(மூதூர்)
திரு.பாலசுப்பிரமணியம்
திரு.பாஸ்கரன்
திரு.தில்லைக்குமரன்
திரு.ரவீந்திரன்(மட்)
திரு.ரவீந்திரன்(யாழ்)
திருமதி.சரோஜினி
திருமதி.துரைரத்தினசிங்கம்
செல்வி.வ.புஸ்பராணி
செல்வி.திருமதி
(பட்டியல் தொடரும்)
வைர விழா ஆண்டில் நம் கல்லூரியயை பெருமைப் படுத்துவோம் நாம் மறந்த நம் கல்லூரியின் சாதனைகளைப் பேசுவோம் சாதனைகளுக்கு காரணமான நம் ஆசான்களை கெளரவப் படுத்துவோம் வரலாற்றை ஒரு சமூகம் மறக்கக் கூடாது .நம் கல்லூரியின் வரலற்று நாயகர்களை வாழ்த்துவோம் சேனையூர் மத்திய கல்லூரி நம் உயிருக்கு நிகர்