வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

"தியா" Diya

இன்று ஒரு கன்னடப் படத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

Image may contain: 4 people உங்களுக்கு கன்னடமும் தெரியுமா என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.கன்னடம் தமிழின் சகோதர மொழி ஆனாலும் அது சமஸ்கிருத மயப் பட்டு நிற்கிறது.ஆனாலும் சப் ரைற்றில் துணையோடு திரைப்படம் பார்க்க மொழி அவசியமில்லை அதுவே நம்மோடு பேசும்.


உலகம் முழுவதும் காதலைப் பேசுகின்ற திரைக் காவியங்கள் வந்துள்ளன

அண்மைக்காலத்தில் வந்த படங்களில் கன்னடத்தில் வெளி வந்த
"தியா"
Diya
என்கிற படம் என்னைக் கவர்ந்ததாய் உள்ளது


Image may contain: 2 people, sunglasses, beard and hat
இத் திரைப்படம் பற்றிய பார்வையில் ஆண் நிலை நோக்கில் பெண்ணின் காதல் பேசப் பட்டிருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.
Image may contain: 2 people, text
என் நிலை நோக்கில் காதல் அதன் நோக்கு சரியாக சொல்லப் பட்டிருப்பதாகவே கருதுகிறேன்
ஒரு ரெயில்வே தண்டவாளத்தில் தொடங்குகின்ற கதை ரெயில்வே தண்டவாளத்திலேயே முடிகிறது மன பதகழிப்புடன் கடைசிக் காட்சிகள் நகர்கின்றன.
Image may contain: 3 people, text Kushee Ravi
Pruthvi Ambaar
Dheekshith Shetty
Pavithra Lokesh
ஆகியோர் நடிப்பில்
கே.எஸ்.அசோகா நெறிப்படுத்தியுள்ளார்



"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

சிங்கள மொழி திரைப்படம்

 "எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

சிங்கள மொழியிலான திரைப்படங்களை முதலில் தமிழர்களே தயாரித்தவர்கள் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.ஆரம்ப கால திரைப் படங்கள் தென்னிந்திய பாணியில் அமைய அறுபதுகளில் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களின் வருகை தனித்துவமான சிங்கள மொழிப் படங்களை அறிமுகம் செய்து கலைதுவ நோக்கு முதன்மைப் படுவதைக் காணலாம்.


Image may contain: 2 people, outdoor and close-up












காலப் போக்கில் உலக அளவில் பேசப் படும் பல படங்கள் உலகப் பட விழாக்களில் பரிசு பெற்று சிங்கள திரை உலக்குக்கு பெருமை சேர்த்தன.

Image may contain: 1 person, standing, outdoor and nature
இந்தி சினிமாவின் பாதிப்பு தமிழ் சினிமாவின் பாதிப்பு என மாறி மாறி ஜனரஞ்சக படங்களின் வருகையை உறுதிப் படுத்தினாலும் பல கலைப் படைப்புகள் சிங்கள திரை உலகை தூக்கி நிறுத்தின எனலாம்.

அண்மைக் காலத்தில் சிங்கள திரைப் படங்கள் கதை சொல்லும் முறை நடிப்பு ஓளிப்பதிவு என புதிய நகர்வுகளில் பயணிக்கிறது புதிய நடிகர்கள் அனாயசமாக நடிப்பை வெளிப் படுத்தி செல்கின்றனர் .
இந்த வகையில்

"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

Image may contain: 2 people, text and close-upImage may contain: 2 people, people standing, plant, tree, outdoor and nature
Image may contain: 2 people, people standing, people sitting and outdoor விபுல சமரசேகர எனும் எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு,அனுராதா ஜெயசிங்கே திரைக் கதை நெறியாள்கை செய்துள்ளார்.
புபுது சதுரங்க
நயனதாரா விக்கிரமாராச்சி
வீணா ஜயக்கொடி
பிரதான பாத்திரமேற்று நடிக்க

ஒரு காதல் கதை சொல்லப் படுகிறது வழமையான கதை என்றாலும் சொல்லப் படும் விதத்தில் வித்தியாசமாக நம்மோடு பேசுகிறது.

Sarbjit சர்பஜித்

ஹிந்தி மொழியியிலிருந்து

Sarbjit
சர்பஜித்

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தி சினிமா சில மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்று நான் சொல்வேன் .

தமிழ் சினிமா பெரும்பாலான படங்களில் கதா நாயகிகள் வெறும் அழகுப் பொம்மைகளாகவே வலம் வருவார்கள் ஒன்றோ இரண்டோ நயனதாரா படங்களை விட முழு தமிழ் சினிமாவுக்கும் கடந்த ஐந்தாண்டுகளை கண்டடைய முடியும்.
Image may contain: 1 person, standing, outdoor and nature
அண்மையில் இந்தியில் வெளிவந்த பல படங்கள் குறிப்பாக அலியா பட்,தீப்சி நடித்தவற்றை குறிப்பிட முடியும் அந்த வகையில் ஐஸ்வர்யராவை முதன்மைப் பாத்திரமாக கொண்ட சர்பஜித் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை பேசு பொருளாகக் கொண்டு வெளி வந்திருக்கிறது.
Image may contain: 1 person, outdoor
ஐஸ்வர்ரராய் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறார் சகோதரன் அவர் தீவிரவாதியாக சித்தரிக்கப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்.
Image may contain: 1 person, standing and outdoor
தன் சகோதரனின் விடுதலைக்காக போராடும் பெண்ணாக ஐஸ்வர்ராய் வருகிறார்.
Image may contain: 2 people, close-upImage may contain: 2 people, close-up and outdoor இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுகுகிறதது இப்படம்

லஜ்ஜா Lajja

தெலுங்கு தேசத்திலிருந்து

லஜ்ஜா
Lajja
Image may contain: 2 people, people standing and text
என்ற திரைப்படம் பொதுவான அபிப்பிராயம் தெலுங்கு படங்கள் அடி தடி அற்புதம் மாயாஜாலத்துக்கு பேர் போனதென்று ஆனாலும் அவ்வப்போது நல்ல பல திரைப்படங்கள் முகம் காட்டுவதுண்டு அந்த வகையில் தெலுங்கு மொழியில் புகள் பெற்ற எழுத்தாளர் சலம் என்கிற வெங்கடாசலத்தின்



"மைதானம்"Maithanam" நாவலை தழுவி எடுக்கப் பட்ட படம் லஜ்ஜா Lajja
வாழ்வு காதல் என அதன் முரண்பாடுகளின் வழி புதிய அனுபவங்களை இப் படம் பேசுகிறது பலரும் தொடாத விசயங்களை தொட்டுச் செல்கிறது படம்.
நரசிம்ம நந்தி மதுமிதா இருவரும் பிரதான பாத்திரங்களை ஏற்க நரசிம்ம நந்தி திரைக்கதை இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்க ஒரு குறிப்பிட்ட கிராமத்தை சுற்றியே கதை நகர்கிறது.


காம்போஜி Kamphhoji

மலையாள தேசத்திலிருந்து

காம்போஜி
Kamphhoji

மலையாளத் திரைப் படங்கள் பொதுவாக அவர்களது பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டையும் பெரும்பாலான திரைப்படங்களில் ஏதோ ஒரு வகையில் இசை நடனம் சடங்குகள் நம்பிக்கைகள் என வெளிப்படுத்தி வந்துள்ளதை காண முடியும்.

கேராளாவின் பாரம்பரிய முகத்தை வெளிப் படுத்தும் கதகளி நடனத்தை மையப் படுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.பெரும்பாலான நடிகர்கள் "கதகளி " ஆட்டக் காரர்களாக தோற்றம் காட்டியுள்ளனர்.
Image may contain: 2 people, text
ஆட்டக் கதா,வானப்பிரஸ்தம்,களி அச்சன்,ரங்கம், என்பன கதகளியை பிரதானப் படுத்த,காம்போஜி கதகளியையும் மோகினி ஆட்டத்தையும் மையப் படுத்தி உள்ளது.

"காம்போஜி " 1970ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
வினித் லக்ஸ்சுமி கோபாலசாமி இருவரும் பிரதான பாத்திரமேற்க.
குஞ்சுண்ணி,உமா,நாராயணி என்ற மூன்று பாத்திரங்களை சுற்றி நகர்கிறது கதை.

Image may contain: 2 people, people standing and outdoor
கதகளி மோகினியாட்டம் இரண்டு மரபு வழி ஆட்ட மரபுகளின் இணைப்பில் கலைத்துவ வெளிப்பாடாய் அமைகிறது.



வினித் என்கிற ஆட்டக்காரனின் அற்புத அபிநயங்களிலும் லக்சுமி என்கிற நடன தாரகையின் பாவமும் நளினமும் நம்மை கட்டிப் போடும் காட்சிகளாய் படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

ஒரு கலை வடிவத்தை எப்படி திரை மொழியாக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் படம்.
நடன கலைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

வெண் பனி தூவும்
நாட்கள் போய்
வெள்ளைப் பூக்கள்
விரியும் காலம் இது


கொள்ளையிடும் அழகில்
கொரோனா கூட மறந்து போம்
கொல்லென்று சிரிக்கும் பெண்ணாய்
மல்லிகை போல் இங்கு

சில்லென குளிர் காற்று
இங்கு எப்போதும்
நில்லெனச் சொல்லி
நிலை மயக்கும் பூக்கள்

தேன் சுவை நாடும்
வண்டுகள் கூட்டம்
இங்கும் விரவிக் கிடந்து
மதுவுண்டு மயங்கிச் சாகும்

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

நிலமும் பொழுதும்
Image may contain: Balasingam Sugumar, standing, outdoor and nature










நிலமும் பொழுதும்
நெஞ்சம் கிளர
நெடுக நெடுக


நீர் வழிப் பாதை

நடக்க நடக்க
நீளும் வயல்கள்

கோதுமை இங்கு
கொழுத்து செழித்து
Image may contain: one or more people, people standing, sky, outdoor and nature






நீன் நதியாள்
நீண்டு கிடக்கிறாள்

இந்த பூமியெங்கும்
வளைந்து நெளிந்து
Image may contain: 1 person, standing, sky, cloud, mountain, outdoor and nature வாய்க்கால் எங்கும்
வண்ணப் பூக்கள்

தாய் நிலம் நோக்கி
ஏங்கும் மனசு





அன்னையர் தினம்

அன்னையர் தினம்

Image may contain: 1 person, close-up and outdoor
உன்னில் இருந்து
உதிர்ந்த முதல் பூ நான்
பொன்னாய் மணியாய்
பவளமாய் இன்னும் பலதாய்
சொல்லிய தாலாட்டில்
மண்ணின் சொர்க்கமாய்
உன் மடி கண்டேன்



Image may contain: 2 people, including Balasingam Sugumar, people standing கன்னத்தில் முத்தம்
கைகளில் அணைப்பு
கிண்ணத்தில் அன்னம்
வண்ணம் வண்ணமாய்
எண்ணி எண்ணி
சுவைக்க இனிக்க
அம்மா உன் நினைப்பு
கற்ற்ல் எழுதல்
காவியச் சுவையில்
கதைகள் சொல்லல்
என எல்லாம்
உன்னில் இருந்து
என்னுள் செரித்த
மந்திர வித்தை
மாய நூல் ஏணி
வானில் இருந்து
வந்து போகும்
அதில் நான் ஏறி
ஆகாசத்தை அளந்து
இறங்கிய
அற்புத கதைகள்
எத்தனை சொன்னாய்


Image may contain: 2 people, including Balasingam Sugumar, people standing and outdoor
ஒவ்வொரு நாளும்
உன் குரல் எனக்கு
உற்சாக பானம்
ஞானப் பால் தந்த
மோனச் செருக்கு நீ
மெளனத்தின் மொழியில்
எவ்வளவு
அர்த்தங்கள் உன்னதமாய்





Image may contain: one or more people and people sitting நீயும் நானுமாய்
நெடுக நெடுக
Image may contain: 3 people, including Balasingam Sugumar, people standing and outdoor

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

காற்றின் தாலாட்டில்
கண்ணுறங்கா கோதுமையாள்
சோற்றுக்கு பதிலாக இங்கு
சுகம் தரும் சுந்தரியாள்


கீற்றுக் கதிர்களினால்
கிளர்ந்தெழும் பெரு வளத்தாள்
நேற்றும் இன்றும் என்றும்
நிலம் காட்டும் பெருவுடையாள்

முற்றி முறுகித் தான் வெடித்து
பற்றிய வெளியெல்லாம்
பொன்னாய் பரவி நிற்பாள்
பூமியவள் மகிழ்ந்திருக்க

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

கோதுமையின் பூ விரிப்பில்
குதுகலித்துக் குருவியெலாம்
பாய் விரித்துப் படுத்திருக்கு
பரந்த இந்த வயல் வெளியில்


நான் இருந்து ரசித்திடவே
நல்ல தமிழ் எனக்கிருக்கு
முப்பாட்டன் வழியினிலே
மூத்த தமிழ் உடன் இருக்கு

கா விரிந்த சோலையிலே
பூ அவிழ்ந்து மணம் பரப்ப
புன்னகையில் மைனாக்கள்
வாய் திறந்து பாடுமிங்கு

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

நீரோடும் இங்கு
ஊரோடு தான் வளைந்து
தேரோடும் வீதி போல
வேரோடும் பயிர்க் கூட்டம்


காரோடி வயல்கள் எல்லாம்
கரு முகில்கள் தான் சூழ
வாரோடி நீர் காட்டும்
மார்ச் எனும் மகிளூரில்

பேர் போன ஊர் இது
பெரும் வயல்கள் வளத்தினிலே
சார் சாராய் பயிர் வளரும்
சனம் இங்கு நல் வாழ

முள்ளி வாய்க்கால் முடிந்து போன கதை அல்ல

முள்ளி வாய்க்கால் முடிந்து போன கதை அல்ல

வரலாறு முழுவதும்
துயரத்தின் சுமைகளை
சொல்லி விட்டு சென்ற
ஒப்பாரிப் பாடல்

ஈழம் எதிர் கொண்ட
இடர் களையா நாட்கள்
போர் தின்று போன
போராட்ட வாழ்வுதனை

யார் கொண்டு போனார்
தேர் போன்ற வாழ்வெல்லாம்
திசை மாறிப் போன நாட்கள்
பூவென்றும் பிஞ்சென்றும்
பழுத்துதிரா பழமெல்லாம்
வாழ்வின்றிப் போன
வகையறியா நாட்கள்

மே 18

மே 18

பாவுற்று நாம் பாட
மேவுற்று நிற்கும் மே 18
சோர்வுற்று போனோமா
சோகங்கள் நெருப்பாக


தாழ்வுற்று நாம் வீழ
நேர்வற்று போனோமா
நீர் வற்றிப் போக
அழிவுற்ற அழுகையில்

அழுகை நம் மொழியல்ல்
எழுகை நம் வழி
விழி எழு என்று
சோர்வற்ற நாளாய் மே 18

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

கரும் பச்சை விரிப்பும்
காற்றின் சிரிப்பும்
ஆற்றோடு சேர்ந்தூரும்

அலைகளின் இருப்பும்


நேற்று இந்த வழியில்
கானகக் கோழியொன்று
கதை சொல்லி நின்றது
நாற்றின் நிழலில்

சற்றுப் பொறு என்று
சந்த கவி பாட
என் பாட்டன் இடை மறித்தான்
முன்னொரு காலத்து கனவாய்

ஒ...என் இனமே

ஒ...என் இனமே

ஓ..என் இனமே
உன் சினம் கொள்
பார்வை
அமரிக்க ஆதிக்கத்தை
அடி பணிய வைக்கும்
நாள் வரும்

Image may contain: one or more people
கொரோனாவை விட
கொடிய நோய்
உன்னைச் சூழ
அடங்க மறு
நீதியின் குரலில்
நீளும் உலகிது
மூச்சு விட முடியவில்லை
என்ற ஏக்கக் குரல்
எங்கள் மூச்சுக்களிலும்
உலகம் முழுவதும்
சகோதரனே
உன் மூச்சாய்

பண்டிதர் அந்தோனி.சவரிமுத்து குரூஸ்

    நம்மவர்களை நாம் அறிவோம்

    மூதுரின் முத்தாய் முகிழ்த்த மூத்த தமிழ் அறிஞன்
    பண்டிதர் அந்தோனி.சவரிமுத்து குரூஸ்

    Image may contain: 1 person, glasses, text that says "பண்டிதர். அந்தோனி சவரிமுத்து குருஸ்"
    நில வளமும் நீர் வளமும் கொண்ட மூதூர் தமிழ் வளமும் கொண்டு தன்னை தகை சால் சான்றோர்களால் பெருமைப் படுத்தி நின்றது அத்தகைய பெருமையுறும் சான்றோனாய் பண்டிதர் அ.சவரி முத்து அறியப் படுகிறார்.
    மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்.

    ஆசிரியராக அதிபராக நற்பணியாற்றி தமிழ் இலக்கியம் இலக்கணத்தின் பால் காதல் கொண்ட தமிழ் அறிஞன் அவர்.இலக்கிய இலக்கண்ப் புலமை ஒரு சேரப் பெற்ற தமிழ் ஆளுமை.
    மூதூரின் மூத்த எழுத்தாளர் வ.அ.இராசரெத்தினம் அவர்கள் பண்டிதர் அ.சவரிமுத்து பற்றி இப்படிக் குறிப்பிடுவார்.
    "நான் எழுதியவைகளையெல்லாம் படித்து ரசித்த வர்களில் மூதூரைச் சேர்ந்தவரும் எனது மாமன் முறை யினருமான பண்டிதர் அ. சவரிமுத்து குரூஸ் அவர்கள் முதன்மையானவர். நான் எஸ். எஸ். சி. படித்துக் கொண்டிருக்கையிலேயே அவர் ஆசிரி யரானார்.எஸ். எஸ். சி. வகுப்புக்கான இலக்கியப் பாடநூல்
    முழுவதையும் அவர் எனக்கு ஒரே ஒரு மாதத்திற்குட் படிப்பித்தார்
    .
    அவரில் உள்ள குறிப்பிடத்தக்க விசேடம் என்ன வென்றால் அவர் பத்தாம் பசலிப் பண்டிதர் அல்ல. அகநானூறையும் படிப்பார், அதே நேரத்தில் ஆனந்த விகடனையும் படிப்பார். ஆனந்த விகடனிற் தேவன் எழுதிய "துப்பறியும் சாம்பு’ என்ற நாவலை மிகவும் ரசித்துப் படித்தார். எல்லாத் துப்பும் சாதாரணமா னதாக எதிர்பாராத வகையிற் கண்டு பிடிக்கப்பட் டது போல எழுதப்பட்டிருப்பதுதான் தே வ ணி ன் திறமை. அந்தப்பாணி புதியது. அற்புதமானது என்று என்னிடம் புகழ்ந்தார்.
    இலங்கையர் கோனிடமும் அவர் நெருங்கிப் பழகி கினார். இலங்கையர் கோனின் யாழ்பாடி என்ற நாட
    கத்திற்கு, இலங்கையர் கோன் கேட்டுக் கொண்டபடி அவர் சில பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.

    நான் டெணியாயாவிலும் மொறட்டுவாவிலும் ஆசிரியனாக இருந்த காலத்தில் எழுதியவைகளை எல் லாம் ஒவ்வோர் விடுமுறையும் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு வாசித்து காட்ட வேண்டும். அதுவும் நான் உரத்துப் படிக்க அவர் கேட்க வேண்டும் என் பது அவர் ஆசை.
    எனக்கு எப்போதுமே உரத்து வாசிக்கப் பிடிக் காது. என் வாசிப்பெல்லாம் உதடுகள் அசையாமலே "Barking at the print' அச்சைப் பார்த்துக் குரைத்தல் என்று யாரோ எழுதி யிருக்கிறான்.

    ஆனாலும் என்ன செய்வது? நான் அவருக்காக உரத்து வாசிப்பேன். அவர் என் கதைகளை ஆர்வத் தோடு கேட்டு ரசிப்பார்.
    நான் மாப்பஸான் பற்றி வானொலியில் நிகழ்த் திய பேச்சுக்குப் பின்னால் என்னை 'மாப்பஸான் என்றே அவர் அழைப்பார் . என் வீட்டில் எல்லாருமே அவரை ரசிகர் என்றே அழைப்பார்கள்.
    நான் மூதூரில் விடுதலைக்கு வரும் காலங்களில் எல்லாம் அவரோடுதான் என் பெரும் பொழுது கழியும்.
    அவர் என்னைச் செய்யுள் இலக்கணம் கற்கும்படி மிகவும் வற்புறுத்தினார். நானும் அவரிடம் அதைப் படித்தேன், ஆனால் அதில் அத்தனை சிரத்தை காட் டவில்லை. இது அவருக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது."
    Image may contain: one or more people and people standing பண்டிதர் நிக்கிலஸ் அவர்கள் தனது நான் கண்ட பாரதி எனும் நூலில் தன்னை இந்த நூல் எழுதத் தூண்டியவர் பண்டிதர் அ.சவரிமுத்து என குறிப்பிடுகிறார்.அத்தோடு பண்டிதர் நிக்கிலஸ் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதியுள்ளார்

    தன் தமிழால் மற்றவர்களையும் ஊக்கப் படுத்தி அதன் பால் ஈடுபட வைக்கும் பெருந்தன்மைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு எனலாம்.
    மூதூர் மண் பெருமையுறும் தமிழ் அறிஞன் பண்டிதர் அ.சவரிமுத்து குரூஸ் அவர்கள்

பண்டிதர் வஸ்தியான் நிக்கிலஸ் தமிழ் அறிந்தோன்

நம்மவர்களை நாம் அறிவோம்

மூதூரின் மூத்த தமிழ் பண்டிதர்
பண்டிதர் வஸ்தியான் நிக்கிலஸ்

தமிழ் அறிந்தோன்

ஒரு காலத்தில் பண்டிதர்கள் பலர் வாழ்ந்து சிறப்பு பெற்ற இடமாக மூதூர் இருந்திருக்கிறது என்பதை மூதூரின் கலை இலக்கிய வரலாறு பேசுகிறது.இவர்கள் பற்றி இலக்கிய கலாநிதி.வ.அ .இராசரெத்தினம் அவர்கள் தன் இலக்கிய நினைவுகள் நூலில் குறிப்பிட்டு செல்கிறார்.அவர்களில் பண்டிதர் நிக்கிலசும் ஒருவர்.தமிழ் மீதும் பாரதி மீதும் காதல் கொண்ட ஒரு தமிழ் ஆசானாய் அறியப் படுகிறார்.ஆசிரியராக அதிபராக கல்விப் பணியில் மூதுருக்கு பெருமை சேர்த்தவர்களில் ஒருவர்.

ஈழத்து தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த பெரும் கொடையாய் அமைவது இவர் எழுதிய "நான் கண்ட பாரதி" எனும் நூல்.மூதூர் மண் பெருமை கொள்ளும் வகையில் இந்த நூலை அவர் ஆக்கியுள்ளார் இதனை ஒரு ஆய்வு நூலாகவே அறிமுகப் படுத்துகிறார்.அதில் பல்வேறு தலைப்புகளில் பாரதியை தன்னுள் வாங்கி நுண்ணிதான விபரிப்புகளுடன் இந்த நூல் அவரது பண்டித தமிழ் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது.பாரதி பற்றி தீவீர வாசிப்பும் தேடலும் ஆய்வுகளும் ஈழத்தில் எண்பதுகளில் பாரதி நூற்றாண்டை ஒட்டியே முனைப்பு பெறுகின்றன.ஆனால் 1965ம் ஆண்டிலேயே "நான் கண்ட பாரதி" எனும் நூலை வெளியிட்டு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்க்கும் மூதூர் மண்ணுக்கும் பெருமை சேர்க்கிறார்.
நான் கண்ட பாரதி நூலில் இவர் எழுதிய சமர்ப்பணம் அவர் தமிழ் ஆளுமைமையை சொல்லி நிற்கிறது

"சமர்ப்பணம்
சீர்பரவு பாரதியின் சிறப்புறுநற் போதகத்தை
பேர்காத லோடெழுதி பெருமகிழ்வுற் றிந்நூலை
ஏர்மருவு தந்தையர்க்கா ஏதமிளாத் தாயருக்கா
பேர் பரவு மெந்தன் பெறற்கரிய சோதரற்கா
மைந்தருக்கா மகளிருக்கா யாருக்கர்ப் பணிப்பதென்று
சிந்தனையி லே யாழ்ந்து செயல்மறந் திருந்துவிட்டேன்.
கண்மூடி னேனே யான் கடுவுறக்கங் கொண்டேனே
மண்ணறிவு மோ வெந்தன் மாசில் தரிசனத்தை
விண்ணி லிருந்து இழிந்துவந்த பூங்கொடியாள்.
அன்ன நடைநடந்தாள் அருகில் வந் தமர்ந்துவிட்டாள்.
வன்ன இடையை வனிதை முகமதியை
கருங்குவளை வாள் விழியைக் கவுள்மாவின் நன்கனியை இன்னமுதலாய
இன் பத் திருவுருவை இன்னாளென் றேயறியா தேங்கிநின் றே யானும் பொன்னனையாள் தனை நோக்கிப் பொன்னே நீர்
யாரென்றேன்

முத்து நகை த வள முகமலரைச் சற்றுயர்த்தி தத்துவரிச் சேல்விழியைச் சற்றே யுருட்டியுங்கள் நெஞ்சச் சுனையதனில் நின்றலர்ந்த தாமரையில் என்று மிருக்கின்றேன் எனையேன் மறந்தீர்கள்.
என்றவுரை யென்றன் இருசெவியி லேறுமுன்னே கண்டுமொழிக் காரிகையைக் கண்டுகொண்டேன் யானும் துள்ளி யெழுந்தேன் அத் துடியிடையைத் தானெடுத்தேன் பதினோராண்டின் முன் பறந்துசென்ற பைங்கிளியே, மதிவதன மானே யென் மாசில் மனோன்மணியே
என்னுடலி லென்னாவி யுள்ளளவும் நான் மறவேன்
என்வேண்டு மானுலும் ஏந்திழைகே ளென்றேற்கு பொன்வேண்டாம் புவனப் பொருளொன்று

மேவேண்டாம் என்று மிறவாத இன்புகழே வேண்டுமென்று இன்முகத்தையே காட்டி இணைமலர்க்கை நீட்டிநின்றாள் நன்றே நீர் கேட்டீர் நவையிலா நாயகியே இன்றே தருகின்றேன் இன்பப் பெயர் வாழ என்றளித் தேனவட் கிப்புதுப் பனுவலை. உவப்புடன் அளித் திட்ட இன்பப் பனுவல் பூவில வட் கரிய சமர்ப் பணம்,"

நான் என் சிறு வயதிலிருந்தே அறிவேன் 1964ஆம் ஆண்டு சேனையூர் மத்திய கல்லூரியில் நடை பெற்ற பாரதி விழாவில் அவர் பேச்சே எனக்கு முதல் அறிமுகம் அந்த பேச்சு ஒரு புகை போல ஞாபத்தில் உள்ளது
"நான் கண்ட பாரதி " எனும் நூலை எழுதுவதற்கு சேனையுரில் நடந்த அந்த விழாவே காரணமாகியது என்பதை இப்படிக் கூறுகிறார்
.
"சென்ற புரட்டாதி மாதம் பன்னிரண்டாந் திகதி தி/சேனையூர் அரசினர் தமிழ்க் கலவன் வித்தி யாலயத்தில் சேனையூர்க் கலாமன்றத்தினரின் ஆதர வில் நடந்த பாரதி விழாவுக்கு நானும் ஒரு பேச்சாளனாக அழைக்கப் பட்டிருந்தேன். என்னுடன் பல பண்டிதர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் கூட வந்திருந்தார்கள் விழாவைச் சிறப்பிப்பதற்காக.

விழா ஆரம்பிக்கப்பட்டபொழுது என் பேச்சுக்கு உரிய இடம் வரவே நான் கொடுத்த தலையங்கத்தின் கீழ் மிக நீண்டதோர் சொற்பெருக்காற்றி னேன். எனினும், என்பேச்சுக்கு நேரம் போதவில்லை. மறுபேச்சாளர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டும். கதம்ப நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. அவைகளுக்கும், இடம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் என் பேச்சைச் சுருக்கிக்கொண்டேன். விழாவும் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
Image may contain: one or more people and text
மறுநாள் எனது இல்லத்திற்கு சில அன்பர்கள் வந்தார்கள். அவர்களுட் சிலர் முதல்நாள் பாரதி விழாவில் நான் பேசியபேச்சை விதந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வமயம் எனது அருகில் இருந்த மூதூரின் முதிர்தமிழ் அறிஞரும், சிறந்த இரசிகரும், பாடசாலைத் தலைமை ஆசிரியருமான திருவாளர் அ. சவரிமுத்து என்பவர் என்னைப் பார்த்து, நீர் பேசிய தலையங்கம் என்ன என்று அமைதியுடன் கேட்டார். நான் அதற்கு நான் கண்ட பாரதி என்று பதிலளித்தேன். என்ன என்ன தலைப் புகளின் கீழ் உரையாற்றினீர் என்று மீண்டும் என்னைக் கேட்டார்.

நானும் உடனே பதில் கூறினேன். என் பதிலைக்கேட்ட அவ் ரசிகர் ‘தம்பி! தமிழ்த் தாயின் அபிமான புத்திரன் பாரதி, அவன் கொள் கைகளை நற்றமிழ்த்தேன் விட்டுரைத்து நம் தமிழ்த் தாயின் நன்னுதலில் தி லகமிட்டு அவளைத் தன் மானத்துடன் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தல் உம் தலையாய கடன். நீர் பேசிய ஒவ்வொரு தலைப் புகளும் அதியுன்னத திரவியங்கள். ஆகையால், உடனே அவைகளைத் தொகுத்தெழுதி ஒரு ஆராய்ச் சிக்கட்டுரையாக வெளிவிடும். அதனல் தமிழ் உல கம் பலனடையும்' என்று கூறி என்னை ஊக்குவித்தார்.

அந்த இரசிகரின் ஊக்குதலால் உந்தப்பட்ட நான் மார்கழி விடுதலையில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வாராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தையும் எழுதி, என்னை ஊக்குவித்த இரசிகரை வரவழைத்து அவரி டம் காட்டினேன். இக்கட்டுரைகளை முற்ற முடிய வாசித்த அவ்விர சிகர், அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்’ என்பதற் கமைய உமது கட்டுரைகள் மிக நன்றாய் அமைந்து இருக்கின்றன"

1964ஆம் ஆண்டிலேயே சேனையூர் தமிழ் கலா மன்றத்தின் பெரு விழா பாரதி விழா ஈழத்து கலை இலக்கியப் பரப்பில் சேனையூருக்கு பெருமை சேர்த்து நிற்கிறது.

மூதூரின் மூத்த தமிழ் அறிஞரான பண்டிதர் நிக்கிலஸ் கொண்டாடப் படவேண்டியவர்.அவர் எழுதிய "நான் கண்ட பாரதி " நூல் மீள் பதிப்பு பெறவேண்டும்.

பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கிழக்குப் பல்கலைக்கழகம்

நிலம் மீண்டவனின் கதை

நிலம் மீண்டவனின் கதை

நேற்று எனக்கொரு
வளவு இருந்தது
அம்மாவும் அப்புச்சியும்
அவர் பிளைகள் நாங்களும்


காற்றுக்கு இருக்கும்
சுதந்திரம் போல
அந்த நிலத்தில்
எல்லாம் எங்களுக்காய்

ஆற்றில் இறங்கி
அனைத்தும் முகர்ந்து
சேற்றில் கூட
செழிப்புக் கண்டோம்

குன்றுகள் தோறும்
குதுகலம் கொண்டோம்
உடையும் குன்றுகள்
உயிரற்றுப் போயின

ஊர் எரிந்து
ஒன்றுமில்லாமல் போனது
வாரிச் சுருட்டி
கொள்ளையிடப் பட்டது

காத்திருந்து
மீண்டும் வந்தோம்
நிலம் பிழந்து
வளங்கள் கொண்டோம்

களமும் வயலும்
கனத்த உழைப்பில்
உயிர் பெற்று
ஊரை நிறைத்தது

சேர்மன் இராசரெத்தினம்

 நம்மவர்களை நாம் அறிவோம்

சேர்மன் இராசரெத்தினம்

சேனையூர் மருதநகரை பிறப்பிடமாக கொண்டவர் திருமிகு.செ.இராசதெத்தினம் அவர்கள்.
1970 களில் கட்டைபறிச்சான் கிராம சபைத் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.
நீண்ட காலம் ஆறாம் வட்டார உறுப்பினராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு.


கிராமசபைத் தலைவராக இருந்த காலத்தில் சாலையூரில் பூர்வ குடி மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் அன்னாரின் பங்களிப்பு குறிப்பிடத் தக்க கணிப்பை பெற்றுள்ளது.
கிராமத்துக்கு தேவையான உட் கட்டமைப்பு வேலைகளில் மிகுந்த சிரத்தையுடன் செயலூக்கம் மிகுந்த சேவையாளன்.
சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம் ,சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம் ,சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் அந்த நாட்களில் இளைஞர்கள் மத்தியில் மதிப்புக்குரியவராக இருந்தமை குறிப்பிடத் தக்கது.

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயிலில் அதன் திருவிழாக்க்களில் குறிப்பாக ஏழாம் திருவிழா காரராக இருந்து சிறபுச் சேர்த்தவர்.
ஊரில் நடை பெறும் சமூக நடவடிக்கைகளிலும் தமிழ் உணர்வு சார்ந்த அரசியலிலும் நாட்டம் மிக்கவராக இருந்து தனக்கான அரசியல் கொள்கையில் தடம் பதித்தவர்.


என்னை எப்போதும் என்ன மருமகன் என அழைத்து தன் அன்பை வெளிப்படுத்தும் அக்கறையாளன் .என் அம்மாவின் பள்ளித் தோழியையே அவர் திருமணம் முடித்தார் சம்பூர் தபால் அதிகாரியாய் இருந்த திருமதி இராஜேஸ்வரி அவர்கள்.என் படிப்பில் எப்போதும் அக்கறை அவருக்கு இருந்தது அவர்கள் குடும்பமே அப்புச்சியோடு நெருங்கிய உறவு கொண்டது என்பதை மறக்க முடியாது.
Image may contain: 4 people, people standing and indoor
1990ஆம் ஆண்டு சம்பூரில் அரங்கேறிய படுகொலை களத்தில் அவரும் அவர் மகனும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப் பட்டமை பெரும் துயரச் சுமையாம் மனம் கனத்து கிடக்கிறது.
( கீழே உள்ள படத்தில் இருப்பவர்கள் அப்போதய உள்ளூராட்சி அமைச்சர் திருச்செல்வம்,அப்போதய கட்டைபறிச்சான் கிராமசபைத் தலைவர் திருமிகு.ஏ.சிவபாக்கியம்,திருமிகு.செ.இராசரத்தினம்,கட்டைபறிச்சான் கிராமசபை அலுவலக அதிகாரி.திருமிகு.வைரமுத்து,ஈச்சலம்பற்றின் அப்போதய கிராமசபைத் தலைவர் திரு.ஞானகணேஸ் )


Saturday 13 June 2020

எல்லைகள் தாண்டிய எதிர் குரல்

தோழர் பற்குணம் சில நினைவுகள்
எல்லைகள் தாண்டிய எதிர் குரல்

தோழர் பற்குணம் இருபத்தியைந்து ஆண்டு நினைவு நாள் இன்று.
என் வாழ்வில் மறக்க முடியா நினைவுகளுக்கு சொந்தக்காரர் அவர் .அவருடனான பழக்கம் எனக்கு வெறும் ஐந்து ஆண்டுகள்தான் ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் நீடித்த நட்பு போன்ற வாழ்வனுபவத்தை எனக்கும் என் குடும்பத்துக்கும் தந்து விட்டு மறைந்த மா தோழமை .
பல்கலைக் கழக விரிவுரையாளராக பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து உதவி அரசாங்க அதிபர் முதல் மாகாண அமைச்சு செயலாளர் என பல அரச உயர் பதவிகளை வகித்தாலும் சிலருக்கு பதவிகளால் சிறப்பு ஆனால் தோழர் பற்குணத்தால் அந்த பதவிகள் சிறப்பு பெற்றன.
தோழர் பற்குணம் மானுட நேயம் மிக்க மாக்சிய சோசலிச கொள்கையாளன் எந்த பதவியில் இருந்தாலும் அந்த பதவியால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் தீவிர அக்கறையுடன் செயல் படும் செயல் திறன் மிக்கவர் .சுற்று நிருபங்களுக்குள் சுருங்கிப் போகாத மக்கள் சேவையாளன்.
தோழர் பற்குணம் ஒரு கலை இலக்கியவாதியும் கூட மாக்சிய ரசனை மக்கள் இலக்கியம் என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர் பாரதி மீது காதல் கொண்டவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எனும் கவிஞன் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர் பட்டுக் கோட்டை பற்றிய அவரது நூல் கலை இலக்கிய விமர்சகர்களால் விதந்துரைக்கப் பட்டது.
திருகோணமலையில் அவரது ஒழுங்கமைப்பில் நடை பெற்ற நாடகப் பட்டறைகள் திருமலையில் நவீன தமிழ் அரங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியமை இங்கு விதந்துரைக்கத் தக்கது.
பல நாடகங்களை எழுதியும் இயக்கியும் தன்னை ஒரு கலை இலக்கிய ஆளுமையாய் அடையாளப் படுத்தி பல முன்னுதாரணங்களுக்கு சொந்தக்காரர்.
Image may contain: 1 person, glasses நாடக அரங்கியல் அதன் வரலாறு பற்றி ஒரு முழுமையான நூல் வரவேண்டும் என விரும்பியவர் தன் ஆதங்கத்தை என்னிடம் வெளிப்படுத்தியவர் அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே எனது "உலக நாடக அரங்கு" எனும் நூல் ஆனால் அவர் மறைவின் பின்பே அந்த நூல் 1997ல் அவருக்கு காணிக்கையாய் வெளியிட்டேன் இதுவரை பல பதிப்புகளை கண்டுள்ளது ஆனாலும் இன்னமும் அதன் தேவையை என் மாணவர்கள் பலர் புதிய பதிப்பு ஒன்று கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.அவர் நினைவுக்கு சமர்ப்பணமான அந்த நூல் திருத்திய பதிப்பாய் இந்த ஆண்டு வெளிவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
இருபத்தியைந்து வருடங்கள் கடந்தும் எல்லாம் நேற்றுப் போல் உள்ளது.அவர் இல்லாமையின் வெறுமையை எப்போதும் உணர்கிறேன் .
என் இனிய தோழனே

பாண்ட ரங்கம்

பாண்ட ரங்கம்

பாண்ட ரங்கம் ஆடு
பண்டைத் தமிழ் ஆடலாய்
சிலப்பதிகாரம் செப்பும்
பாண்ட ரங்கம் ஆடு

Image may contain: 1 person, standing, shoes and indoor
தேரின் முன் ஆடி
தேவர்கள் காண
நேரிய நெடியோன் ஆடிய
பாண்ட ரங்கம் ஆடு




முளவின் ஒலியும்
முக வீணை இசையும்
இசைவின் எழிலாய் அரங்கம் காண
பாண்ட ரங்கம் ஆடு
மாதவிப் பெண்ணாள்
தமிழின் ஆடலாய்
தண்ணுமையோடு தண்மையதாகிய
பாண்ட ரங்கம் ஆடு

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி