வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

பேராசிரியர் கைலாசபதியின் 85 ஆவதுபிறந்த நாள்

பேராசிரியர் கைலாசபதியின் 85 ஆவதுபிறந்த நாள்

யாழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சிற்பி அவர் பார்த்து பார்த்து ஒரு சிற்பத்தை செதுக்குவது போல பல்கலைக் கழகத்தை அதன் கல்விசார் புலங்களை வடிவமைத்தவர் தீர்க்கதரிசனம் மிக்க செயல் பாடே1974 ஆம் ஆண்டு யாழ் பலகலைக் கழகத்தை உருவாக்கியது.

பல்கலைக் கழகம் தொடங்கப் படுகிற போது பல எதிற்புகள் வந்தாலும் அரனை முறியடித்து வெற்றிகரமாக செயல்பட வைத்தவர்.
பேராசிரியரின் இலக்கிய முகம் பற்றியே எல்லோரும் பெரிதாக பேசுவது மரபு ஆனால் அவரது அரசியல் முகம் புரட்சிகர அரசியல் மயப் பட்டது கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட பேராசிரியர் எழுதிய அரசியல் கட்டுரைகள் முக்கியம் வாய்ந்தவை அவரது போராட்ட முகத்தை தொழிலாளர் சார்பை வெளிப்படுத்துபவை.சோசலிச கம்யூனிச கட்டுமானமே உலகத்துக்கு விடுதலை தரக் கூடியது என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர்.

நான் கம்யூனிச சித்தாந்தத்தை என் க.பொ த உயர்தர வகுப்பு காலங்களில் அறிந்தாலும் அதற்கான சரியான புரிதலை பேராசிரியரிடமிருந்தே பெற்றுக் கொண்டேன் இன்று வரை அவர் பாச்சிய அறிவொளி அணையா நெருப்பாகவே உள்ளது.

எதையும் கேள்வி கேட்டு முன்னேறு என்பார்.
இன்று பத்திரிகைகள் ஊடகங்கள் டிஜிற்றல் மயமாகி சமூக மயப் பட்டு சாதிக்கா முடியாத் விடயங்களை அவர் தினகரன் ஆசிரியராக இருந்த போது சாதித்து காட்டினார்.அவர் நாடு முழுவதும் நிகழ்த்திய தினகரன் தமிழ் விழாக்கள் இன்றும் பலராலும் விதந்துரைக்கப் படுவதை பத்திரிகை வரலாறு நம் முன் ஆவணமாக உள்ளது எழுத்தை பரவலாக்கிய ஒரு பத்திரிகையாளனாகவும் அவரை நாம் இனங்காண முடியும்.
Image may contain: 1 person, sunglasses and outdoor எனக்கும் அவருக்குமான நேரடி நட்பு ஒரு ஐந்து வருசத்துக்கு உட் பட்டதுதான் ஆனாலும் என் ஆளுமை சார் அறிவின் நினைவொளியில் அவர் என் புலமைத்துவத்துக்கான அடிப்படைகளை ஆழமாக விதைத்தவர்.
அவரது விரிவுரைகளைத் தாண்டி அவருக்கும் எனக்குமான உறவு நீண்ட நேர உரையாடல்கள் அவரது வீட்டு நூலகத்தை நான் சுதந்திரமாக பயன் படுத்த அனுமதித்தமை ஒரு குடும்ப நட்பாக தொடர்ந்தமை அவரது பிள்ளைகள் பவித்திரா,சுமங்களா மனைவி ஆகியோரின் என் மீது மாறாத அன்பு என்பன இனிய நினைவுகளாய் எப்போதும்.


Mansoor A Cader
Mansoor A Cader அவரில் லயித்திருந்த ஒவ்வெரு கணமும் அற்புதமானது. அன்பும் ஆகர்ஷிப்பும் அலாதியானது. அவர் வீட்டில் சாப்பிடும் அளவுக்கு நம்மை நேசித்தார். இறுதியாண்டில் மெய்யியல பேராசிரியருடன் முரண்பட்டபோது சேதாரம் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தார். அவர் நம்மின் ஊட்டிய அறிவார்ந்த விளக்கஙகள் நன்றிக்கடனுக்குரிவை.

ஒருமுறை துவிசக்கர வண்டியில் வளாகம் வந்தபோது மகள் துவிச்சக்கர வண்டி இது. இன்று அவ காரில் போகிறா எனக்கூறி ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தையும் கூறினார். அவரின் ஆன்மா சாந்தி பெறுக.
Pena Manoharan
Pena Manoharan 2015 இல் பேரா.பா.ஆனந்தகுமாருடன் யாழ் ப.க. சென்றிருந்தபோது கைலாசபதி அரங்கம் முன்பாக அனுபூதி நிலையில் நின்ற கணங்கள் நினைவில்.வாசிப்பினால் மட்டுமே அறிவேன்.ஆனாலும் ஆசான் தான்.
Murugesu Natkunathayalan
Murugesu Natkunathayalan அவரோடு பழகிய நாட்கள் என் வாழ்வில் அற்புதமானவை.
Varathar Rajan Perumal
Varathar Rajan Perumal மாணவர்களுடன் ஆசிரியர்கள் எப்படி நல்ல நண்பர்களாகவும் இருப்பதற்கான பண்பாட்டுக்கு பேராசிரியரே உதாரணம்
Vijayaretthna Edwin
Vijayaretthna Edwin அவரிடம் பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் தமிழ் கற்றேன். பெரும் ஆளுமை எனினும் சுவாரஸ்யமாக விரிவுரையை கொண்டு செல்வார்...

பின்னால் கூட்டங்களிலும் நூல்களிலும் அவரது கருத்துக்களை அறிய முடிந்தது...


அவருடைய முக்கியமான கட்டுரைகள் இப்போது வெளிவரவேண்டியவை...

ஆனால் அவர் முன்வைக்கத் தொடங்கிய மாக்சிய அழகியல் பற்றி பின்னர் யாரும் கவனம் செலுத்தவில்லை...

அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களிற்கான பதில் அதில் உண்டு...
Saba Sabeshan
Saba Sabeshan பேராசிரியர் கைலாசபதி இலங்கையின் தமிழ் இலக்கிய உலகின் ஒரு சகாப்தம்..அவருடைய எழுத்தக்கள்..விமர்சன துறையில் அவர் ஆற்றிய பணி அநேகமான ஏகலைவர்களை உருவாக்கியுள்ளது....மார்க்சிச சித்தாந்தங்களின் நவீன சிற்பி

கஞ்சன் அம்மானை

கஞ்சன் அம்மானை

என் சின்ன வயதில் இருந்து கஞ்சன் அம்மானை என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியது எங்கள் அய்யா அம்மாவின் அப்பா திருமிகு வீரகத்தி குமாரசாமி அவர்கள் தன் பரம்பரை சொத்தாக ஒரு ஏட்டை வைத்திருந்தார் அது கஞ்சன் அம்மானை ஏடு.அவர்கள் பரம்பரை பரம்பரையாக வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் வீட்டில் விளக்கு வைத்து ஏடு படித்து பத்தாம் நாள் பொங்கி மடை வைத்து கொண்டாடுவது ஒரு மரபாக இன்று வரை நீள்கிறது.

சாத்திரியார் புலவர் தாமோதரம் பிள்ளை அவர்கள் சேனையூருக்கு ஒவ்வோராண்டும் அந்த தினத்துக்கு வந்து எங்கள் அம்மா வீட்டில் பத்து நாளும் தங்கி ஏடு படிப்பது அவரே அவர் இறந்த பின் எங்கள் அம்மாவின் அப்பாவே படித்து வந்தார் அவரே எனக்கு ஏடு படிப்பது எப்படி என காட்டி தந்தார் நான் ஏடு வாசிக்க கற்றுக் கொண்டது அவரிடம்தான்.

நான் பல்கலைக் கழகம் சென்ற பின் பல்கலைக்கழக நூலகத்தில் கஞ்சன் அம்மானை என் கண்ணில் பட்டது அதை 1970ல் பேராசிரியர்.சு.வித்தியானந்தன் பதிப்பித்திருந்தார்.நான் ஏடாய் படித்த நூல் அச்சில் வெளி வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியயை தந்தது. பின்னர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களை சந்தித்து அந்த நூலின் பிரதி ஒன்றை பெற்றுக் கொண்டேன் .

ஏடு படித்து பொங்கும் இம் மரபு எங்கள் வீட்டில் மட்டும் அல்ல மட்டக்களப்பிலும் பல வீடுகளில் இந்த மரபு காணப்படுகிறது.
கஞ்சன் அம்மானை படிப்பு மட்டக்களப்பு கிருஸ்னன் கோயில்களில் ஆண்டு தோறும் திருவிழாக் காலங்களில் படித்து கிருஸ்னன் பிறப்பை நிகழ்த்திக் காட்டும் ஒரு இலக்கியம் நிகழ்த்துகையாக ஒரு பண்பாட்டு தொடர்ச்சி காணப்படுகிறது.

இந்த மரபு பற்றியதான ஆய்வை காலம் சென்ற கல்வியாளர் கவிஞர் சுகந்தி.சுப்ரமணியம் செய்துளார் அது நூலாகவும் வெளி வந்துள்ளது.
கஞ்சன் என இந்த நூல் குறிப்பிடுவது கம்சன் என்ற புராணப் பெயர் கிராம வழக்காற்றில் கஞ்சனாக உரு மாறியிருக்கிறது.
கண்ணகி வழக்குரை போல் மட்டக்களப்பில் உருவான செவ்விலக்கியம் கஞ்சன் அம்மானை.
மரபுகள் தொடரட்டும்

உலக நாடக நாள் மார்ச் 27. 2018 -1

உலக நாடக நாள் மார்ச் 27. 2018 -1

நாடகர்க்கான உலகம் தழுவிய ஒரு நாள் கிழக்குப் பல்கலைக் நுண்கலைத் துறை இந்த நாளை முதன் முதலாக இலங்கையில் 1996ஆம் ஆண்டு கொண்டாடியது.இலங்கை அரச கலாசார அமைச்சு அதன் பின்பே அரச ரீதியாக கொண்டாட தொடங்கியது.
ஒவ்வோரு ஆண்டும் உலகத்தில் பிரபல்யமான நாடக ஆளுமைகளின் செய்தி பரிமாறப் படும் .

இந்த ஆண்டு உலகில் ஐந்து ஆளுமைகளின் செய்திகள் பரிமாறப் பட்டுள்ளன.

ஆசியா பசுபிக் பிராந்தியம் சார்பில் இந்தியாவின்
ராம் கோபால் பசாஜ்
அரபு நாடுகள் சார்பில் லெபனானை சேர்ந்த
மாயா சபிப்
ஐரோப்பிய பிராந்தியம் சார்பில் பிரித்தானியாவின்
சைமன் மக்பெணி
அமரிக்க பிராந்தியம் சார்பாக மெக்சிகோவின்
சபினா பெர்மன்
ஆபிரிக்க நாடுகள் சார்பில் ஐவரிகோஸ்ற் நாட்டின்
வெய வெய லிக்கிங்
அவர்களும் தந்து சிறப்புப் பெறுகின்றனர்.

உலக நாடக நாள் மார்ச் 27 2018- 2 கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உலக நாடக விழா உருவான பின்னணி

உலக நாடக நாள் மார்ச் 27 2018- 2

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உலக நாடக விழா உருவான பின்னணி

1995ஆம் ஆண்டு ஒரு மாலைப் பொழுதில் மார்ச் 27ஆம் திகதி கவிஞர் ஆனந்தன் வீடு அவர் வீட்டில் ஒரு பன்னிரண்டு அங்குல கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டி .அவர் வீடு அமைந்திருக்கும் அமிர்தகழி அங்கு அவர் தன் ரீவி அன்ரனாவை உயர்த்தி கட்டியிருந்தார் அதனால் அவர் வீட்டில் இந்திய தூரதர்சன் தெளிவாய் தெரியும் அன்றும் நாங்கள் மலையாள கவிதைகள் பற்றி பேசிக் கொண்டிருக்க கோகிலா ஒரு இஞ்சி தேத்தண்ணியை குடித்துக் கொண்டு உரையாடல் சுவாரஸ்சியமாக நகர்கிறது .

தொலைக் காட்சி உலக நாடக தினம் என்ற அறிவித்தலோடு பேராசிரியர் ஆறுமுகத்தின் "கருஞ்சுழி" நாடகத்தை ஒளி பரப்புகிறது.நானும் ஆனந்தனும் உசாரானோம் தேத்தண்ணி மேலும் சுவையயை தந்தது ஒரு வித்தியாசமான நாடக மொழி இதுவரை நான் பார்ற்ற நெறியாள்கை செய்த நாடகங்களிலிருந்து அது வேறு பட்டு நின்று உடல் மொழி சார்ந்து நாடக அனுபவத்தை தந்தது. ஆனந்தனும் பரவடப் பட்டு போனார் பின்னாளில் அதே கருன்சுழி நாடகத்தை மட்டக் களப்பு இந்துக் கல்லூரி மாணவர்களை க் கொண்டு வெற்றி கரமாக மேடையேற்றிய போது அதைக் காண ஆனந்தன் இருக்கவில்லை அந்த 1995 ஆம் ஆண்டிலையே புதுக்குடியிருப்பு கண்ணி வெடி சம்பவத்தின் பின் நடந்த இராணுவ துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன துயரம் .ஒவ்வொரு நாடக நாள் வரும் போதும் ஆனந்தன் நினைவும் என்னோடு பயணிக்கும்.
Image may contain: one or more people, people on stage and wedding
அடுத்த நாளே நான் பேராசிரியர் மெளனகுரு அவர்களிடம் பகிர்ந்து கொள்ள உலக நாடக நாள் தொடர்பாக நாங்கள் செயால் பட 1996ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை உலக நாடக நாளை கொண்டாடுகிறது.மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் புத்தகக் கண்காட்சி கருத்தரங்கு அரங்க நிகழுவுகள் என நாடக விழா புதிய அனுபவத்தை தருகிறது

Bharatha Kalalaya
Bharatha Kalalaya அந்த நாடகம் நடக்கும்போது நான் இந்துக்கல்லுாியில் இருக்கிறேன் அருமையான நாடகம்
Karunchuzhi Arumugham
Karunchuzhi Arumugham நன்றி கருஞ்சுழி நினைவை பகிர்ந்தமைக்கு. நாளை உலக நாடக தினம் .கடந்த மாதம் பெங்களுருவில் 8 Theatre Olympics India 2018 நடிகர்களுக்கு அனுமதி இல்லை நாடகம் நிகழ்த்தி வந்த களைப்பு தீரவில்லை அதனால் நாளை ஓய்வு
Maunaguru Sinniah
Maunaguru Sinniah முதன் முதலில் மட்டக்களப்பு இந்துக்கலூரியில் பாட்சாலை மாணாக்கரை வைத்து தயாரித்த கருஞ்சுழி நாடகம் பாலசுகுமாரின் திறமைகளைக் காட்டிய ஒரு நாடகம்.அது பின்னர் கிழக்குப்பல்கலைக்க்ழகம், பேராதனைப்பல்கலைக்க்ழகம் முதலான இடங்களில் எல்லாம் மேடையேறியது. இதனால் இதனை எழுதிய ஆறுமுகமும் பரவலாக அறிமுகமானார். பாலசுகுமார் அர்ப்பணிப்புமிக்க ஒர்ர் நாடகக் கலைஞன்.உலக நாடக தினவிழாவுக்கான ஆலோசனைகளை எனக்கு வழங்கி அதனை 1994 இலில்ருந்து தொடர்சியாக கிழக்குப்பல்கலைக்க்ழகத்தில் நடத்த எனக்கு வலக்கரமாக விளங்கியர்.அவரும் அவர் மனைவி பிரேமிளாவும் இரவுபகலாக நின்று உதவுவார்கள்.பானைகளுக்கு வற்ணம் தீட்டி ஒழுங்கமைப்பதில் பிரமிளாவின் பங்கு அளப்பரியது.அந்தக்கூட்டு ஒத்துழைப்புகள் இல்லாவிடில் நாம் சிறப்பாக அவற்றை நடத்தியிருக்க முடியாது.உலக நாடக தினத்தில் நான் அந்த நாடகத் தம்பதியினரை நினைவுகூருகின்றேன்.சுகுமாரின் திறமைகள் வெளிப்பட லண்டன் உகந்த இடம் அல்ல.எனினும் அனைவரும் காலத்தின்,இடத்தின் சூழ் நிலையின் கைதிகளே.நல்லனவற்றை நினைத்து இன்புறுவோம்

உலக நாடக நாள் 2018 மார்ச் 27 -3 உலக நாடக நாள் நினைவாக என் நாடகங்களுடன் பேசுகிறேன்

உலக நாடக நாள் 2018 மார்ச் 27 -3
உலக நாடக நாள் நினைவாக என் நாடகங்களுடன் பேசுகிறேன்

"தனித்திருக்கப்பட்டவர்கள் " தமிழில் நவீன நாடகத்துக்கு புதிய முகம் கொடுத்த நாடகக் குடில் முருகபூபதியின் நாடகப் பனுவல்
2003ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்த்து கலைப் பள்ளியில் ஆலமரத்தை பிண்ணணியாக கொண்ட அரங்கை உருவாக்கி எனது நெறியாள்கையில் மேடையிடப் பட்டது.


நடிகர்களாக அன்று அங்கு பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர்.அண்ணாமலை புகழ் கார்த்திகேயன் ,இன்று திருச்சூர் நாடகப் பேராசிரியர் வினோத் உட்பட பலர் நடித்திருந்தனர் இவர்களோடு தோழர் பற்குணத்தின் மகள் இன்று சென்னையில் பிரபல்யமாக பேசப் படும் நடனக் கலைஞர் அபிராமியும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.


தமுழில் நவீன நாடகத்துக்கு புதிய மொழியயை அறிமுகப் படுத்திய தனித்திருக்கப்படவர்கள் என் நெறியாள்கையில் புதிய பரிமாணமாய் விரிந்தது.
நாடகத்துக்கான ஒளியமைப்பை மறைந்த நாடகன் முனைவர் வேலாயுதம் சிறப்பாக கையாண்டார்.

அபிராமி ஒரு நடனக் கலைஞர் என்பதால் அவள் உடல் மொழி நாடகத்தின் பல உச்சங்களை பேசி நின்றது கார்த்யிகேயன் அவன் குரலும் அசைவுகளும் நாடகத்துக்கு மெருகு சேர்த்தது.வினோத்தின் மலையாளம் கலந்த தமிழ் பார்வையாளர்களது பாராட்டை பெற்றது.

நாடக நெறியாளன் அவன் கட்டற்ற சுதந்திரமுடையவன் அவன் நாடக மொழி அது எத்தகைய அரங்காக இருந்தாலும் அவனது தனித்துவ முத்திரை வெளிப்படும் என் நாடகங்கள் எல்லாம் ஒரே தன்மைத்தந அல்ல ஒவ்வொரு நாடகமும் புதிய வடிவத்தை அறிமுகப் படுத்தியவை .
தனித்திருக்கப் பட்டவர்கள் என் நாடக வாழ்வில் முக்கிய படைப்பு.

Abiramy Patkunamm
Abiramy Patkunamm மறக்க முடியாத நாட்கள் அவை சார்.. 15 வருடங்கள் ஆகின்றன. எனக்கு நாடகத்துறையில் அதீத ஈடுபாடு இருந்தும் நான் அதற்கான பங்களிப்பை செய்தது மிக சொற்பமே. காரணம் சிறுவயது முதலே நடனம் என்னை விழுங்கி கொண்டது. ஆயினும் மௌனகுரு அங்கிள், உங்கள் போன்றோரது செல்லப் பிள்ளையாய் நான் நாடகத்துறையில் சிறுக சிறுக கற்றுக்கொண்டதுண்டு. அதில் இந்த நாடகம் ஒன்று. அதன் மூலம் அறிமுகமான கார்த்திகேயன் மூலம் தான் நான் சின்னத்திரைக்குள் பிரவேசித்ததும். நடிப்பு மீதான காதல் என்றும் தீராதது

உலக நாடக நாள் 2018 மார்ச் 27 -4 துர்க்கிர அவலம்

உலக நாடக நாள் 2018 மார்ச் 27 -4
துர்க்கிர அவலம்

கிழக்குப் பல்கலைக்கழக உலக நாடக விழாவொன்றுக்கு நான் நெறியாள்கை செய்து மேடையிட நினைத்து முடியாமல் போன துயரம்.
துர்க்கிர அவலம் பேராசிரியர் மு ராமசாமியின் மனைவியார் பேராசிரியர் செண்பகம் ராமசாமி அவர்கள் கிரேக்க துன்பியல் நாடகமான "அன்ரிகனி"நாடகத்தை தழுவி எழுதியது உலக நாடக நாள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் என் நாடகமில்லாமல் நாடக விழா நடந்ததில்லை .

துர்க்கிர அவல நாடகத்தை தயாரிப்பதற்கான எல்லா முயற்சிகளும் நடை பெற்றன முதல் பாட வாசிப்பு இரண்டாவது பாட வாசுப்பு என எல்லாம் முடிந்து பாத்திர தெரிவுகளும் நடை பெற்று முதல் இரண்டு மூன்று நாட்கள் ஒத்திககளும் நடை பெற்றன கிழக்கின் இசை மரபுகளை அடிப்படையாக கொண்டு நாடகத்தின் மையமான கோரஸ் பாடல் குழுவுக்கான இசையாக மட்டக்களப்பின் நடைக் காவடி மெட்டை உள்வாங்கிய இசையயை அமைத்திருந்தேன் ஒத்திகைகளில் நாடகம் பெரும் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென் பட்டன அதுவே அந்த நாடகம் போடுவதற்கான சூழலுக்கு தடையாக அமைந்தது என பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு ஆண்டும் என் நாடகத்தை கரவொலியுடன் பார்த்து ரசிக்கும் பல்கலைக் கழக பணியாளர்கள் என்ன சேர் இந்த முறை உங்க நாடகம் இல்லையா என சலித்துக் கொண்டனர்.

மிகச் சிறந்த ஆளுமையுள்ள மாணவர்கள் என் துர்க்கிர அவலத்தில் பங்கேற்க தயாராய் இருந்தனர் விசேட பயிற்சிகளும் அவர்களுக்கு கொடுத்திருந்தேன் ஆனால் அரங்களிக்கையாக நிறைவேறாமல் போனது எனக்கு மட்டுமலல அவர்களுக்கும் அது பெருத்த ஏமாற்றம்தான்.
கிரேக்க அரங்க மரபின் தமிழ் வடிவத்தை கொடுக்க இருந்த எனக்கு இந்த சம்பவம் ஒரு துர்க்கிர அவலம்தான்

தோழர் தம்பி தில்லை முகிலன் புரட்சிகர செவ்வணக்கம்

தோழர் தம்பி தில்லை முகிலன்
புரட்சிகர செவ்வணக்கம்


தோழனே உன்னைப் பற்றி என்ன எழுத எதை எழுத எதை விட தோழமையும் உரிமையுமாய் நீண்ட பயணங்கள் .

திருமலை நகரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் முன்னோடிகள் சங்கப் பலகை நிகழ்வுகளில் முற்போக்கு முகம் கொண்டு மாக்சிய கருத்துக்களை அள்ளி வீசிய அந்த தருணங்கள்.உன் கம்பீரக் குரல் மிடுக்கேறிய உன் தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே என்னை ஆதர்சித்த உன் தோற்றம் பின்னாளில் பல கவிதை அரங்குகளில் உன் புரட்சிகர முழக்கம் திருமலையில் ஒரு முற்போக்கு முகாமுக்கான முன்னறிவிப்பாய் அமைந்தன.
ஈழப் புரட்சி அமைப்பு கொட்டியாரப் பிரதேசத்தில் கட்டைபறிச்சான் கங்குவேலி ஆகிய இடங்களில் நடாத்திய மே தின விழாக்கள் மணல்சேனையில் நடத்திய உழவர் விழா தம்பலகாமத்தில் நடத்திய மேதின விழா எல்லாவற்றிலும் நாடகமும் கவிதையுமாய் நீ சுழன்ற அந்த கலை எழுச்சி அதிலும் உன் நாடகங்கள் சொன்ன சோசலிச சித்தாந்த சிந்தனை பகிர்வு கவிதை மூலம் காட்டமாக முன் வைத்த கடவுள் மறுப்பு.
1977 தேர்தலில் ஈழக் கோரிக்கைக்காய் ஊர் ஊராக செய்த பிரச்சாரம் இடதுசாரித்துவத்தை தமிழ் இன உணர்வுடன் பார்த்த அந்த நாட்கள் தொடர்ந்தும் அதன் வழிப் பட்ட உன் பயணம் .

எண்பதுகளில் நாடகம் கலை இலக்கியம் என நீ காட்டிய அக்கறை செயல் பாடு.பாடசாலை தமிழ் தினப் போட்டிகளுக்கு உன் நாடகப் பிரதிக்காகா தவம் கிடந்த பாடசாலைகள் உயிர்த் துடிப்பான உன் நாடக இயக்கம் உன் வழி உருவான பல கலைஞர்கள்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் புதிய நாடக முயற்சிகள் பல் குரல் மன்னனாய் குழந்தைகளுடன் குதுகலிக்கும் அந்த பொழுதுகள் சிவாஜியை அப்படியே கொண்டுவரும் உன் குரலும் பாவங்களும்.தோழர் பற்குணத்துடன் இணைந்து சமூக அக்கறையுடனான கலை இலக்கிய செயல் பாடுகள் .
தோழனே பல்கலைக் கழக விரிவுரயாளனாய் நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலை திருகோணமலையில் நானும் மெளனகுரு சேரும் நடத்திய நாடகப் பட்டறைகளில் கலந்து கொண்டு தெரியாததை அறியத் துடிக்கும் கர்வமற்ற கலைஞனாய்.
வான்மதிக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது மட்டக்களப்பு வந்து உன் மகளாக அவளைப் பார்த்துக் கொள் என்று சொல்லி நெகிழ்ந்த தருணங்கள்

அவள் இராவணேசனில் பங்கு பற்றி பாராடுப் பெற்ற போது உன் இலட்சியம் நிறைவேறியதாக நீ கொண்ட பூரிப்பு.
மகள் இறந்த போது உன் துயரை பகிர்ந்து கொண்ட அந்த நாட்கள்.
நான் கடத்தப் பட்டதை அறிந்து நீ பட்ட துயரத்தை பின்னாளில் ஒரு நால் என்னிடம் சொல்லிய போது நான் நெகிழ்ந்த அந்த பொழுது.
யாரிடமும் எதையும் யாசித்து பெற்றதில்லை நிமிர்ந்த நடை நீ எங்கள் பாரதி .ஈழம் தந்த செல்லி
இறப்பு உனக்கில்லை தோழனே

சேனையூர் கட்டைபறிச்சானும் வைகுந்த அம்மானை மரபும்

சேனையூர் கட்டைபறிச்சானும் வைகுந்த அம்மானை மரபும்

தமிழில் பிரபந்த இலக்கிய மரபில் அம்மானை இலக்கியங்கள் மாணிக்கவாசகரின் திருவம்மானையோடு தொடங்கினாலும் அம்மானை பற்றிய தகவல்களை நாம் சங்க இலக்கியங்களிலும் காண முடியும்
"அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.

ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு."
இப்படி விக்கிபீடியா விளக்கம் தருகிறது
சிலப்பதிகாரத்திலும் நாம் அம்மானை பற்றிய தகவல்களைப் பார்க்கிறோம்.
அம்மானை இலக்கிய மரபு என்பது கிறிஸ்தவ இஸ்லாமிய புலவர்கள் வரை செல்வாக்கு செலுத்தியுள்ளமையயையும் தமிழ் இலக்கிய வரலாறு பேசுகிறது.

வைகுந்த அம்மானை பெருந்தேவனார் பாடிய மகாரதத்தின் இறுதிப் பகுதியான பாண்டவர் வைகுந்தம் போன கதையை ஒரு வழி நூலாக 7500 அடிகள் உடையதான நூல் என்ற குறிப்பும் அது சரஸ்வதி மகால் நூகத்தால் 1904ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது.ஆனால் இலங்கையில் அது ஏட்டில் படிக்கப் பட்டு பின்னர் புத்தகமாக வெளி வந்து படிக்கப் படுகிறது.

சேனையூர் கட்டைபறிச்சானில் ஒருவர் இறந்தால் அதன் பின் முப்பத்தியொராம் நாள் வரை படித்து இறுதி நாளில் பொங்கி வழி பாடு செய்யும் முறை உள்ளது.என் இளமைக்காலத்தில் ஏடு பார்த்து படித்ததை கேட்டிருக்கிறேன் .

பின்னைய நாட்களில் நானே உறவினர்களின் மரண வீடுகளில் வைகுந்த அம்மானை பாடியிருக்கிறேன்.வைகுந்த அம்மானை என்றதும் எனக்கு செல்லையா பெரிய அப்புவும்,நாகராசா அண்ணாச்சியும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.மட்டக்களப்பிலும் இந்த மரபு காணப் படுகிறது தம்பலகாமத்திலும் பள்ளிக்குடியிருப்பிலும் கொட்டியாரத்தின் பல கிராமங்களிலும் இதன் இதன் நீட்சியயை அவதானிக்க முடியும் இன்று வரை எங்கள் ஊரில் தொடரும் ஒரு மரபு.இதை படித்தால் செத்தவர்கள் வைகுந்தம் போவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது நம்பிக்கைதான் மனித வாழ்வை நகர்த்தி செல்கிறது.

அம்மானை ஆடலில் தொடங்கிய ஒரு பண்பாட்டு வேர் ஆற்றுப் படுத்தும் ஒரு மரபாக இன்று வரை தொடர்வது பண்பாட்டுப் படர்ச்சிதான்.
சங்க காலத்தில் தொடங்கிய ஒரு மரபு இன்றைய சேனையூர் கட்டைபறிச்சான் வரை நீள்வது ஒரு மரபின் நீட்சியே

மூதூரே முத்தமிழே மூதூரே முத்தமிழே

மூதூரே முத்தமிழே



மூதூரே முத்தமிழே
தேனே என் திரவியமே
தேரே அழகாய்
செந்தமிழில் ஊறியவளே
காரேறும் வயல் சூழ்ந்த
கடல் கொண்டு கவிபாடும்
சீராய் எம் மனங்களிலே
சித்திரமாய் சிரிப்பவளே

முத்துக் குளித்த-உன்
முன் பெருமை
வரலாறு
செத்தாலும்
நாம் மறவோம்
செந்தமிழால்
உனைப் பாடி
கொண்டாடி நாம்
மகிழ்வோம்
குன்றுகள் சூழ்ந்து
குடாக் கடல் வளைந்து
மிண்டு மிண்டு
எழும் மின்னலாய்
கோடு கட்டி
வளைந்து வளைந்து
ஓடும் உப்பங் களிகளால்
உவகையொளி தந்தவளே
மாவலியாள் தாயாக
மடி சுமந்து ஓடி வர
தேமதுரத் தமிழால்
சித்தித்த திருக்கரசை
தோரணம் கட்டி
தொன்மைப் பழமையயை
பறைசாற்றும் கல்வெட்டு
எழுத்துகளால்
எங்கள் இருப்பை
என்ன்னாளும் சொல்லும்
இன்பப் பெரு மகளெ
உன்னை வணங்க
ஒரு கோடி
கைகள் கொண்டு
மலர் தூவி மகிழ்கின்றேன்
என்னை ஈன்று
உன் மடியில் தாலாட்டி
உலகுக்கு தந்தவளே

இங்கிலாந்தும் இலுப்பப் பாணியும்

இங்கிலாந்தும் இலுப்பப் பாணியும்

நான் இங்கிலாந்து வந்து பன்னிரண்டு வருடங்களை கடக்க போகிறது ஒரு மாமாங்கம் கழியப் போகிறது ஆனாலும் நான் இங்கிலாந்தில் வாழவில்லை என் ஊரில்தான் வாழ்கிறேன் .என் ஊர் தந்த நினைவுகளை எழுத எனக்கு இந்த வாழ் நாள் போதாது.

ஆனாலும் எனக்கு தோன்றுவதை எழுதிக் கொண்டே இருப்பேன் இங்குள்ள மாபெரும் இலக்கிய ஆளுமைகள் அதனை இலக்கியமாக ஏற்றுக் கொள்வார்களோ தெரியாது அவர்கள் இன்னமும் ஒரு வட்டம் போட்டு கோடு போட்டு படியல் தயாரித்து உலஜ இலக்கியதரம் பற்றியெல்லாம் பேசுவார்கள்.கலை அலை என்பார்கள் உலக இலக்கிய பரப்பு விரிந்தது ஆபிரிக்க லத்தீன் அமரிக்க ஆசியாவின் பல இலக்கியங்கள் இவர்கள் வரையறைக்குள் வருவதில்லை இன்னமும் மேற்கத்தைய மனோபாவத்துடனான நச்சரிப்பு பட்டியல் போடும் இலக்கிய மேட்டிமைத் தனம் சிலரை மாத்திரம் வழிபடும் புனிதம்


புனிதங்களை உடைத்து படைப்பதே நவீன இலக்கியம்
வரும் வைகாசி மாதம் முடிய இலுப்பை மரங்கள் பூத்துக் குலுங்க தொடங்கும் கோடையின் வெப்பம் இலுப்பை பூ மணத்தால் மனத்தை தணிக்கும் மருந்தாக எங்கள் சுவாசத்தில் கலக்கும். அதன் வாசம் விடிகாலைப் பொழுதில் காற்றையும் கிழித்துக் கொண்டு காத தூரத்துக்கு அள்ளிச் சொரியும் ஆனந்தக் களிப்பு அது.
காடுகள் எங்கள் வாழ்வின் எல்லாக் காலங்களுக்குமான பேசு பொருள் வருடம் தோறும் நாங்கள் அதன் வழி பயணித்து இயற்கையின் கொடைகளை பழமாகவும் பூவாகவும் காயாகவும் கனியாகவும் கொண்டாடும் சமூகம் நாம்.
ஓங்கி வளர்ந்த இலுப்பை மரங்களை அண்டி விடி சாமத்தில் வண்டில் கட்டிப் போய் படுத்திருந்து வெள்ளைச் சீலை விரித்து இலுப்பைப் பூச் சொரியும் அந்த நேரம் வரை தூங்கும் போது காது மடல் களில் வந்து விழுந்து எங்களை எழுப்பி சுற்றிப் பரவும் அந்த சுகந்த வாசத்தில் நாங்கள் மயங்கும் அந்தப் பொழுது சொர்க்க வாசலின் திறப்பு.
ஒரு பெரு மரத்துக்கு கீழ் பகுதி பகுதியாக பகுத்துப் பிரித்து மழையயை போல தூறலாய் பூக்கள் சொரியும் விடிந்தவுடன் தன் ஆடத்தை நிறுத்தி மீண்டும் மற்றொரு அதிகாலை ஆட்டத்துக்காய் காத்திருக்கும் எங்கள் இலுப்பை.
இலுப்பம் பூ அதன் சுவை அவித்து அதை வடித்தெடுத்து காய்ச்சி பாணியாக்கி சிறு முட்டியில் இட்டு வாயில் வெள்ளைச் சீலை கட்டி அதனை பல வருசங்களுக்கு பழுது படாமல் பாதுகாக்கலாம்.
தயிரும் சோறும் வாழப் பழமும் இலுப்பைப் பாணியும் எங்கள் உணவு எங்கும் கிடைக்காத சாப்பாட்டு அனுபவம் எங்களுக்கு.
நான் இங்கிலாந்து வந்ததும் என் வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் என்னோடு கூட வருபவன் நண்பன் ரத்தினசிங்கம் அங்கிருந்து என் மாமியார் வரும் போது என்ன கொடுத்து விட என்று கேட்டான் நான் சொன்னேன் இலுப்பைப் பாணி கொடுத்து விடு என்று இது நடந்தது 2009ஆம் ஆண்டு அவன் அனுப்பிய இலுப்பை பாணி இன்னமும் பழுது படாமல் என் இங்கிலாந்து வீட்டில் இரவும் இலுப்பை பாணியோடு தயிர் சாப்பிட்டேன் அவன் நினவோடும் ஊர் நினைவோடும்.
ஒன்பது வருடங்கள் இன்னமும் அதன் சுவை மாறாமல் அப்படியே அதே சுவையில்
நானும்தான் பன்னிரண்டு வருடங்கள் புலம் பெயர் வாழ்வில் கடந்து சென்றாலும் அதே சுவையுடநும் அதே ஊர் மணத்துடனும்

ஆசிஃபா ஆஃசிபா

ஆசிஃபா
ஆஃசிபா

என் அன்பு மகளே
உனக்காக அழுகிறேன்
நான் ஓராயிரம்
கோடி முறை

Image may contain: 1 person, child and close-up மீண்டெழுவாய்
உதிரச் சுவை குடித்த
கயவர் குரல் வளை
கடித்து குதறி
துப்பி விடு

சித்திரை ஊஞ்சலும் போர்த் தேங்காயும்

சித்திரை ஊஞ்சலும் போர்த் தேங்காயும்


சேனையூர் பிள்ளையார் கோயிலடி கூட்டத்தால் நிறைந்திருந்தது புளிய மரத்தில் ஊஞ்சல் உயர எழுந்து நீட்டுப் பாவாடைகள் காற்றில் பலவண்ணமாய் விரிந்து அழகு காட்ட விசயண்ணா கொப்பி வைத்துக் கொண்டு ஊஞ்சல் பாட ஒரு பக்கம் தவமணியும் மறு பக்கம் தனலட்சுமியும் உச்ச ஊஞ்சல் உச்சத்தை தொட்டு முகில் நாடி அச்சத்தை தர ஆடும் ஊஞ்சலும் இசையுமாய் எழில் காட்டி நின்றது.

பலர் கைதட்டி மகிழ நடுவில் இருந்த இந்திராணி "தலைய சுத்துது உச்ச்சிறத நிப்பாட்டுங்க " என கத்த தயாளமும் வீரிட்டாள் உச்சுதல் வேகம் குறைய பாய்ந்திறங்கினாள் இந்திராணி .தயாளமும் தாவிக் குதித்தாள்.ஓடி வந்து ஏறினார்கள் சூரியமும் ,சியாமளாவும். ம் ஊஞ்சல் பாடலும் கையொலியுமாக உயரங்களை தொட்டு வந்து உற்சாக ஒலியயை ஆடும் அவர்களை ஊக்கப் படுத்த பூபதியார் நல்ல தங்காள் ஊஞ்சல் பாடலை பாடத் தொடங்கினார் பெண்கள் அதிக அளவில் கூடத் தொடங்கினர் .பூபதியாரின் கதை தழுவிய ஊஞ்சல் பாடல்களை கேட்க.

ஊஞ்சல் ஆடும் போது கயிறும் பலகையும் இறுகி எழுப்பும் முறு முறுப்பான ஒலி இசையின் இடை வெளியயை நிரப்ப ஊஞ்சல் பாடலில் ஊரே மயங்கிக் கிடந்தது.ஆட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப பாடலின் வேகமும் மாறி மாறி தரு சொல்லும் கூட்டுக் குரலால் அந்த இடம் முழுவதையும் நிறைத்து ஊரின் நாலாபுறமும் இசையின் நாதத்தை எகிறி ஒலிக்க செய்ய இன்னமும் கூட்டம் அதிகமாகியது .

தரு சொல்லும் பெண்கள் ஒரு தாள லயத்துடன் ஊஞ்சல் இசைக்கு மெருகு சேர்க்க வானம் வரை நீண்டு செல்லும் ஊஞ்சலுக்கு உணர்வு மொழியாய் அமைய சித்திரை ஊஞ்சல் நெஞ்சம் நிறை பொழுதாய் நீண்டது.
"தன தன தானினோம் தான
தன தன தானினோம் தான
தான தனா தன தான தனா தன
தானே தானே ஏ ஏ ஏ
என அரியமலர் தொடங்க பின்னணியில் எல்லோரும் தருவை சத்தமாக பாட ஊஞ்சல் உயர பாய்ந்து மேலேறி கீழ் இறங்கி சரிந்து கவிண்டு சாகசம் பலகையாய் ஊஞ்சல் பலகை ஒய்யாரமிட்டு ஓயாத நீட்டத்தைப் பெற
இன்னொரு தருவை சிவலிங்க நாயகி இசைக்க லேகாவும் சேர்ந்து பாடத் தொடங்கினாள்

" தந்தன தான தன தான தந்தினா
தந்தன தானானா ஆ ஆ ஆ
தந்தன தான தன தான தந்தின
தந்தன தானானா ஆஆஆ ஆ"

அங்கிருந்தோர் இசையிலும் ஊஞ்சல் ஆட்டத்திலும் மயங்கிக் கிடக்க
ஆசையம்மா தேத்தண்ணியுடன் வர காளியாச்சி ஒரு பெட்டி நிறைய பலகாரங்களுடன் வந்தார்.முத்தான் ஆத்தையும் அவ்விடம் வர கூடவே தெய்வானப் பிள்ளை, மாரிமுத்து என் சுற்றி வரையுளோர் ஒரு சேர கூட பூபதியார் கண்டி ராசன் கதையயை ஊஞ்சல் பாடலாய் பாடத் தொடங்க ஊரே அவர் இசையில் மயங்க ஊஞ்சல் ஓடம் ஒன்று கடலில் அலைகளிடையே பயணிக்கும் அழகிய படகு போல ஆடிக் களித்தது என்றே சொல்லலாம்.
ஊஞ்சலாட்டம் முடிந்து சித்திரையாள் செந்தமிழ் இசையால் குழித்து செழித்து நின்ற அந்த மாலைப் பொழுது மற்றொரு மகிழ் விளையாட்டுக்காய் காத்துக் கிடக்க பூத்துக் கிடந்த பன்னீர் மரத்தடியில் பாலசிங்கத்தாரின் வரவு இன்னொரு போருக்கு கட்டியம் கூறி நின்றது.

சித்திரைக் கொண்டாட்டத்தின் சிறப்புக்கு சிறப்புச் சேர்க்கும் போர்த்தேங்காய் அடித்தல் ஊரவர் கூடி நிற்க அரங்கேறும் அதிசய பொழுது அது.
ஊரிலுள்ள பெரும்பாலோர் கூடி விடுவர் அந்த அந்திப் பொழுதில் வாலசிங்கத்தார் பக்கம்,அருமத்துரையர், அகிலேசர்,சுப்பையர்,நடராஜா,சின்னராசர் கிட்ணதாஸ் என அணி வகுக்கும் கூட்டம்

முதல் போர் மருத நகர் சின்னையர் கூட்டத்தோட ஆரம்பமாக இருந்தது சின்னையரோட பக்கியதுர் செல்லையர் ,பரமசாமி,வேல்முருகு என அணி சேர்ந்து நிக்க .
முதல் தேங்காய வாலசிங்கத்தார் வைக்க சின்னையர் தான் வைத்திருந்த கையான் காலித்தேங்காயை அடிக்க வாலசிங்கத்தார் வைத்த தேங்காய் சிதறி சுக்கு நூறாகியது.இது வாலசிங்கத்தார்ர தந்திரம் சின்னையர் சந்தோசத்தில் கை விளையாட்டுப் போட்டு தன்ர காய தரையில் வைக்க வாலசிங்கத்தார் ஓங்கி அடிக்க அது சறுக்கி பார்த்து நின்ற ஒருவரின் காலை பதம் பார்த்தது.
மாறி மாறி தேங்காய்கள் சிதற இரு பக்கமும் ஆரவாரமும் கை தட்டலுமாக வேகம் எடுக்க பாலசிங்கதார் சிங்கமென சீறி தேங்காய்களை சிதறடிக்க அவர் முன் வந்த எல்லாக் குழுக்களும்.சிதறு தேங்காய் போல தோல்வியத் தழுவ உடைந்த தேங்காய்கள்.மலையென குவிந்தது.

காலித் தேங்காய் பெரிய வளவுத் தேங்காய் ஊற்றடித் தேங்காய் வள்ளிலேணித் தேங்காய் என எல்லா போர்த் தேங்காய்களும் மோதிக் கொண்ட அந்த்த காட்சிகள் போர்த் தேங்காய் அடித்தல் நிகழ்வின் சிறப்பை உணர்த்தி நின்றன.
Image may contain: tree, plant, sky, outdoor and nature
மாலை செவ்வானமாய் கோலம் காட்டும் நேரம் விதானையார் கட்டைபறிச்சானிலிருந்து ஒரு கூட்டத்துடன் வந்து சேர்ந்தார் "மச்சான் எல்லாரையும் நீ தோற்கடிச்சுப் போட்டது சரி என்ன வெல்லு பாப்பம் என்று ஒரு தேங்காய சுத்தி நிறுத்தினார் பணிவு வளவு கையான் காயால் பதம் பார்த்த சிங்கத்தார் ஒற்றையடியில் விதானையாரின் காயை அடித்து நொறுக்கினார்.
விதானையாரும் மாறி சிங்கத்தார்ர தேங்காய்களை சிதறடிக்க வெற்றி மாறி மாறி இருவர் பக்கமும் வந்து போக ஆரவாரமும் மாறி மாறி ஒலிக்க ஒருவரை ஒருவர் மிஞ்சாத விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது .
இறுதியில் எறி தேங்காய் விடுதல் என முடிவாகி காய்களை எறித அவை நடு வழியில் மோதி உடைந்து சிதற சிலவேளைகளில் இருவரது தேங்காய்களும் ஒன்றாகவே நடு வழியில் அடிபட்டு உடைந்து விழும் காட்சி வாண வேடிக்கையயை போல இருந்த்தது.
இறுதியில் சிங்கத்தாரே ஜெயிக்க அருமைத்துரயர் பாலசிங்கத்தாரை தோழில் தூக்க கூட்டம் அவர் வீடு நோக்கி ஆரவாரத்துடன் சென்றது

ஊர் தந்த உத்தமன் ஊருக்கோர் உபகாரி அஞ்சலி திருமிகு.குமரேசபிள்ளை.கனகசிங்கம்

ஊர் தந்த உத்தமன்
ஊருக்கோர் உபகாரி
அஞ்சலி
திருமிகு.குமரேசபிள்ளை.கனகசிங்கம்


சேனையூர் பெற்றெடுத்த சிறப்பு மிகு சேவையாளன் என் நெருங்கிய உறவினன் சின்னப்பு என அழைத்து சொந்தம் கொண்டாடி என் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் பண்பாளன்.
ஊரோடும் உறவுகளோடும் எல்லையிலா அன்பும் ஆதரவும் கொண்டு மக்கள் உணர்வுகளை மதித்து சேவை செய்த பண்பாளன்.கடமையயைச் செய் பலனை எதிர் பாராதே என ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய உத்தமன் .எதையும் அறிவார்ந்த கண்ணோட்டத்துடன் பார்த்து பகுத்து அறியும் சிந்தனையாளனும் கூட.

ஊரில் என்ன நடந்தாலும் அவர் தரிசனம் அங்கிருக்கும்
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் ஆலைய பரிபாலன சபை
சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம்
சேனையூர் கும்பத்து மால் சபை
சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம்
சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம்
என்பனவற்றின் தலைவராக இருந்து சிறப்பான பணியாற்றி ஊரின் வளர்ச்சியில் மிகுந்த நாட்டமுடன் உழைத்தவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் பெற்றார் ஆசிரியர் சங்க செயலாளராக பதவி வகித்து பாடசாலையின் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றவர்.
சமூக சமய சேவையாளனாக மட்டுமல்லாமல்
பல் துறை ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவர்

சிறந்த கரப்பந்தாட்ட வீரன் எதிர் முகாமில் இருக்கும் வீரர்களை கதிகலங்க வைக்கும் வியூகங்களை தன் விளையாட்டால் சாதித்து காட்டியவர்.சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணம் வரை சென்று வெற்றிகளை குவிக்க காரணமாகியவர்.
சிறந்த சிந்தனையுடனான சொற்பொழிவுகளுக்கு சொந்தக்காரன்.
பாரம்பரியக் காவியப் பாடல்களை இயற்றும் திறன் மிக்கவர் .இவர் இயற்றிய சேனையூர் முத்து மாரியம்மன் பாடல்கள் இசை வடிவம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

வட்ட விதான் எனும் விவசாய வாழ் நிலை பதவியில் வளமான வாழ்வுக்கு வழி காட்டியவர்.

பதவிகளால் இவர் சிறப்பு பெறவில்லை பதவிகள் இவரால் சிறப்புப் பெற்றன.
மிகச் சிறந்த விவசாயி குடும்பத்தின் மீது நேசிப்பு நிறைந்தவர் மற்றவர்களுக்கு உதவும் இரக்க மனோ பாவமும் இவர் வாழ்வுக்கு சிறப்பு சேர்த்த விடயங்கள்.
வர்ணகுல மரபு எனும் என் ஆராய்ச்சி தொகுப்பு நூல் வெளிவர இருக்கிறது என கதைக்கும் போது சொல்லியிருந்தேன் அந்த நூலை வாசிக்க ஆவலாய் இருந்தீர்கள் இன்று அந்த நூல் விரைவில் வெளி வரவிருக்கிறது.நூலைக் காண நீங்கள் இல்லை. உங்களுக்கு அந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
இன்முகம் மாறா புன்னகை எப்போதும் என் நெஞ்சில்
போய் வாருங்கள் சின்னப்பு உங்கள் புன்னகைக்கு மட்டுமே விடை தருகிறேன்

என் மகள் அனாமிகாவின் 28 ஆவது பிறந்த நாள்

என் மகள் அனாமிகாவின் 28 ஆவது பிறந்த நாள்


மகளே 28 வருடங்கள் கடந்து போன அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன் 17.04.1990 -17.04.2018

வசந்தப் பூவாய்
வந்துதித்த பொன் குஞ்சு
உன்
பூவிதழ் திறந்து
புன்னகை காண
காத்திருந்த அந்த பொழுது
சின்ன வாய் திறக்க
நான்
சிலிர்த்த நேரமது
உன் மெய் தீண்டி
அணைத்தெடுத்து
ஆரமுதாய்
என் வசந்தத்தின்
வரவாக
உலகத்து சந்தோசங்கள்
ஒரு சேர
நீ தந்தாய்

பெருங் காதல்
பேரழகி
வருங் காலமெல்லாம்
என் வாழ்வோடு
இணைந்தவளே
நீயில்லை என்றாலும்
உன்
நினைவோடு வாழ்கின்றேன்
என் தாயாக
தமிழாக
என்னோடு
பயணத்தின் மொழியாய்
சேயில்லை
தெய்வமடி நீ எனக்கு

உலக புத்தக நாள் சித்திரை 23 நான் அறிந்த முதல் புத்தகம் என் அம்மா

உலக புத்தக நாள் சித்திரை 23

நான் அறிந்த முதல் புத்தகம் என் அம்மா திறக்க திறக்க புதிய புதிய விசயங்களை அறிய முதல் கருவும் உருவும் அவர்தான் .வாசிப்பின் மூச்சை அவரிடமிருந்துதான் நான் பெற்றேன் புத்தகத்தின் வாசம் அவர் தந்தது .
என் குழந்தைப் பருவத்தில் வீட்டு வேலைகள் தவிர்ந்த மற்ற நேரமெல்லாம் அம்மா கையில் ஒரு புத்தகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் எனக்கு புத்தகங்களின் மீதான பிரியம் அவரிடமிருந்து வந்ததுதான்.
அரிவரியில் பால போதினியயை அழைந்து அதனுள் மூழ்கிய அந்த நாட்கள் இன்னமும் அப்படியே என்னுள் புதைந்து கிடக்கும் சந்தோசத்தின் குறியீடாய் அது எப்போதும்.
கொஞ்சம் வகுப்புகள் மாறி மாறி ஒரு ஐந்தாம் வருடம் கற்கிற போது எல்லாவற்றையும் வாசிக்கும் ஆர்வம் அப்போதுதான் அம்மா எட்டாம் வகுப்புவரை படித்த ஆங்கில மொழி மூல புத்தகங்கள் அவற்றை புரட்டித்தான் பார்க்க முடிந்த்ததே தவிர வாசிக்க முடியவில்லை.
ஆறாம் வக்குப்பு படிக்கும் போது நான் தீவிர வாசிப்பாளனாய் மாறியிருந்தேன் அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி இல்லை வானொலியும் ஒரு சிலரிடம்தான் இருக்கும் அன்றைய பொழுது போக்கு வீடுகளில் பெரிய எழுத்து மகா பாரதம் படித்தல் எட்டு கட்டு மகா பாரதம் .
எங்கள் சிற்றம்பலம் மாமா வீட்டில் அது முழுமையாக இருந்தது நான் கறுத்த மாமி என்று சொல்லும் செளந்தரம் மாமி அவர்கள் வீட்டில் வாங்க்க் வந்து மாலை நேரங்களில் நான் வாசிக்க அம்மம்மமா உட்பட சுற்றியிருந்து சுவைக்கும் அந்த நாட்கள். இது அன்று எங்கள் ஊரில் பல வீடுகளில் நடந்த கதை கேட்கும் மரபு.
பெரிய எழுத்து மகா பாரதக் கட்டு புத்தகங்கள் அப்போ பலரிடம் இருந்தன எனக்கு அந்த புத்தகங்களில் கீறப்பட்ட படங்களை பார்த்து பார்த்து ரசிப்பது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது குறிப்பாக யுத்த பர்வ படங்களிலேயே என் நாட்டம் இருந்ததமை குறிப்பிடத் தக்கது.அந்த ஓவியங்கள் தஞ்சாவூர் பாணியயை பின்பற்றி இருந்தமையும் இங்கு மனம் கொள்ளத் தக்கது.
அடுத்த கால கட்டத்தில் சிறிய துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் வாசகனாய் மாறுகிறேன் பி.டி.சாமி போன்றோரது கைக்குள் அடங்கும் புத்தகங்கள்.மிகவும் விறு விறுப்பான அனுபவம் வாசிக்கும் போது நாமே துப்பறிவாளனாய் மாறும் வாசிப்பில் உள் நுழைவு.
கனகசிங்கம் மாமா சின்ன மாமா மூலம் வாசிப்பாய் உள் வந்து பகுத்தறிவை தந்த பெரியார்,அண்ணா,கலைஞர் நூல்கள் ஆரிய மாயயையும் தூக்கு மேடையும் கனலாய் தெறித்த புதிய திராவிடத் தமிழ்.
அடுத்த ஒரு கட்டத்தில் தமிழகத்து வார மாத சஞ்சிகளில் மூழ்கிப் போனமை அம்புலி மாமா,ஆனந்த விகடன் ,கல்கி குமுதம்,ராணி பேசும் படம் ,பொம்மை என எல்லாவற்றையும் வாசித்தமை இன்றும்தான்.
எங்கள் கிராம சபை நூலகத்துக்கு எழுபதுகளில் மாஸ்கோ முன்னேற்ற பதிப்பக நூல்களும் சோவிதத் நாடு தமிழ் பதிப்பும் கட்டு கட்டாக வரும் லெனினும் மாக்சும் ஏங்கல்சும் என் கண்களுக்கு விருந்தானார்கள் பின்னர் சிந்தைக்கும் .அதே போல இன்றைய சீனா வண்ணப் படங்களுடனும் மா ஓ வின் நூல்களும் கடுமையான மொழி பெயர்ப்புகளாக இருந்தாலும் கருத்தூன்றி வாசித்தேன்.
சரித்திர சமூக நாவல்களில் மயங்கியமை சாண்டில்யனும் ,அகிலனும்,கல்கியும் ,ஜெகசிற்பியனும் ,பார்த்தசாரதியும் மு.வவும் பின்னர் ஜெயகாந்தனும் என் வாசிப்பில் நீண்ட அந்த நாட்கள் .
பல்கலைக்கழகம் நூல்கள் பற்றிய வாசிப்பை மேலும் அகலிக்க வைத்தது ஜெயகாந்ரனும் ,ஜானகி ராமனும் என்னுள் புகுந்த நாட்கள். ஆராய்ச்சி நூல்களில் முகத்தை புதைத்து கிடந்த நாட்களும் அவைதான்.கைலாசபதியும்,சிவத்தம்பியும் வித்தியானந்தனும் என்னுள் குடி கொண்ட நாட்கள் அவை.
கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக என் காலம் தொடங்கிய பின் கலை நாடி கலை செய்யும் கலைஞனாய் நாடகம் கலை தொடர்பான நூல்களுக்குள் என்னை புதைத்து தேடலும் திரட்சியுமாய் கனிந்த வாசிப்பு.
சேக்ஸ்பியரும் ,இப்சனும்,மாக்சிம் கார்க்கியும் ,இதன் வழி இன்னும் பல நூறு ஆளுமைகளை அவர்கள் எழுத்துக்களை என்னுள் செரித்த அந்த நாட்களும் என் வீட்டு நூலகமும் நானும்
புத்தகங்களை தேடி மூதூரில் அன்றுள்ள எல்லா நூலகங்களுக்கும் சென்றிருக்கிறேன் சேனையூர் சிறி கணேசா சன சமூக நூல் நிலையம்,கட்டைபறிச்சான் கிராம சபை நூல் நிலையம் ,சம்பூர் கிராமசபை நூல் நிலையம் ,மூதூர் பட்டினசபை நூல் நிலையம் ,மல்லிகைத்தீவு கிராம சபை நூல் நிலையம் திரிகூடத்தில் வ.அ. அவர்களது நூலகம் அதிலிருந்து இலங்கையெங்கிலும் பல இடங்களிலும் நான் பார்த்த பல நூல் நிலையங்கள் இன்று உலக நாடுகளில் உள்ள பல நூலகங்கள் உலக புத்தக நாளில் நம் முகமாய் உள்ளது.
இன்று நானே நூல்களை ஆக்கும் எழுத்தாளனாய்.

ஊரகப் பேரொளி மண்ணின் மரபோடிணைந்த ஆடல் வடிவங்களின் ஆற்றுகை விழா

ஊரகப் பேரொளி
மண்ணின் மரபோடிணைந்த ஆடல் வடிவங்களின் ஆற்றுகை விழா


கடந்த 21.04.2018 பிரான்சின் பாரிஸ் நகரில் ரி.ரி.என் தொலைக்காட்சியின் ஊரகப்பேரொளி விருதுக்கான போட்டி நிகழ்வாக இந்த ஆடல் ஆற்றுகை விழா ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது .முழுக்க முழுக்க கிராமிய ஆடல் வடிவங்களின் சங்கமமாக இது வடிவமைக்கப் பட்டிருந்தது.இந்த விழாவின் பிரதம விருந்தினராகவும் பிரதம நடுவராகவும் நான் அழைக்கப் பட்டிருந்தேன்.
கீழ் பிரிவு,நடுவண் பிரிவு,மேல் பிரிவு ,உயர் பிரிவு என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நிரல் படுத்தப் பட்டிருந்தன மொத்தம் 35 ஆடல் அளிக்கைகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்டது பாராட்டு பரிசளிப்பு என 10.30 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற சந்தோசம் மிக்க ஒரு நாளாக அது அமைந்தது.

காவடி,கரகம்,பறையாட்டம்,கோலாட்டம்,குறத்தி நடனம்,மீனவ நடனம்,மயில் நடனம் ,பாம்பு நடனம் ,உழவர் நடனம் ,சிலம்பாட்டம் என பரத நாட்டிய முத்திரைகள் கலக்காத நம் மண்ணின் மரபுக் கலைகளின் எழுச்சி நிகழ்வாக இது அமைந்தது.

பங்கு பற்றிய இளம் மாணவர்களும் மாணவிகளும் பிரான்சிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள் கலைகள் பற்றிய அறிதலும் புரிதலும் உள்ளவர்கள் என்பதை அவர்களோடு உரையாடிய போது அறிய முடிந்தது.

ஆடல் அளிக்கைகள் யாவுமே தீவிர பயிற்சியின் முதிர்வும் தேற்சியும் வெளிப்பட்டு நின்றது.நம்மை அசர வைக்கும் ஆட்ற் கோலங்களாக அவை அமைந்திருந்தன ஆசிரியர்களின் உழைப்பு பளிச்சென தெரிந்தது பெற்றோரின் ஒத்துழைப்பும் இவ் ஆடல் வடிவங்களின் அழகியல் வெற்றிக்கு உறுதுணையாய் தொழிற் பட்டிருந்தமையயை தெளிவாக உணர முடிந்தது.
எவ்வளவு வகையான ஆட்டக் கோல வேறு பாடுகளை மிக லாவகமாக செய்து காட்டியமை அந்த ஆடல் வடிவங்களின் தனித்துவத்தை வெளிப் படுத்தி நின்றன .ஒவ்வொரு குழுவினரும் மற்றய குழுவினருக்கு மிகச் சிறந்த போட்டியை கொடுத்திருந்தார்கள் யாரும் இலகுவாக பரிசை தட்டி செல்லாத அளவுக்கு ஒருவரை ஒருவர் மிஞ்சாத ஆடல்.

ஆடலில் அவர்களது நிபுணத்துவம் மிகச் சிறந்த வெளிப்பாடாய் அமைந்தது பல்கலைக் கழக பட்டப் படிப்பில் ஆடற்கலையை ஒரு பாடமாக படிப்பவர்களுக்கு சவால் விடும் ஆடல் அளிக்கைகளாக முதிர்ந்த ஞானத்தை வெளிப்படுத்தி நின்றன ஊரகப்பேரொளிக்கான இந்த ஆடல் நிகழ்வுகள்.நம் மண் சார்ந்த கலைகளுக்கான நம்பிக்கை ஒளி என்றால் அது மிகையாகாது.
புலம் பெயர் வாழ்வில் இன்னும் பல தலை முறைகளுக்கு நம் ஆடற் கலைகளும் கலாசார கலை மரபும் பழுதில்லாமல் பயணிக்கும் என்ற ஓர் உறுதியின் வெளிப்பாடாய் இந்த நிகழ்வு அமைந்தது.
இந்த ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் .ரி.ரி.என் தொலைக்காட்சி குழுமத்தினர் அதன் உறுப்பினர்களின் அயரா உழைப்பின் விழைவின் அறுவடை இந்த நிகழ்வு எல்லோருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நம் ஊர்கள் தோறும் நம் மண்ணின் கலைகள் இசையாகவும் இசையோடு இணைந்த ஆடல் வடிவங்களாயும் மக்கள் வாழ்வோடு இணைந்து கிடக்கிறது அவற்றின் வீச்சும் அவை நம் பண்பாட்டு கோலங்களாய் விரவி நிற்கும் செழுமையும் காலம் காலமாய் தொடரும் மரபுகள்.

நம் மண்ணின் கலைகளான இழுவைக் காவடி,ஆட்டக் காவடி,வசந்தன் ஆட்டம்,கொம்பு விளையாட்டும் அதனோடு இணைந்து வரும் ஆடலும் இசையும்,காத்தவராயன் கும்மி,மாரியம்மன் நடை,கும்ப ஆட்டம் ,ஊஞ்சல் இசை,கோலாட்டம்,களி கம்பு,கண்ணகியம்மன் காவியம்,
உலகம் முழுவதும் இத்தகைய நம் மண்ணின் ஆடல் வடிவங்கள் ஆற்றுகை விழாக்கள் நடத்தப் பட வேண்டும்.

பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்

திருகோணமலை தாமோதரம் பிள்ளை சாத்திரியார்

திருகோணமலை தாமோதரம் பிள்ளை சாத்திரியார்


திருகோணமலையில் வாழ்ந்த ஒரு ஒரு புலமைத்துவ திறன் கொண்டவர் பன் முக ஆற்றல் மிக்கவராக இருந்தாலும் எல்லோராலும் சாத்திரியார் எனவே அழைக்கப் பட்டார் .
பெரிய கடையயை வாழ்விடமாக கொண்டும் பின்னர் வீச்சுக் காரத் தெருவிலும் தொடர்ந்து மனையாவெளியிலும் வாழ்ந்து தன் ஆற்றலால் திருகோண மலை நகரம் முழுவதும் எல்லோராலும் அறியப் பட்டவர்.

அன்றைய நாட்களில் பிறந்த குறிப்பு எழுத இவரையே அழைப்பர் .இவர் ஒரு புலவரும் கூட கோணேசர் மீது பல பாடல்களை எழுதியிருக்கிறார் ஆனால் அவை எல்லாம் வெளி வராமலேயே மறைந்து போயிற்று.
பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் நீண்ட தாடி ஒரு ஞானியயை போன்ற காட்சி சோமசுந்தரப் புலவரை நினைவு படுத்தும் ஒரு அறிவின் சுடர் தெரியும் முகம் .

என் பிறந்த குறிப்பும் இவரே எழுதியதாக அம்மா சொல்வார்.என் அம்மாவின் பெரிய அப்பா இவர் வீரகத்தி.தாமோதரம் பிள்ளை திருகோணமலையின் மூத்த குடி வழி வந்த ஒரு அறிஞர் எனக் கூட இவரை சொல்லலாம்.
அவர் வாழும் காலம் வரை கஞ்சனம்மானை ஏடு படித்து வீட்டில் பொங்கல் பொங்கும் மரபை கொண்டிருந்தவர்.
தமிழ் மொழி இலக்கணம் இலக்கியம் நன்கு அறிந்தவர்.
நான் சிறு குழந்தையாக இருக்கும் போது தன் மடியில் என்னை தூக்கி வைத்திருக்கும் போது இவன் ஒரு பெரும் அறிஞனாய் வருவான் எனக் கூறியதாக அம்மா சொல்வார்.

அவருடைய இரு புதல்வர்களும் தங்கள் துறைகளில் கெட்டித்தனம் உள்ளவர்களாக இருந்தனர் மூத்தவர் துரை ஆங்கிலேயர் காலத்து நேவியில் பணியாற்றியவர்.மற்றவர் மாணிக்க ராஜா ரெயில்வேயில் பணியாற்றியவர்.மிகச்சிறந்த உதை பந்தாட்ட வீரர் திருகோணமலை உதை பந்தாட்ட கழகத்துக்காக விளயாடியவர் சவுதி அரேபியா வரை சென்று விளையாடி திருகோணமலை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்

அனைத்துலக ஆடல் நாள் 29.04.2018

அனைத்துலக ஆடல் நாள்
29.04.2018



இன்று உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடாட்டங்களால் நிறைந்திருக்கும் நேரத்தில் தமிழில் ஆடல் வடிவமும் அதன் வரலாறும் பற்றி சில சேதிகளை சொல்ல ஆசைப் படுகிறேன்.
பரதம் பரதர் பற்றி இன்று நிறையவே பேசப் படுகிறது.நாட்டிய சாஸ்திரம் புராணங்களோடு தொடர்பு படுத்தப் பட்டு ஐந்தாம் வேதம் எனவும் கொணாடப் படுகிறது.


கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தது என்று ஒரு சாராரும் கி.பி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுக் காலகட்டம் என இன்னொரு சாராராரும் வரலாற்றுப் போர் நடத்தினாலும் எது எப்படி இருந்தாலும் இந்திய மரபில் நாடகத்தின் தோற்றம் அதன் கூறுகள் பற்றியும் இசையும் ஆடலும் நாடகத்தில் பெறும் முக்கியத்துவம் பற்றியும் பேசுகிறது.நாட்டிய என்பது கதை தழுவிய நாடகமே .என்பதை தெளிவாக சொல்லும் நூல் உண்மையில் உலக அரங்க வரலாற்றில் அரங்கு பற்றிய மிகப் பழமையான நூல் நாட்டிய சாஸ்திரம் என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது .மேலைத் தேய மரபில் அரிஸ்ரோற்றில் பற்றி கூறினாலும் அவரது எழுத்து ஆங்காங்காங்கே கூறியவற்றின் தொகுப்பேயாகும்.


தமிழில் அழிந்து போன நாடக ஆடல் முறைகள் பற்றிய நூல்கள் பற்றிய தகவல்கள் அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
"கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளதாக டாக்டர் மு.வ. தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிடுகிறார். அவ்வாறே கடைச் சங்க காலத்து சேறை அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் நாடகத் தமிழ் குறித்துக் கூறுகின்றது. அந்நூலும், பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட இருநூல்களுமே பழந்தமிழ் நாடக மரபுகளைப் புலப்படுத்துகின்றன. மேலும், அந்நூல்கள் பழங்காலத்தில் சிறந்த நடிகர்கள், கூத்தர், விறலியர், பொருநர் என்ற சிறப்புப் பெயர்களோடு விளங்கிப் புகழ் பெற்றார்கள் என்பதையும் காட்டுகின்றன. இன்றும் தமிழுக்கு உயிர் நாடியாக விளங்கக் கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பழந்தமிழ் நாடகக் கலையினை உலகிற்குப் பறைசாற்றுகின்றன."


தமிழ் மரபிலிருந்தே நாட்டிய சாஸ்திரம் உருவாகுவதற்கான மூல நூல்கள் இருந்துள்ளன என்பதை அண்மைய ஆய்வுகள் நிருபிக்கின்றன.
Image may contain: 1 person, on stage and indoor நாட்டிய சாஸ்திரம் சொல்லுகின்ற் எந்த ஒரு ஆடல் வகையும் வட நாட்டில் இல்லை கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் ஏனைய தென்னிந்திய மானிலங்களிலுமே அதற்கான தொடர்ந்த பயில் நிலை வளர்ச்சியயை நோக்க முடிகிறது தமிழ் நாட்டு சதுராட்டம் அதுவே பின்னர் பரத நாட்டியமாக கட்டமைக்கப் படுகிறது.
கேரளாவின் கூத்தம்பலங்கள் நாட்டிய சாஸ்திரம் சொல்லும் அரங்க கட்டுமானத்தின் மாதிரிகளாக உள்ளன.கூடியாட்டம் நாட்டிய சாஸ்திர மரபின் வழி வந்த ஆடல் வடிம் என பல உதாரணங்களினால் நிருபிக்க முடியும்.


Image may contain: sky, house and outdoor

நாட்டிய சாஸ்திரம் சொல்லும் ஆங்கிகா,வாசிகா,ஆகாரிகா,சாத்விகா அபினயங்கள் தென்னாட்டு ஆடல் வடிவங்களுக்கே பொருந்தி வருகின்றன.
Image may contain: one or more people முத்திரைகள் அபிநயங்கள் பற்றி விரிவாகவே விளக்கங்களை தருகிறது நாட்டிய சாஸ்திரம் நூற்றியெட்டு கரணங்கள் பற்றியும் பேசுகிறது. கரண முத்திரை சிற்பங்கள் தமிழ் நாட்டிலேயே உள்ளன வட இந்தியாவில் இல்லை என்றே சொல்லலாம் அத்தோடு சோழ மன்னர்கள் நிர்மாணித்த கம்போடிய ஆங்குர் கோயிலிலும் கரண முத்திரை சிற்பங்கள் உள்ளன .
No automatic alt text available.
இந்த பின்னணியில் வைத்து பாற்கும் போது தமிழ் மரபிலிருந்து உருவானதே சமஸ்கிருத நாட்டிய சாஸ்திரம்.
தமிழ் நூல்களின் தழுவலே நாட்டிய சாஸ்திரம்
பரதமுனி என்பது கூட்டுழைப்பின் வடிவம்.


நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி