வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 4 February 2021

என் தமிழ் ஆசான் இலக்கிய கலாநிதி.வ.அ.இராசரெத்தினம்

1.தமிழால் கட்டுண்டேன்
பாலசுகுமார்
2020 ஆம் ஆண்டு நான் எழுதிய  முக நூல் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும்
95ஆவது அகவையில் எங்கள் இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்.


என் தமிழ் ஆசான்
சேனையூர் மத்திய கல்லூரியில் பிரதி அதிபராக க.பொ.த உயர் தரத்தில் தமிழ் ஆசானாக கடமையாற்றிய காலங்களும் , எங்கள் சேனையூரின் நீங்கா நினைவுகளில் அவர் மனைவி லில்லி அக்காவும் அவர்கள் குடும்பமும்.
என்பை வாசிக்க தூண்டிய எழுதத் தூண்டிய எழுத்துச் சித்தன் அவன்
ஈழத்து இலக்கிய உலகின் தனித்துவ தடம் பதித்த எங்கள் வ.அ
நவீன ஈழத்து தமிழ் இலக்கியம் தன் மண் சார்ந்த மரபின் முகமாய் வெளிக் கிளம்பியது எங்கள் எழுத்துச் சித்தன் வ.அ.வில் இருந்து என்றே சொல்லலாம்.சாதாரண மக்களின் வாழ்வு இலக்கியமாகியது நம் சக மனிதர்கள் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அவரால் உலா வந்தார்கள்.
கொட்டியாரத்தின் அழகையும் அதனோடு சேர்ந்த சமூக முரண்பாடுகளையும் தனக்கே உரிய எள்ளல் நடையுடன் எடுத்தியம்பிய எங்கள் எழுத்தன்.
தான் வாழ்ந்த சூழலை எழுத்தில் படம் பிடித்த மண் மணம் மாறா எழுத்தை எமக்களித்த மண்டியிடாத யாருக்கும் தலை வணங்காத எழுத்தாளனுக்கே உரிய கர்வத்தோடு கடைசி வரை தன் வாழ்வை கொண்டாடிய மகா ஆளுமை அவர்.
முற்போக்கு என்று பேசாமலேயே முற்போக்கு மிக்க கருத்துக்களை தன் எழுத்துக்களில் உலவ விட்ட உன்னதமான கதை சொல்லி.
தோணியும்,துறைக்காரனும்,சந்தானாள் புரவியும்,ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறதுவும் கிரவுஞ்சப் பறவைகளும்,கொழு கொம்பும் இன்னும் நூற்றுக் கணக்கான சிறுகதைகளும் வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும் என அவர் எழுத்து நம் முன் கொட்டிக் கிடக்கிறது.
அவர் எழுத்தில் மூதூரும் கொட்டியாரத்தின்  பல கிராமங்களும் தம்பலகாமமும் ஆலங்கேணியும் என வாழ்வின் வாசத்தை அதன் முரண்களை சொல்லும் திறனில் இலக்கியங்களாய் நாவலாயும் சிறுகதையாயும் வெளிப்படுத்திய எவர் விமர்சனத்தையும் பொருட்படுத்தாத தன் எழுத்தில் நம்பிக்கை கொண்டு பயணித்த புதுமை விரும்பி அவர்.
தன் இலக்கிய நினைவுகள் எனும் நூலில் எனக்காகவே ஒரு பக்கத்தை ஒதுக்கி எழுதி இருப்பார் தன் இலக்கிய வாரிசாக என்னை அதில் பிரகடனப் படுத்தியிருப்பார்.
அவர் பிரகடனத்தை  நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேனா?தொடர்கிறேனா என்னுள் எப்போதும் இந்தக் கேள்வி  .........
கடந்த ஆண்டு என் முதல் நாவல் "கொடி எழு அன்னப் புரவி" முதல் சிறுகதைத் தொகுதி "கறுப்பி" ஆகியன வெளி வந்தது.பல சிறுகதைகளை எழுதி முடித்துள்ளேன் தம்பலகாமத்தை மையமாக வைத்து "செவ்வந்தி" எனும் நாவலும் எழுதி முடித்து கைகளில் உள்ளது பல சிறு கதைகளும் அவ்வப்போது எழுதுகிறேன் .இரண்டு கவிதைத் தொக்குப்புக்கள் பல நூறு கட்டுரைகள் இன்னும் பல நூல்கள் என என் எழுத்து தொடர்கிறது.
 நான் எழுதும் சிறுகதைகளும் ,நாவல்களும் என் ஆசான் வ.அ.காட்டிய இலக்கிய நயத்தின் வழியே பயணிக்கிறது.அவர் தாழ் பணிகிறேன் அவர் பிறந்த நாளில்


Yogananthan Kanakasooriyam
மூதூரில் பிறந்து நாவல்,சிறுகதை மூலம் மண்ணிற்கு புதிய அடையாளத்தைத் பெற்றுத்தந்த மாமனிதன் அவரிடம் சில நாட்கள் தமிழ் கற்கக் கிடைத்தது.பெரும் பேறே ஆத்மா இறையாட்சி பெறட்டும்


Shanmugam Arulanantham
,'ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது'- வ.அ.காட்டிய இலக்கிய நயத்தின் வழியே பயணிக்கிறது.அவர் தாழ் பணிகிறேன்- Thank you Sugumar.

Nageswaran Kumarasami
நினைவில் நிறுத்தியவனாய்.........

Velupillai Thillinathan
மாமனிதர். அவர் மறைவை ஒட்டி the Daily News பத்திரிகையில் எனது இரங்கல் குறிப்பு வெளியானமை ஞாபகத்தில் நிற்கிறது.

Narayanapillai Swaminathan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

Jegatheesan Shandrasegaram
எனது ஆரம்பபாடசாலை கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் எனது அம்மாவுடன் கற்பித்த ஆசிரியர்களில் ஒருவர் (அதிபராகவும் இருந்து இருக்க வேண்டும் ஞாபகம் இல்லை)

Vasanthy Antony
என் தந்தைக்கு கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் முழுமூச்சாக நின்று உழைத்ததை நான் மறக்கவில்லை சுகுமார்.[இறந்த பின்னர்].அவரது பவளவழா மலரில் தங்கள் ஆக்கம் இடம் பெறாதது அவருக்கு வேதனை . அதை உங்களிடம் சொன்னபோது நீங்கள் சொன்ன அதே பதிலை வேறொரு விடயத்திற்கு அப்பா சொன்னார்.அந்தளவிற்கு நீங்கள் அவரது ஆதமார்ந்த மாணவன்.
நன்றி சுகுமார்.
பதில்"வேறொரு புத்தகத்தை எழுதினாற் போச்சு"

Marian Antony Rajaratnam
அவரது எண்ணம் எழுத்தானது செயட்பாடு வாழ்வானது.

     ·

Sabes Sugunasabesan
அவர் எழுத்தில் இருந்த மண் வாசனை இன்னும் நினைவில் இருக்கிறது.
அவருடைய வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.

Gratian Fernando
He is my father’s best friend.

Koneswaran Manickawasagar
பதிவுக்கு மிக்க நன்றி. வாழ்க தம் தமிழ்த்தொண்டு.

     ·

Paiwa Asa
படைப்பாற்றலின் செழுமையில் பிறந்த
தவத்தில் உயர்ந்த படைப்
பாளியின் ஆன்மாவில்
இருந்து ஆன்மாவைப்
பிளந்துகொண்டு வெளிச்சமாக,விடுதலை
யாகப் பிறந்தவை அவரது இலக்கியங்கள்.
கொட்டியாபுர வாழ்விய
லின் பல்வேறு கோலங்க
ளை உயர்கதியில் தாங்கிய எழுத்துக்குச்
சொந்தக்காரன்.
நான் எழுதிக்கொண்டி
ருந்தது அவருக்குத்
தெரியவே தெரியாது.
மூதூரில் வேறு சிலரைத்
தான் கவிஞர்களாகவும்,
எழுதுவார்களென்றும்
கணக்கு வைத்திருந்தார்.
அவரைப் பொறுத்தமட்
டில் நானொரு விளையா
ட்டுப் பேர்வழி மட்டுமே.
என்றும் அவர் என்னோடு
ம், என் எழுத்தோடுமிருப்
பார்.

Leanard Lorenzo
வ.அ. ஈழத்து ஆக்க இலக்கிய புதுமைகளின் முகவரி.
அவர் எழுத்தில் லயித்த போதெல்லாம் நான் நினைப்பது ஒன்று தான் "அவர் இன்னமும் எழுதியிருக்கலாம்!!"

Selvanayagam Srikrishnarajah
.நான் எனது ஆசிரியபதவியை வகிக்கும்போது எனது தமிழ் ஆசான் வ.அ.அவர்களின் மாதிரியைப்பின்பற்றியே தமிழ் மொழி கற்பித்தேன்.எனக்குப்பிடித்தமான விருப்பமான ஆசான் வ.அ.மூதூர் மண்ணின் கிராமங்களின் வாசனையை தனது எழுத்துமூலம் உலாவ விட்ட பெருமகன் அந்நாரின் பிறந்த நாளுக்கு என்வாழ்த்துக்கள்
.ஆசானை நினைவுபடுத்தியபேராசிரியருக்கு நன்றிகள்.


Yogaraja Yoga
மூதூர் மண்ணின் பெருமைமிகு அடையாளம் வ.அ ஐயா.
Marian Antony Rajaratnam
என் தந்தையின் பிறந்ததின நினைவு நாளில் தங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும்,ஆதரவையும் தெரிவித்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

Pragash Selva
மூதூர் மண்ணின் பெருமைமிகு அடையாளம் வ.அ ஐயா.

Tharshega Sundaralingam
எங்கள் மூதூர் மண்ணின் பெ௫ மை மிகு அடை யாளம் ஐயா அவர்கள்
 
Sathyadas Thavarasa
தமிழ் மணி வ.அ.இராசரத்தினம்

Jeya Sunda
ஈழத்து சிறுகதை
நாயகன்.
வேதநாயகம் தபேந்திரன்
நல்லதொரு நினைவுப் பதிவு. பெரியாரை ஒருமுறை மூதூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட முடிந்தது. அப்போது அவரது குடும்பத்தினர் செய்த வரவேற்பு மறக்க முடியாதது.


Ganesh Subramaniam
தமிழ் ஆற்றலும் அறிவும் கொண்ட ஆசான். மூதூர் பகுதியில் பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்.
அவரின் பெருமையை எழுதியதில் மகிழ்ச்சி!
Abdul Malique
நன்றி மறப்பது நன்றன்று.
Ratnakumar Sasikala
I know very well he is my asaiappa's friend (S.Po)

Sithaparanathan Ramesh
அவருடைய தம்பியாரின் பாரதிலேன் வீட்டில் அவரைச் சந்தித்து உரையாடிய தருணங்கள் இன்றும் என் நினைவில் பசுமையுடன் உள்ளன. அவருடைய பொச்சங்கள் புத்தக தினவிழா மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்றபோது அப்புத்தகத்தை அவர் எனக்கு தந்து உதவினார். தலைசிறந்த புனைகதையாசிரியர். மொழி பெயர்ப்பளர் என்பதற்கப்பால் மிக நல்ல இருதயம் படைத்தவர்.

Julian Croos
Great artist and his son will continue

Premila Sugumar
வ.அ என் பெரியப்பா என்பதில் எப்போதுமே கர்வமுண்டு,மட்டக்களப்பு வரும்போதெல்லாம் உரிமையோடு எங்கள் வீட்டில் தங்கி ,இரவெல்லாம் சுகுமாரோடு பேசிக் கழிப்பார்.

2.என் தமிழ்  ஆசான்
பாலசுகுமார்
2017 ஆம் ஆண்டு எனது முக நூல் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும்
இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்  அவர்களின் 92 வது பிறந்த நாள் இன்று 05.06.2017
என் தமிழ் ஆசான் தமிழ் மீதான காதலை ஏற்படுத்தி வாசிப்பு அனுபவத்தையும் பழந்தமிழ் இலக்கியம் உலக இலக்கியம் எல்லாவற்றையும் நான் அறிய திறவுகோலாய் இப்போதும் எனக்குள் என் நினைவுகளில் சிம்மாசனமிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை.
என் கையயைப் பிடித்து இந்த வழி போ என தடமிட்டு தந்த ஆசான் .
மண் மணம் செறிந்த எழுத்துக்களைத் தந்து ஈழத்து இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த படைப்பாளி.
சிறுகதை
நாவல்
நாடகம்
உரைச்சித்திரம்
கவிதை
உரை
என எல்லாம் கைவரப் பெற்ற புலமையாளன் .திருகோணமலை மாவட்டத்தில் இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு படைப்பாளியாய் கொட்டியாரத்துக்கு பெருமை சேர்த்த இலக்கிய நாயகன்.
இவர் எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் கொட்டியாரத்தின் அழகை தித்திக்க தித்திக்க தேன் சுவை சொட்ட எடுத்துச் சொல்லியிருப்பார்.மாவலியாள் இவர் எழுத்துக்களில் கரை புரண்டோடுவாள் கங்கையின் அலயடிப்பும் கொட்டியாரக் குடாக் கடலின் ஆர்ப்பரிப்பும் இவர் எழுத்தாணியில் நடமிடும்.
இவரது  தோணி சிறுகதை   உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது.
''சந்தானாள் புரவியில்'' மூதூரின் பழைமையயயயும் கொட்டியாரக் குடாக் கடலின் அழகையும் பல சிறு கதைகளில் மூதூரின் கிராமங்கள் பலவற்றின் சிறப்புக்களையும் படம் பிடித்திருப்பார்.
''ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கிடக்கிறது'' எனும் நாவலில் ஆலங்கேணி எனும் அழகு தமிழ் கிராமத்தை அதன் பண்பாட்டை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
''கிரவுஞ்சப் பறவைகள்'' எனும் வரலாற்றுப் புதினத்தின் மூலம் வரலாற்று நாவல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நமக்கு பாடமாக விட்டுச் சென்றுள்ளார்
சேனையூர் மத்திய கல்லூரியில் சிறப்புறு தமிழ் ஆசானாய் பிரதிஅதிபராய் கடமையாற்றி  எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்.
Sunda Sinnadurai
வ.அ அவர்கள் என்று எம்மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய சிகரம்.
Velupillai Thillinathan
A talented writer and a good friend of mine. He is no more but I still reaped him as the doyen of Tamil literature
Param Nandha
அழகான குரு பதிவு.
Cheramaan Chenkuttan
இலக்கிய சாகித்திய மண்டலம் பரிசுக்கு சொந்தக்காரரும் இவரே...
Ramalingam Ratnasingam
எமது பிரதேசத்தின் மண்வாசனை டஇலக்கிய மேதை,மதிப்புக்குரிய எங்கள் ஆசானை என்றும் மறவோம்

Vasanthy Antony
வ.அ வின் கற்பித்தல்
தளம் சேனையூர் மத்திய
கல்லூரிதான்.மற்றும்
ஆலங்கேணி,பெருவெளி.
பள்ளிக்குடியிருப்பு
எல்லாம் அவரதுகற்பனைத்
தளங்கள் எனபதுதான்
எனது கருத்து.புனித
அந்தோனியார் ம.வி
கூட அம்மா இறந்ததால்
தான் வந்தார்.
Noble Thurai Anthony
நன்றி சுகுமார் சேர்.
Rakuthas Shanmukanathan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
Jeevarupan Jeeva
வ.அ. அவர்களின் புகழ் என்றும் நிலைக்கும்
Sivapalasingam Kajanthan
I still remember this thinak kathaikal
Kumarathas Sivapragasam
தமிழ் இலக்கிய ஆசானும்,எழுத்தின் சிகரமும்
வ.அ.இராசரெத்தினம் அவர்கட்க்கு என் இனிய பிறந்தநாள் நல்வாத்துக்கள்.
மூதூரின் எழில்மிகு இயற்கை சார்ந்த படைப்பாளர்களின்.
எழுத்தாற்றலை முதன்மைப்படுத்தி எமது தலைமுறைகளிற்கு... முகப்டுத்திக்கொண்டிருக்கும்.
உங்களுக்கு என் மனமு
வர்ந்த வாழ்த்தூக்கள்....
Muralitharan Nadarajah
"கிரௌஞ்சப் பறவைகள்" என்று வரும்! அந்தக் காலத்தில் இந்த நாவலை வாசித்திருக்கிறேன்!
Noel Ariyaratnam
நன்றி சுகுமார் அண்ணன் , அவருக்கு நான் மகனாகப்பிறந்தத்தை நினைத்து பெருமை அடைகின்றேன் , எங்களை வளர்த்த தெய்வம்
Mano Shanan
Enakku Mikavum pidiththa eluththalar. ivatathu pala kathaikalai naan vaasiththullen. Athilum thooni , thaai enpana sirappana kathailal
·
Kalai Arasu
இலக்கிய உலகின் கொழுகொம்பாய் நின்றவர்
Shan Thavarajah
 நானும் அவரின் எழுத்தின் ரசிகனே.
Saravana Pavan
இவருடன் கதைத்து உறவாடும் பாக்கியம் எனக்கும் கிடைத்ததை எண்ணி மனம் பூரிப்படைகிறது

3தமிழாய் எழுத்தாய்
பாலசுகுமார்
2017 ஆம் ஆண்டு சேனையூர் மத்திய கல்லூரி பற்றிய என்  முகநூல் தொடர் பதிவில் வ.அ.பற்றிய குறிப்புகளும் அதற்கான பின்னூட்டங்களும்
சேனையூர் மத்திய கல்லூரி .60 பதிவு.34
தமிழாய் எழுத்தாய்
இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்
திருகோணமலை மாவட்டத்தில் இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு ஆளுமை.உலகத் தமிழ் எழுத்தாளர் வரிசையில் சிறந்த எழுத்தாளர் என மகுடம் சூட்டப் பட்டவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் ஆசிரியராய் பிரதி அதிபராய் கடமையாற்றி பல இலக்கிய ஆளுமைகளின் உருவாக்கத்துக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
க.பொ.த உயர் தரத்தில் என் தமிழ் ஆசான்.நவீன இலக்கியங்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் நான் அறிய என்னை இயக்கியவர் மூதூரில் அவர் நூலகம் என் வாசிப்பின் அகலிப்பை சாத்தியப் படுத்தியது மாப்பாசானும்,செக்கோவும்  என்னுள் வாசம் செய்யத் தொடங்கியது என் ஆசானின் அறிமுகத்தால் பேராசிரியர் கைலாசபதியயை எனக்கு அறிமுகப் படுத்தியவரும் இவரே.
தமிழ் இலக்கியமாய் வாழ்ந்த  எங்கள் தமிழ் ஆசான் எந்த இலக்கியத்தையும் விமர்சனக் கண் கொண்டு நோக்க வேண்டும் என்ற கோட்பாட்டை எனக்குள் விதைத்தவர்.
சங்க இலக்கியம்  இடைக்கால இலக்கியம் ,நவீன இலக்கியம், உலக இலக்கியம் என எல்லா இலக்கியங்களுக்கும்  பரீட்சயமாக்கும் சாத்தியத்தினை உருவாக்கித் தந்தவர்.
பல்கலைக் கழகத்தில் நான் தமிழை சிறப்பு பாடமாக கற்பதற்கான விருப்பத்தை உருவாக்கியது என் தமிழ் ஆசானின் தூண்டுதலே.இன்று வரை தமிழின் மீதான காதலும் அதன் தொடர்ச்சியும் என் இலக்கிய ஆசான் திருமிகு  வ.அ  அவர்களிடமிருந்து கிடைத்தத வரப் பிரசாதம்
இலக்கிய படைப்புகள்
துறைக்காரன் (நாவல்)
கொழுகொம்பு (நாவல்)
கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
ஒரு காவியம்முற்றுப் பெறுகிறது (நாவல்)
ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
தோணி (சிறுகதைத் தொகுதி)
பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள்), 1995
திருக்கரசைப் புராணம் (புது உரை)
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள்
வானொலி நாடகங்கள்
கட்டுரைகள்
கலாபூசணம் ,தமிழ் ஒளி பல்வேறு இலக்கிய விருதுகள் எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்குப் பல்கலைக் கழகம் வளங்கிய இலக்கிய கலாநிதி பட்டம்
அவரது தமிழ்ப் பணிக்கும் இலக்கிய ஆளுமைக்கும் கிடைத்த கெளரவம்
Skn Pillai
திருமிகு வ அ இ. வின் இரண்டு புத்தகங்களை பதிப்பித்தவன் என்பதை பணிவுடன் பதிவு செய்கின்றேன். நன்றி.
Vasanthy Antony
நன்றி சுகுமார்
நானும்அப்பாவின் தமிழ்
A/lமாணவி ஆனாலும்
அறிந்தது முதல்அவர்
மூலம் வந்த தமிழ்தான்
சிறுகதைத்தொகுதிகள்
*தோணி
கொட்டியாக்கதைகள்
ஒரு காவியம் நிறைவு
பெறுகின்றது.
திணைக்கதைகள்
.
கட்டுரை
பொச்சங்கள்
இலக்கிய நினைவுகள்
நாவல்
மண்ணிற் சமைந்த மனிதர்கள்[விடுபட்டது]
. குறுநாவல்
ஒரு காவியம் நிறைவு
பெறுகின்றது.
. . . பட்டம் . .
தமிழ் ஒளி.
அப்பாவிற்கு கலாநிதி
பட்டம் கிடைக்க
வேண்டும் என்பதில்
முழு மூச்சாக உழைத்தவர் நீங்கள்
Vinayakamoorthy Navaratnarajah
ஆமாம்...எங்கள் தமிழை வளப்படுத்தியவர் வ.அ. ஓர் இலக்கிய மேதையின் மாணவன் என்பதிலும், அவரின் மகள் வசந்தி வகுப்த் தோழி என்பதிலும் (தாங்களும்) நான் பெருமையடைகிறேன். இவரின் நாடகங்களிலும் நடித்திருக்கிறோம்.
Nagul Selvan
அய்யா இவரின் புத்தகங்கள் திருமலை நூலகத்தில் சில உள்ளன். தேசிய சுவடிக் கூடம், noolaham.org போன்றவற்றில் ஒன்றுதானும் இல்லை. இவரது நூல்களை மறுபதிப்பு செய்து, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி சிலையொன்றும் நிறுவ வேண்டும். நான் என்னாலான நிதியுதவி செய்வேன்.
அவரது மகனாகிய நானும் நிதி திரட்டி தருகிறேன்

Ramalingam Ratnasingam
எழுத்துத்துறையில் ஆர்வம் ஏற்படுத்திய ஆசான் மூதூர் மண்ணுக்கு புகழ் தேடித்தந்த உலகளாவிய மண்வாசனை எழுத்தாளர் மங்காது அவர் புகழ்

Shanmugam Arulanantham
We cannot forget Vana Aana . He has brought my village peoples culture into light in his famouse noval 'Oru Venmanal Kiramamam Kaththirukkirathu' I have written few novels to fulfill thirst and won sahithya awards
Varnakulanathan Tharmabavan
ஐயாவின் படைப்புக்கள் பற்றி நிறைய கேள்வியற்றாலும் .ஒரு வெண்மணல் கிராமம் காத்துக்கிடக்கிறது. பத்திரிகையில் தொடராக வெளிவந்த போது வாசித்தேன்.
Arumugam Selvanayagam
இலங்கை நாட்டிற்கு இலக்கிய பணி ஆற்றிய அறிஞர் பள்ளிக்கு டி யிருப்பில் கற்பித்தார் ஊரைப்பற்றி சிறுகதை எழுதியவர் பாடசாலை கீதம் அவரால் எழுத ப்பட்டது மறக்கமுடியாத மாமனிதர் நினைவுகள் பதிவுக்கு வாழ்த்துகள்
Vasanthy Antony
என் தந்தை வ.அ தான்
பள்ளிக்கடியிருப்பு
பாடசாலைக்கீதத்தை
எழுதினார் என்பதை
வெளிப்படுத்தியமைக்கு
நன்றி.அந்தோனியார்
பாடசாலைகீதத்தையும்
அம்மாவின் காலத்தில்
தான் எழுதியதாகத்தான்
என்னிடம் கூறினார்
என்உறவினர் சிலர்
மறுத்தனர்.அதனால் நான் வெளிப்படுத்த
விரும்பவில்லை. அவரும்
இல்லை ஆனாலும்
வ.அஎழுத்தில் பொய்
உரைக்க அவசியமில்லை
எனபது என்க்கும் தெரியும் அவரின்
எழுத்தின் கனம்
புரிந்தோர்க்கும் விளங்கும்.முற்றத்து
மல்லிகை மணப்பதில்லை இது
என் ஆதங்கம்.நன்றி
Arumugam Selvanayagam
பள்ளிக்கு டி யிருப்பில் கலைமகள் இந்துக் கல்லூரியில் இப்போதும் அவரால் எழுத ப்பட்ட பாடசாலை க்கீதமே பாடப்படுகிறது,அவரால் அப்போது எழுத ப்பட்ட சிறுகதை கோயில் கும்பாபிஷேக மலரில் இடம்பெற்று ள்ளது.வரலாற்று ஆணவமாக உள்ளது
Vasanthy Antony
மிக நன்றி.
Michael Collin
1991இல் தாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய இலக்கிய பெரு விழாவில் திருமலையின் மூத்த படைப்பாளிகள் திரு.வ..அ.இராசரத்தினம் கவிஞர் தாமரைத்தீவான் திரு.க. அருள் சுப்பிரமணியம் திருமலை நவம் ஆகியோர் வாழும்போதே பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
Sujitharan Vijayarednam
அருமையான பதிவு..
Satheeskumar Arumainathan
என்னுடைய "கொட்டியாபுரப்பற்று முதுசங்கள்" என்ற நூலில் வ. அ வை ஒரு அத்தியாயமாக்கியுள்ளேன்.
Kalirajah Mathivathanam
பாராட்டுக்கள் கொலின்.
வாழும்போது கலைஞர்கள்
கௌரவிக்கப்படவேண்டிய
அவசியம் பற்றி பலர் பல காரணங்களால் கவனத்தில் கொள்வதில்லை. அவர்களது மரணத்தின் பின்
அவர்களைப் பெருமைப்படுத்துவதன்
மூலம் தங்களுக்கு புகழ் தேடிக் கொள்கிறார்கள்.
நீங்கள் பாராட்டி மகிழ்ந்த
நால்வருமே நம் ஊருக்கும்
தமிழுக்கும் பெருமை தேடித்
தந்த நல் முத்துக்கள்
Ramalingam Ratnasingam
மறக்கமுடியாத ஆசிரியர் எழுத்து த் துறையை எம்மாணவர்களுக்கு தூண்டியவர்,கதை கருக்கட்டத்தொடங்கினால் கதைப்பது குறையும் அடிக்கடி செருமல் வரும் அதன்பின் கதைவரும் பத்திரிகைகளில் .அவரிடம் கற்றதில் பெருமைப்படுகின்றோம்.நன்றி சுகுமார்.

Babu Vasanthakumar
எங்கள் ஆதவனின் (Toronto 12 09 2012)முன்பக்க அட்டையில் வ அ இ
 


Monday, 14 December 2020

ஆனந்தன் எனும் அற்புதம்

  • ஆனந்தன் எனும் அற்புதம்
     
     
    தோழர் ஆனந்தன் மறைந்து இருபத்தியைந்து ஆண்டுகள்
    ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனித்துவ முத்திரை பதித்த தடம் மாறா இலக்கிய ஆளுமை மனித நேயம் என்பதற்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தவன் .
    மட்டக்களப்புக்கு நான் வந்த பின் எனக்கு அறிமுகமாகி ஒரு மூன்று வருடத்துக்குள் மூன்று யுகத்துக்கான நினைவுகளை என்னில் ஏற்படுத்திச் சென்ற தோழமை.
    எளிமை அன்பு நேர்மை இவற்றின் இலக்கணம் அவன்
    பொய்மையில்லா இலக்கியம் பேசுபவன் இலக்கியக் கூட்டங்களில் தயவு தாட்சண்யம் பார்க்காத விமர்சகன்.
    அவனது "கவிதை வாங்கல்லையோ கவிதை" என்ற அமர வரிகள் இன்று எவ்வளவு பொருந்தி நிற்கிறது அவன் நினைவாய்.
    மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் அடையாளமாய் உலா வந்த உயர் தனி இலக்கிய ஆளுமை.
    முற்போக்கு முகம் கொண்டவன் போலிகளைக் கண்டு பொங்கும் குணம் உடையான்.
    மலையாள இலக்கியத்தில் ஈடுபாடும் அந்த மொழித் திறனும் வாய்க்கப் பெற்றவன்
    அவன் நினைவுகளோடு நான்
    2019 ஆண்டு அவன் நினைவாய் எழுதிய பதிவு
    மறந்து போகுமா
    கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்
    ஆனந்தன் இறந்து 25 வருடங்களை எட்டி நிற்கிறது,ஆயினும் எல்லாம் நேற்றுப் போல் என் நினைவில் நீள்கிறது.அவன் எனக்கு அறிமுகமானது 1992 ல் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக வந்த பிறகுதான் ஒரு மூன்று வருடங்கள்தான் ஆனாலும் நிறைந்த நினைவுகளை என்னுள் விட்டுச் சென்றுள்ளான் .
    1992ல் என்னைக் கண்டதும் என்னிடம் முதல் சொன்ன விடயம் அபோது சாருமதி மட்டக்களப்பிலிருந்து வெளியிட்ட "வயல்" சஞ்சிகையில் நான் பேராசிரியர் வானமாமலை பற்றி எழுதிய கட்டுரையை சிலாகித்த விதமும் அதில் நான் இன்னும் என்ன சொல்லியிருக்கலாம் என்பது பற்றியுமான விமர்சனப் பார்வை என்னை அவனுள் நெருகமாக்கியது.நான் அறிந்த மிகச் சிறந்த வாசகன் மாக்சியத்தை நேசித்த உண்மைத் தோழன்.விருப்பு வெறுப்புகள் அற்ற விமர்சகன் .
    வாசகர் வட்டத்துக்காய் ஈழத்து நாட்டாரியல் பற்றி ஓருரை ஆற்றும் படி கேட்டு ஒரு நீண்ட உரையும் அதன் பின்னரான கலந்துரையாடலும் கிழக்கின் நாட்டார் மண் சார்ந்த மரபுகள் பற்றி அவனது அபிப்பிராயங்களும் அந்த இலக்கிய கலந்துரையாடலுக்கு மகுடம் சூட்டி நின்றன.
    நான் எங்கு உரையாற்றினாலும் என் ரசிகன் அவன் என் உரையை சிலாகித்து சிலாகித்து கதை சொல்வான்.ஆனந்தனைப் போல எனக்கு இன்னொரு ரசிகனும் இருந்தான் சிவராம் இருவரும் ஒரு சேர என் வீட்டு முன் மண்டபத்தில் இஞ்சி பிளேண்டியையும் குடித்துக் கொண்டு சுவாரஸ்யமான இலக்கிய அரசியல் உரையாடல்கள்.
    இஞ்சிப் பிளேண்டியென்றால் ஆனந்தனுக்கு உயிர் ஆனந்தன் வீட்டுக்கு எப்போ சென்றாலும் வத்சலா இஞ்சிப் பிளேண்டியோடு வந்து நிற்பா.மறந்து போகுமா இவையெல்லாம்.
    மகள் அனாமிகாவோடு செல்லம் பொழிவதில் அவன் என்றுமே குறை குறை வைக்கவில்லை பிள்ளைகள் என்றால் அவர்கள் மொழியில் சொக்கிப் போவான் .அனாமிகாவை சீண்டிப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இன்று அவனும் இல்லை அவன் நேசித்த என் மகளும் இல்லை ஆனந்தன் இறந்த போது அவள் துடித்துப் போனாள் கடந்து விட முடியாத நினைவுச் சுமை.
    ஆனந்தன் மட்டக்களப்பு கொண்டாட வேண்டிய கலை இலக்கிய ஆளுமை
    அவன் நினைவாய் எவ்வளவோ பேசலாம் பேசுவோம்.
    மளையாள இசை மலையாள இலக்கியத்தில் மிகுந்த பரிட்சயம் உள்ளவன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் ஆற்றலால் சில சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளான் .இன்னும் அவன் இருந்திருந்தால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளம் சேர்த்திருப்பான்.மலையாள இசையை எனக்கு அறிமுகப் படுத்தியவனும் அவனே அவனிடமிருந்து மலையாள இசைப் பேழைகளை வாங்கி கொடுக்காநல் விட்டு அவன் நினைவாய் என் மட்டக்களப்பு வீட்டில்.இன்றும் அவன் நினைவுகளுடன் மலையாள இசையை விரும்பிக் கேட்கும் ரசிகனாய் நான் .
    வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பான்
    "சுகு அந்த ஆதம் காக்கா பாடலைப் பாடு" என்பான் கேட்டுக் கேட்டு சலிக்காத பாடல் அது
    "ஆதம் காக்கா ஆதம் காக்கா
    அவரைக் கண்டா சொல்லிடுங்கோ
    பூவரசம் கன்னி ஒன்று
    பூ மலர்ந்து வாடுதெண்டு"
    மறந்து போகுமா அவன் நினைவு
     
     

     
    2018ஆம் ஆண்டு எழுதியது
    தோழர் ஆனந்தன்
    நான் மட்டக்களப்பு வந்த பின் பல்கலைக் கழகத்துக்கு வெளியே பல நண்பர்கள் அறிமுகமாயினர் அவர்களில் ஆனந்தனும் ஒருவர். ஆரம்ப அறிமுகத்திலேயே நானும் அவரும் பல விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பதை இனங் கண்டு கோண்டோம்.அதனால் அவருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாகியது.
    அவர்கள் இருந்த பார் வீதிக்கு பக்கத்திலேயே சில மாதங்கள் வாடகை வீடு அதனால் அவர் நடையாக வீட்டுக்கு வருவதும் நான் நடையாக அவர் வீட்டுக்கு செல்வதும் இலக்கியம் சினிமா கவிதை என உரையாடல்கள் நீள்வதுமாக பொழுது ஆரோக்கியத்தின் வழி பயணித்தது..
    ஆனந்தனின் மனைவி வத்சலாவும் என் மனைவி பிரமிளாவும் நெருக்கமான நண்பிகளாயினர் எ மகள் ஆனந்தனோடு ஒட்டிக் கொள்வாள் ஆனந்தன் அவளை மாலை நேரங்களில் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மாமாங்க குளக்கரைக்கு கொண்டு போய் அவளுக்கு புதினம் காட்டி வருவதுமாக ஆனந்தனின் அன்பில் கரைந்தாள் என் மகள் .
    ஆனந்தனின் வீடு மாமாங்க கோயில் போகும் சந்தியில் மூலையில் திருவிழா வந்து விட்டால் நண்பர்களால் நிறைந்து வழியும் கலகலப்பாய் அந்த நாட்களின் முன்னிரவுப் பொழுதுகள் உரையாடல்களும் பாட்டும் என களை கட்டி நிற்கும் மட்டக்களப்பு கொம்பு பாடல்களை அடிக்கடி என்னை பாடச் சொல்லி ரசிக்கும் என் ரசிகனாய் எப்போதும் .என் மேடைப் பேச்சை பாராட்டி மகிழும் தருணங்கள் .
    .
    கொஞ்ச நாட்களில் நாங்கள் பெய்லி குரோஸ் வீட்டை வாங்கி குடி புகுந்த பின் ஆனந்தனின் தொடர்பும் எந்த குறையும் இல்லாமல் நீடித்த அன்பாய் நட்பாய் நிலைத்தது .
    ஆனந்தன் எப்போதும் பிளேன்டீ தான் கேட்பார் வீட்டில் என்ன இருக்கோ கேட்டு சாப்பிடுவார்
    மலையாள இலக்கியத்தில் மிகுந்த ஈடு பாடு காட்டிய ஆனந்தன் மலையாள இலக்கியங்கள் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார் .மலையாள பாடல்கள் கேட்பது பிடிக்கும் நிறையவே மலையாளப் பாடல்கள் பதிந்த கெசற்றுக்கள் வைத்திருப்பார் அவர் மூலமாகவே மலையாள இசைக்கு நான் பரிச்சயமானேன்.
    மலையாள இலக்கியத்தின் செழுமையை அது பற்றிய அறிவை அகலிக்க ஆனந்தனுடனான உரையாடல்கள் எனக்கு துணை செய்தன .
    எங்கள் வீட்டு விறந்தையில் குப்புற அவரது வண்டி நசிய படுத்துக் கொண்டு மகளோடு விளையாடிய பொழுதுகள் இன்னும் மாறாத நினைவுகளாய் எப்போதும்
    மட்டக்களப்பு வாசகர் வட்டத்தினுடனான செயல் பாடுகளில் ஆனந்தன் காட்டிய ஆர்வமும் முன்னெடுப்பகளும் மட்டக்களப்ப்பின் நவீன இலக்கிய மரபில் புதிய வெளிச்சத்தை பாச்சியது என்றால் மிகையாகாது.
    முற்போக்கில் நம்பிக்கை கொண்ட ஆனந்தன் விமர்சனம் என வரும் போது தயவு தாட்சன்யம் பார்க்காமல் விமர்சிப்பார் இலக்கிய கூட்டங்களில் அவர் பேசும் அழகு தனி யாருக்கும் வாய்க்காத குரலும் அந்த நடையும்.
    ஆனந்தனின் நினைவுகளை எழுத எழுத இன்னமுமாய் அது நீளும் நெஞ்சம் மறக்க முடியா மட்டக்களப்பின் கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்
    1995 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அதிரடிப்படை முகாமுக்கருகில் துப்பாக்கி சூட்டில் சாகும் போதும் மற்றவர்க்காக தன்னுயிரை ஈந்த என் தோழன் அவன் நினைவு எப்போதும்

    நன்றி சுகுமார் தங்களுடன் கொண்ட புலமை நட்பையும் குடும்ப நட்டையும் நான் அறிவேன்.
    அநேகமான தடவைகள் நானும் அவருடன் வந்திருக்கிறேன்.
    உங்களுடன் உரையாற்றுவதற்கு அவருக்கு அலாதியான விருப்பம் இருந்தது.
    அவர் சொல்லுவார் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நல்ல ஆழமான நவீன இலக்கிய புரிதலுடைய பால. சுகுமார் வந்திருக்கிறார் இனி நமது மாணவர்கள் பயனடைவார்கள்.
    துரதிர்ஷ்டவசமாக தங்களின் சேவை வரமுடியாமல் போய்விட்டது.
    நானும் அவர் நினைவாக ஒரு பதிவைப் போட்டிருக்கின்றேன்
    அதில் உள்ள புகைப்படம் தங்கள் வீட்டில் எடுத்தது

 

Monday, 15 June 2020

"தியா" Diya

இன்று ஒரு கன்னடப் படத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

Image may contain: 4 people உங்களுக்கு கன்னடமும் தெரியுமா என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.கன்னடம் தமிழின் சகோதர மொழி ஆனாலும் அது சமஸ்கிருத மயப் பட்டு நிற்கிறது.ஆனாலும் சப் ரைற்றில் துணையோடு திரைப்படம் பார்க்க மொழி அவசியமில்லை அதுவே நம்மோடு பேசும்.


உலகம் முழுவதும் காதலைப் பேசுகின்ற திரைக் காவியங்கள் வந்துள்ளன

அண்மைக்காலத்தில் வந்த படங்களில் கன்னடத்தில் வெளி வந்த
"தியா"
Diya
என்கிற படம் என்னைக் கவர்ந்ததாய் உள்ளது


Image may contain: 2 people, sunglasses, beard and hat
இத் திரைப்படம் பற்றிய பார்வையில் ஆண் நிலை நோக்கில் பெண்ணின் காதல் பேசப் பட்டிருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.
Image may contain: 2 people, text
என் நிலை நோக்கில் காதல் அதன் நோக்கு சரியாக சொல்லப் பட்டிருப்பதாகவே கருதுகிறேன்
ஒரு ரெயில்வே தண்டவாளத்தில் தொடங்குகின்ற கதை ரெயில்வே தண்டவாளத்திலேயே முடிகிறது மன பதகழிப்புடன் கடைசிக் காட்சிகள் நகர்கின்றன.
Image may contain: 3 people, text Kushee Ravi
Pruthvi Ambaar
Dheekshith Shetty
Pavithra Lokesh
ஆகியோர் நடிப்பில்
கே.எஸ்.அசோகா நெறிப்படுத்தியுள்ளார்



"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

சிங்கள மொழி திரைப்படம்

 "எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

சிங்கள மொழியிலான திரைப்படங்களை முதலில் தமிழர்களே தயாரித்தவர்கள் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.ஆரம்ப கால திரைப் படங்கள் தென்னிந்திய பாணியில் அமைய அறுபதுகளில் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களின் வருகை தனித்துவமான சிங்கள மொழிப் படங்களை அறிமுகம் செய்து கலைதுவ நோக்கு முதன்மைப் படுவதைக் காணலாம்.


Image may contain: 2 people, outdoor and close-up












காலப் போக்கில் உலக அளவில் பேசப் படும் பல படங்கள் உலகப் பட விழாக்களில் பரிசு பெற்று சிங்கள திரை உலக்குக்கு பெருமை சேர்த்தன.

Image may contain: 1 person, standing, outdoor and nature
இந்தி சினிமாவின் பாதிப்பு தமிழ் சினிமாவின் பாதிப்பு என மாறி மாறி ஜனரஞ்சக படங்களின் வருகையை உறுதிப் படுத்தினாலும் பல கலைப் படைப்புகள் சிங்கள திரை உலகை தூக்கி நிறுத்தின எனலாம்.

அண்மைக் காலத்தில் சிங்கள திரைப் படங்கள் கதை சொல்லும் முறை நடிப்பு ஓளிப்பதிவு என புதிய நகர்வுகளில் பயணிக்கிறது புதிய நடிகர்கள் அனாயசமாக நடிப்பை வெளிப் படுத்தி செல்கின்றனர் .
இந்த வகையில்

"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

Image may contain: 2 people, text and close-upImage may contain: 2 people, people standing, plant, tree, outdoor and nature
Image may contain: 2 people, people standing, people sitting and outdoor விபுல சமரசேகர எனும் எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு,அனுராதா ஜெயசிங்கே திரைக் கதை நெறியாள்கை செய்துள்ளார்.
புபுது சதுரங்க
நயனதாரா விக்கிரமாராச்சி
வீணா ஜயக்கொடி
பிரதான பாத்திரமேற்று நடிக்க

ஒரு காதல் கதை சொல்லப் படுகிறது வழமையான கதை என்றாலும் சொல்லப் படும் விதத்தில் வித்தியாசமாக நம்மோடு பேசுகிறது.

Sarbjit சர்பஜித்

ஹிந்தி மொழியியிலிருந்து

Sarbjit
சர்பஜித்

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தி சினிமா சில மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்று நான் சொல்வேன் .

தமிழ் சினிமா பெரும்பாலான படங்களில் கதா நாயகிகள் வெறும் அழகுப் பொம்மைகளாகவே வலம் வருவார்கள் ஒன்றோ இரண்டோ நயனதாரா படங்களை விட முழு தமிழ் சினிமாவுக்கும் கடந்த ஐந்தாண்டுகளை கண்டடைய முடியும்.
Image may contain: 1 person, standing, outdoor and nature
அண்மையில் இந்தியில் வெளிவந்த பல படங்கள் குறிப்பாக அலியா பட்,தீப்சி நடித்தவற்றை குறிப்பிட முடியும் அந்த வகையில் ஐஸ்வர்யராவை முதன்மைப் பாத்திரமாக கொண்ட சர்பஜித் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை பேசு பொருளாகக் கொண்டு வெளி வந்திருக்கிறது.
Image may contain: 1 person, outdoor
ஐஸ்வர்ரராய் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறார் சகோதரன் அவர் தீவிரவாதியாக சித்தரிக்கப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்.
Image may contain: 1 person, standing and outdoor
தன் சகோதரனின் விடுதலைக்காக போராடும் பெண்ணாக ஐஸ்வர்ராய் வருகிறார்.
Image may contain: 2 people, close-upImage may contain: 2 people, close-up and outdoor இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுகுகிறதது இப்படம்

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி