வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

உலக நாடக நாள் 2018 மார்ச் 27 -3 உலக நாடக நாள் நினைவாக என் நாடகங்களுடன் பேசுகிறேன்

உலக நாடக நாள் 2018 மார்ச் 27 -3
உலக நாடக நாள் நினைவாக என் நாடகங்களுடன் பேசுகிறேன்

"தனித்திருக்கப்பட்டவர்கள் " தமிழில் நவீன நாடகத்துக்கு புதிய முகம் கொடுத்த நாடகக் குடில் முருகபூபதியின் நாடகப் பனுவல்
2003ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்த்து கலைப் பள்ளியில் ஆலமரத்தை பிண்ணணியாக கொண்ட அரங்கை உருவாக்கி எனது நெறியாள்கையில் மேடையிடப் பட்டது.


நடிகர்களாக அன்று அங்கு பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர்.அண்ணாமலை புகழ் கார்த்திகேயன் ,இன்று திருச்சூர் நாடகப் பேராசிரியர் வினோத் உட்பட பலர் நடித்திருந்தனர் இவர்களோடு தோழர் பற்குணத்தின் மகள் இன்று சென்னையில் பிரபல்யமாக பேசப் படும் நடனக் கலைஞர் அபிராமியும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.


தமுழில் நவீன நாடகத்துக்கு புதிய மொழியயை அறிமுகப் படுத்திய தனித்திருக்கப்படவர்கள் என் நெறியாள்கையில் புதிய பரிமாணமாய் விரிந்தது.
நாடகத்துக்கான ஒளியமைப்பை மறைந்த நாடகன் முனைவர் வேலாயுதம் சிறப்பாக கையாண்டார்.

அபிராமி ஒரு நடனக் கலைஞர் என்பதால் அவள் உடல் மொழி நாடகத்தின் பல உச்சங்களை பேசி நின்றது கார்த்யிகேயன் அவன் குரலும் அசைவுகளும் நாடகத்துக்கு மெருகு சேர்த்தது.வினோத்தின் மலையாளம் கலந்த தமிழ் பார்வையாளர்களது பாராட்டை பெற்றது.

நாடக நெறியாளன் அவன் கட்டற்ற சுதந்திரமுடையவன் அவன் நாடக மொழி அது எத்தகைய அரங்காக இருந்தாலும் அவனது தனித்துவ முத்திரை வெளிப்படும் என் நாடகங்கள் எல்லாம் ஒரே தன்மைத்தந அல்ல ஒவ்வொரு நாடகமும் புதிய வடிவத்தை அறிமுகப் படுத்தியவை .
தனித்திருக்கப் பட்டவர்கள் என் நாடக வாழ்வில் முக்கிய படைப்பு.

Abiramy Patkunamm
Abiramy Patkunamm மறக்க முடியாத நாட்கள் அவை சார்.. 15 வருடங்கள் ஆகின்றன. எனக்கு நாடகத்துறையில் அதீத ஈடுபாடு இருந்தும் நான் அதற்கான பங்களிப்பை செய்தது மிக சொற்பமே. காரணம் சிறுவயது முதலே நடனம் என்னை விழுங்கி கொண்டது. ஆயினும் மௌனகுரு அங்கிள், உங்கள் போன்றோரது செல்லப் பிள்ளையாய் நான் நாடகத்துறையில் சிறுக சிறுக கற்றுக்கொண்டதுண்டு. அதில் இந்த நாடகம் ஒன்று. அதன் மூலம் அறிமுகமான கார்த்திகேயன் மூலம் தான் நான் சின்னத்திரைக்குள் பிரவேசித்ததும். நடிப்பு மீதான காதல் என்றும் தீராதது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி