வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 30 April 2018

அஞ்சலி லெஸ்றர் ஜேம்ஸ் பீரிஸ்

அஞ்சலி
லெஸ்றர் ஜேம்ஸ் பீரிஸ்



இலங்கை சினிமா மொழியின் மா கலைஞன்
சினிமா என்ற கலையின் மூலம் சிங்கள மக்களின் கலாசாரம் வரலாறு பண்பாடு ஆகியவற்றை உலகறியச் செய்த மா கலைஞன்.
கிட்டத் தட்ட இருபது படங்களை இயக்கி பல சர்வதேச விருதுகளைப் பெற்று இலங்கை சினிமாவுக்கு சர்வதேச அங்கிகாரம் கிடைக்க வழி செய்தவர்.
நல்ல சினிமாவுக்கு மொழி ஒரு தடை அல்ல என்பதை அவரது படங்கள் நிருபித்தன.
கம்பரலிய மனதை வசீகரித்த திரைக் காவியம்.மடுல் டுவ நம் இளமைக் கால வாழ்வின் படப் பிடிப்பு.
Image may contain: 1 person
கம்பரலிய
ஹொலு கதவத
நிதானய
The God King
மடுல் டுவ
வீர புரன் அப்பு
கலியுகய
யுகாந்தய
ஆகிய படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.நான் பார்த்த எல்லா படங்களுமே இப்போது நினைத்தாலும் அந்த திரை மொழி காட்சிகள் மனதில் பதிந்த ஒன்றாகவே நீள்கிறது.
உலக சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் என்பதை அவர் திரை மொழி எப்போதும் நிருபித்துக் கொண்டே இருக்கும்.
அவர் வாழ் நாள் வரை அவரை சிங்கள கலையுலகம் கொண்டாடிக் கொண்டே இருந்தது ஒரு யுகக் கலைஞனாய் தங்கள் மிகப் பெரிய சொத்து என கலைஞர்களும் அறிவார்ந்தவர்களும் அவர் நிழலில் பெருமை கொண்டனர்.
Image may contain: 1 person, text அந்த மா கலைஞனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது 2005ஆம் ஆண்டு என நினைக்கிறேன் கொழும்பில் நிகழ்த்து கலைகளுக்கான பல்கலைக் கழக ஆரம்ப நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீடாதிபதி என்ற வகையில் அழைக்கப் பட்டிருந்தேன் நிகழ்வு தொடங்குவதற்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன் நான் சென்றிருந்தேன் முன் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார் எனக்கு மூன்றாவது வரிசையில் இடம் இருந்தது .அப்போது சனத் நந்த சிறி எனக்கு பல்கலைக்கழக மானியக் கூட்டங்களில் அறிமுகமாயிருந்தார் அவரிடம் என் விருப்பத்தை சொல்லி நான் லெஸ்ரரிடம் கதைக்க வேணும் என்று சொல்ல அவர் லெஸ்ரரிடம் என்னை அறிமுகப் படுத்த எனக்கு கை தந்து புன் முறுவலுடன் வாழ்த்துச் சொல்லி தலையில் தொட்டு ஆசிர்வதித்த அந்த தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன் .
என் இறுதி வணக்கம் அந்த மா கலைஞனுக்கு .

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி