வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 30 April 2018

திருகோணமலை தாமோதரம் பிள்ளை சாத்திரியார்

திருகோணமலை தாமோதரம் பிள்ளை சாத்திரியார்


திருகோணமலையில் வாழ்ந்த ஒரு ஒரு புலமைத்துவ திறன் கொண்டவர் பன் முக ஆற்றல் மிக்கவராக இருந்தாலும் எல்லோராலும் சாத்திரியார் எனவே அழைக்கப் பட்டார் .
பெரிய கடையயை வாழ்விடமாக கொண்டும் பின்னர் வீச்சுக் காரத் தெருவிலும் தொடர்ந்து மனையாவெளியிலும் வாழ்ந்து தன் ஆற்றலால் திருகோண மலை நகரம் முழுவதும் எல்லோராலும் அறியப் பட்டவர்.

அன்றைய நாட்களில் பிறந்த குறிப்பு எழுத இவரையே அழைப்பர் .இவர் ஒரு புலவரும் கூட கோணேசர் மீது பல பாடல்களை எழுதியிருக்கிறார் ஆனால் அவை எல்லாம் வெளி வராமலேயே மறைந்து போயிற்று.
பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் நீண்ட தாடி ஒரு ஞானியயை போன்ற காட்சி சோமசுந்தரப் புலவரை நினைவு படுத்தும் ஒரு அறிவின் சுடர் தெரியும் முகம் .

என் பிறந்த குறிப்பும் இவரே எழுதியதாக அம்மா சொல்வார்.என் அம்மாவின் பெரிய அப்பா இவர் வீரகத்தி.தாமோதரம் பிள்ளை திருகோணமலையின் மூத்த குடி வழி வந்த ஒரு அறிஞர் எனக் கூட இவரை சொல்லலாம்.
அவர் வாழும் காலம் வரை கஞ்சனம்மானை ஏடு படித்து வீட்டில் பொங்கல் பொங்கும் மரபை கொண்டிருந்தவர்.
தமிழ் மொழி இலக்கணம் இலக்கியம் நன்கு அறிந்தவர்.
நான் சிறு குழந்தையாக இருக்கும் போது தன் மடியில் என்னை தூக்கி வைத்திருக்கும் போது இவன் ஒரு பெரும் அறிஞனாய் வருவான் எனக் கூறியதாக அம்மா சொல்வார்.

அவருடைய இரு புதல்வர்களும் தங்கள் துறைகளில் கெட்டித்தனம் உள்ளவர்களாக இருந்தனர் மூத்தவர் துரை ஆங்கிலேயர் காலத்து நேவியில் பணியாற்றியவர்.மற்றவர் மாணிக்க ராஜா ரெயில்வேயில் பணியாற்றியவர்.மிகச்சிறந்த உதை பந்தாட்ட வீரர் திருகோணமலை உதை பந்தாட்ட கழகத்துக்காக விளயாடியவர் சவுதி அரேபியா வரை சென்று விளையாடி திருகோணமலை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி