உலக நாடக நாள் 2018 மார்ச் 27 -4
துர்க்கிர அவலம்
கிழக்குப் பல்கலைக்கழக உலக நாடக விழாவொன்றுக்கு நான் நெறியாள்கை செய்து மேடையிட நினைத்து முடியாமல் போன துயரம்.

துர்க்கிர அவலம் பேராசிரியர் மு ராமசாமியின் மனைவியார் பேராசிரியர்
செண்பகம் ராமசாமி அவர்கள் கிரேக்க துன்பியல் நாடகமான "அன்ரிகனி"நாடகத்தை
தழுவி எழுதியது உலக நாடக நாள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு
ஆண்டும் என் நாடகமில்லாமல் நாடக விழா நடந்ததில்லை .
துர்க்கிர அவல நாடகத்தை தயாரிப்பதற்கான எல்லா முயற்சிகளும் நடை பெற்றன முதல் பாட வாசிப்பு இரண்டாவது பாட வாசுப்பு என எல்லாம் முடிந்து பாத்திர தெரிவுகளும் நடை பெற்று முதல் இரண்டு மூன்று நாட்கள் ஒத்திககளும் நடை பெற்றன கிழக்கின் இசை மரபுகளை அடிப்படையாக கொண்டு நாடகத்தின் மையமான கோரஸ் பாடல் குழுவுக்கான இசையாக மட்டக்களப்பின் நடைக் காவடி மெட்டை உள்வாங்கிய இசையயை அமைத்திருந்தேன் ஒத்திகைகளில் நாடகம் பெரும் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென் பட்டன அதுவே அந்த நாடகம் போடுவதற்கான சூழலுக்கு தடையாக அமைந்தது என பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு ஆண்டும் என் நாடகத்தை கரவொலியுடன் பார்த்து ரசிக்கும் பல்கலைக் கழக பணியாளர்கள் என்ன சேர் இந்த முறை உங்க நாடகம் இல்லையா என சலித்துக் கொண்டனர்.
மிகச் சிறந்த ஆளுமையுள்ள மாணவர்கள் என் துர்க்கிர அவலத்தில் பங்கேற்க தயாராய் இருந்தனர் விசேட பயிற்சிகளும் அவர்களுக்கு கொடுத்திருந்தேன் ஆனால் அரங்களிக்கையாக நிறைவேறாமல் போனது எனக்கு மட்டுமலல அவர்களுக்கும் அது பெருத்த ஏமாற்றம்தான்.
கிரேக்க அரங்க மரபின் தமிழ் வடிவத்தை கொடுக்க இருந்த எனக்கு இந்த சம்பவம் ஒரு துர்க்கிர அவலம்தான்

No comments:
Post a Comment