வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

அனைத்துலக ஆடல் நாள் 29.04.2018

அனைத்துலக ஆடல் நாள்
29.04.2018



இன்று உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடாட்டங்களால் நிறைந்திருக்கும் நேரத்தில் தமிழில் ஆடல் வடிவமும் அதன் வரலாறும் பற்றி சில சேதிகளை சொல்ல ஆசைப் படுகிறேன்.
பரதம் பரதர் பற்றி இன்று நிறையவே பேசப் படுகிறது.நாட்டிய சாஸ்திரம் புராணங்களோடு தொடர்பு படுத்தப் பட்டு ஐந்தாம் வேதம் எனவும் கொணாடப் படுகிறது.


கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தது என்று ஒரு சாராரும் கி.பி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுக் காலகட்டம் என இன்னொரு சாராராரும் வரலாற்றுப் போர் நடத்தினாலும் எது எப்படி இருந்தாலும் இந்திய மரபில் நாடகத்தின் தோற்றம் அதன் கூறுகள் பற்றியும் இசையும் ஆடலும் நாடகத்தில் பெறும் முக்கியத்துவம் பற்றியும் பேசுகிறது.நாட்டிய என்பது கதை தழுவிய நாடகமே .என்பதை தெளிவாக சொல்லும் நூல் உண்மையில் உலக அரங்க வரலாற்றில் அரங்கு பற்றிய மிகப் பழமையான நூல் நாட்டிய சாஸ்திரம் என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது .மேலைத் தேய மரபில் அரிஸ்ரோற்றில் பற்றி கூறினாலும் அவரது எழுத்து ஆங்காங்காங்கே கூறியவற்றின் தொகுப்பேயாகும்.


தமிழில் அழிந்து போன நாடக ஆடல் முறைகள் பற்றிய நூல்கள் பற்றிய தகவல்கள் அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
"கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளதாக டாக்டர் மு.வ. தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிடுகிறார். அவ்வாறே கடைச் சங்க காலத்து சேறை அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் நாடகத் தமிழ் குறித்துக் கூறுகின்றது. அந்நூலும், பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட இருநூல்களுமே பழந்தமிழ் நாடக மரபுகளைப் புலப்படுத்துகின்றன. மேலும், அந்நூல்கள் பழங்காலத்தில் சிறந்த நடிகர்கள், கூத்தர், விறலியர், பொருநர் என்ற சிறப்புப் பெயர்களோடு விளங்கிப் புகழ் பெற்றார்கள் என்பதையும் காட்டுகின்றன. இன்றும் தமிழுக்கு உயிர் நாடியாக விளங்கக் கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பழந்தமிழ் நாடகக் கலையினை உலகிற்குப் பறைசாற்றுகின்றன."


தமிழ் மரபிலிருந்தே நாட்டிய சாஸ்திரம் உருவாகுவதற்கான மூல நூல்கள் இருந்துள்ளன என்பதை அண்மைய ஆய்வுகள் நிருபிக்கின்றன.
Image may contain: 1 person, on stage and indoor நாட்டிய சாஸ்திரம் சொல்லுகின்ற் எந்த ஒரு ஆடல் வகையும் வட நாட்டில் இல்லை கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் ஏனைய தென்னிந்திய மானிலங்களிலுமே அதற்கான தொடர்ந்த பயில் நிலை வளர்ச்சியயை நோக்க முடிகிறது தமிழ் நாட்டு சதுராட்டம் அதுவே பின்னர் பரத நாட்டியமாக கட்டமைக்கப் படுகிறது.
கேரளாவின் கூத்தம்பலங்கள் நாட்டிய சாஸ்திரம் சொல்லும் அரங்க கட்டுமானத்தின் மாதிரிகளாக உள்ளன.கூடியாட்டம் நாட்டிய சாஸ்திர மரபின் வழி வந்த ஆடல் வடிம் என பல உதாரணங்களினால் நிருபிக்க முடியும்.


Image may contain: sky, house and outdoor

நாட்டிய சாஸ்திரம் சொல்லும் ஆங்கிகா,வாசிகா,ஆகாரிகா,சாத்விகா அபினயங்கள் தென்னாட்டு ஆடல் வடிவங்களுக்கே பொருந்தி வருகின்றன.
Image may contain: one or more people முத்திரைகள் அபிநயங்கள் பற்றி விரிவாகவே விளக்கங்களை தருகிறது நாட்டிய சாஸ்திரம் நூற்றியெட்டு கரணங்கள் பற்றியும் பேசுகிறது. கரண முத்திரை சிற்பங்கள் தமிழ் நாட்டிலேயே உள்ளன வட இந்தியாவில் இல்லை என்றே சொல்லலாம் அத்தோடு சோழ மன்னர்கள் நிர்மாணித்த கம்போடிய ஆங்குர் கோயிலிலும் கரண முத்திரை சிற்பங்கள் உள்ளன .
No automatic alt text available.
இந்த பின்னணியில் வைத்து பாற்கும் போது தமிழ் மரபிலிருந்து உருவானதே சமஸ்கிருத நாட்டிய சாஸ்திரம்.
தமிழ் நூல்களின் தழுவலே நாட்டிய சாஸ்திரம்
பரதமுனி என்பது கூட்டுழைப்பின் வடிவம்.


No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி