வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

மூதூரே முத்தமிழே மூதூரே முத்தமிழே

மூதூரே முத்தமிழே



மூதூரே முத்தமிழே
தேனே என் திரவியமே
தேரே அழகாய்
செந்தமிழில் ஊறியவளே
காரேறும் வயல் சூழ்ந்த
கடல் கொண்டு கவிபாடும்
சீராய் எம் மனங்களிலே
சித்திரமாய் சிரிப்பவளே

முத்துக் குளித்த-உன்
முன் பெருமை
வரலாறு
செத்தாலும்
நாம் மறவோம்
செந்தமிழால்
உனைப் பாடி
கொண்டாடி நாம்
மகிழ்வோம்
குன்றுகள் சூழ்ந்து
குடாக் கடல் வளைந்து
மிண்டு மிண்டு
எழும் மின்னலாய்
கோடு கட்டி
வளைந்து வளைந்து
ஓடும் உப்பங் களிகளால்
உவகையொளி தந்தவளே
மாவலியாள் தாயாக
மடி சுமந்து ஓடி வர
தேமதுரத் தமிழால்
சித்தித்த திருக்கரசை
தோரணம் கட்டி
தொன்மைப் பழமையயை
பறைசாற்றும் கல்வெட்டு
எழுத்துகளால்
எங்கள் இருப்பை
என்ன்னாளும் சொல்லும்
இன்பப் பெரு மகளெ
உன்னை வணங்க
ஒரு கோடி
கைகள் கொண்டு
மலர் தூவி மகிழ்கின்றேன்
என்னை ஈன்று
உன் மடியில் தாலாட்டி
உலகுக்கு தந்தவளே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி