வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

சேனையூர் கட்டைபறிச்சானும் வைகுந்த அம்மானை மரபும்

சேனையூர் கட்டைபறிச்சானும் வைகுந்த அம்மானை மரபும்

தமிழில் பிரபந்த இலக்கிய மரபில் அம்மானை இலக்கியங்கள் மாணிக்கவாசகரின் திருவம்மானையோடு தொடங்கினாலும் அம்மானை பற்றிய தகவல்களை நாம் சங்க இலக்கியங்களிலும் காண முடியும்
"அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.

ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு."
இப்படி விக்கிபீடியா விளக்கம் தருகிறது
சிலப்பதிகாரத்திலும் நாம் அம்மானை பற்றிய தகவல்களைப் பார்க்கிறோம்.
அம்மானை இலக்கிய மரபு என்பது கிறிஸ்தவ இஸ்லாமிய புலவர்கள் வரை செல்வாக்கு செலுத்தியுள்ளமையயையும் தமிழ் இலக்கிய வரலாறு பேசுகிறது.

வைகுந்த அம்மானை பெருந்தேவனார் பாடிய மகாரதத்தின் இறுதிப் பகுதியான பாண்டவர் வைகுந்தம் போன கதையை ஒரு வழி நூலாக 7500 அடிகள் உடையதான நூல் என்ற குறிப்பும் அது சரஸ்வதி மகால் நூகத்தால் 1904ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது.ஆனால் இலங்கையில் அது ஏட்டில் படிக்கப் பட்டு பின்னர் புத்தகமாக வெளி வந்து படிக்கப் படுகிறது.

சேனையூர் கட்டைபறிச்சானில் ஒருவர் இறந்தால் அதன் பின் முப்பத்தியொராம் நாள் வரை படித்து இறுதி நாளில் பொங்கி வழி பாடு செய்யும் முறை உள்ளது.என் இளமைக்காலத்தில் ஏடு பார்த்து படித்ததை கேட்டிருக்கிறேன் .

பின்னைய நாட்களில் நானே உறவினர்களின் மரண வீடுகளில் வைகுந்த அம்மானை பாடியிருக்கிறேன்.வைகுந்த அம்மானை என்றதும் எனக்கு செல்லையா பெரிய அப்புவும்,நாகராசா அண்ணாச்சியும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.மட்டக்களப்பிலும் இந்த மரபு காணப் படுகிறது தம்பலகாமத்திலும் பள்ளிக்குடியிருப்பிலும் கொட்டியாரத்தின் பல கிராமங்களிலும் இதன் இதன் நீட்சியயை அவதானிக்க முடியும் இன்று வரை எங்கள் ஊரில் தொடரும் ஒரு மரபு.இதை படித்தால் செத்தவர்கள் வைகுந்தம் போவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது நம்பிக்கைதான் மனித வாழ்வை நகர்த்தி செல்கிறது.

அம்மானை ஆடலில் தொடங்கிய ஒரு பண்பாட்டு வேர் ஆற்றுப் படுத்தும் ஒரு மரபாக இன்று வரை தொடர்வது பண்பாட்டுப் படர்ச்சிதான்.
சங்க காலத்தில் தொடங்கிய ஒரு மரபு இன்றைய சேனையூர் கட்டைபறிச்சான் வரை நீள்வது ஒரு மரபின் நீட்சியே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி