வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

1.சேனையூர் குறவஞ்சி



1.சேனையூர் குறவஞ்சி

களியாறு வளைந்தோடி கானகத்தை நனைக்கும்
எழில் காட்டும் பூக்களெல்ல்ம் தேன் சிந்தி மணக்கும்
கமுகோடு தென்னையிங்கு
காற்றோடு மோதும்

புன்னையொடு பன்னீரும்
பூக்களால் நிறைக்கும்
மந்தியது பாய்தோடி
கண்ணாவை முறிக்கும்

மானினங்கள் மறித்தோடி
தேன் கூட்டை நெரிக்கும்
குயில் பாட மயில் ஆடி
கொடு மழையும் பெய்யும்

மாவலியாள் தாலாட்டும் மருங்கு பெருவூராம்
சேனையூர் என்றோதும்
பழம் பதியாம் அதுவே
திருகோண மலை எங்கள்
பெரு மலையாம் அம்மே

தென்னமரவாடி எங்கள்
கொழுனன் ஊர் அம்மே
தம்பலகாமம் எங்கள்
தந்தையூர் அம்மே

கறி மூடி மலை எங்கள்
கதை சொல்லும் அம்மே
மயில் கூடி ஆடி வரும்
மயிலி மலை அம்மே

கயலேறி விளையாடும்
சம்புக்களி அம்மே
கவி சொல்லி பாடி வரும்
மருதடியூர் அம்மே

அழகெல்லாம் ஒரு சேர்ந்த
சேனையூர் அம்மே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி