வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

முசோலினிகள் மீண்டும் பிறப்பெடுத்து

முசோலினிகள்
மீண்டும் பிறப்பெடுத்து
வடிவ மாற்றமெடுத்து
வலம் வருகிறார்கள்
ஹிட்லர் சிங்கங்களும்
சிங்காரப் பொட்டிட்டு
புன்னகை பூத்து
பூவுக்குள் பூகம்பமாய்
வஞ்சக சூதாடி
துரோபதைகளை
துகிலுரியும்
துரோக ஆட்சியாய்
அதிகார மமதையும்
ஆளும் அவலச் சுவை
சொல்லும்
துயரப் பாடல்கள்
அன்ரிகனியும்
ஈடிப்பசும்
மீளுருவாக்கம்
பெறுகிறார்கள்
அன்ரிகனியாளாயும்
சூனியக் கிளவிகளாயும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி