வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 10 March 2018

அன்னையே உன் உதிரத்தில் உதித்து எழுந்த மொழி நான்

இன்று என் அன்னையின் 78ஆவது பிறந்த நாள்

அன்னையே உன்
உதிரத்தில் உதித்து
எழுந்த மொழி நான்
நாளை இங்கு மேற்குலகில் அன்னையர் தினம் இன்று என் அன்னையின் நாள்.அவள் மடி தன்னில் விழி மூடி கனவுகளை காதோரம் விதைத்து வித்துவ தத்துவம் சொல்லித் தந்த உத்தம பெண் அவள் .
நேற்று முன் தினம் மகளீர் தினம் சாதனைப் பெண்கள் பற்றி தொலைக் காட்சிகளும் சமூக ஊடகங்களும் விருதுகளாலும் புகழுரைகளாலும் நிறைத்து நின்றன.என் அன்னையும் ஒரு சாதனைப் பெண்தான் தன்னை ஒறுத்து தன் பிள்ளைகளை வளர்த்தவள் என்னை பார்த்து பார்த்து செதுக்கிய சிற்பி அவள்.
அமைதியும் அன்பும் அவள் மொழிகள் விழி தூங்கா இரவுகளும் அவள் வாழ்வில் எங்களுக்காய் பாடிய தாலாட்டும் தண்ணெழில் அன்பும் எங்கு
ம் பெறாத இன்பக் காலங்கள்.
சலித்துக் கொள்ளாத அவள் மனம் வாழ்வை அவள் எதிர் கொண்ட திறன் எதற்கும் கலங்காத உறுதியும் உரமும் கொண்ட சலனங்களால் சஞ்சலப் படாத அமைதிப் பெண்.
அறிவின் முதல் கரு அவள் எனக்கு சொல்லித் தந்தவை சவால்களை எப்படி சமாளிப்பது என்பது அவள் வாழ்வின் முன்னுதாரணமாய் சொல்லித் தந்த பாடம் .
பல்லாயிரம் மைல்களுககு அப்பால் நான் இருந்தாலும் இந்த இனிய நாளில் மாத்திரமல்ல என்னாளும் உங்கள் நினைவோடு கலந்து தொலை பேசி எடுத்ததும் தம்பி என்ற உங்கள் கனிந்த சொல்லுக்காய் ஆயிரம் கோடி முறை உங்கள் மகனாக பிறப்பெடுப்பேன்.
பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி