வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

இசைக்க மறந்த இந்திர நீலப் பூ..... அஞ்சலி இசை வாணர் திருமலை பத்மனாதன்

இசைக்க மறந்த இந்திர நீலப் பூ.....
அஞ்சலி
இசை வாணர் திருமலை பத்மனாதன்



ஈழத்தின் இசை வாணர் திருமலை பத்மநாதன் வியத்தகுது ஆளுமைகளில் ஒருவர்.ட்கிருமலை மண் பெருமைப் படும் இசை ஆளுமை..
ஈழத்து இசை என அடையாளப் படுத்தக் கூடிய தனித்துவமான பாடல்களை இசையுலகுக்கு தந்து தன் இசைத்துவத்தை வெளிப்படுத்தியவர்,
அவரது பாடல்கள் பல கால வெள்ளத்தை கடந்து நிற்கும்
நிர்மலா படத்தில் அவர் இசையில் மலர்ந்த கண்மணி ஆடவா பாடல் நம் காதுகளை நிறைக்க .
தென்றலும் புயலும் படத்தில் தென்றலாய் வருடிய
சந்திர வதனத்தில் இந்திர நீலப்பூ பாடல் இசஒ ஈழம் முழுவதும் என்றும் நிலைத்திருக்கும் .
போய் வா எங்கள் கலைஞனே
கண்டு கொள்ளப் படாத கலை ஆளுமை
என் முக நூலில் இந்த ஆண்டு நான் திருமலை பத்மநாதன் பற்றி எழுதிய குறிப்பிலிருந்து
திருமலை பத்மநாதன்
ஈழத்து கலை இலக்கிய வரலாற்றில் திருகோணமலை பல முன்னோடிகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது . . . .
சோதிதிட நூல்களையும் வைத்திய நூல்களையும் தவிர்த்து ஈழத்து இலக்கிய வரலாற்றை பார்க்கிற போது திருக்கரசைப் புராணமே முதல் இலக்கிய நூலாக வந்து அதனை பாடிய புலவன் திருகோணமலைக்கு பெருமை சேர்ப்பதைப் பார்க்கலாம்.
ஈழத்தின் முதல் நாவல் "உசேன் பாலந்த"திருகோணமலை இன்னாசித்தம்பியால் எழுதப் படுகிறது,தமிழின் முதல் சரித்திர நாவல் திருகோணமலை சரவணப்பிள்ளையின் ''மோகனாங்கியே"
ஈழத்து மெல்லிசையின் முன்னோடி முயற்சிகள் பல திருகோணமையிலேயே கருப் பெறுகின்றன.மெல்லிசை சக்கரவர்த்தி எனப் பாராட்டப் படவேண்டியவர் திருமலை பத்மநாதன் என அழைக்கப்படும் தாமோதரம்பிள்ளை.பத்மநாதன்
1964ம் ஆண்டு தன் நண்பர்கள் இமானுவேல்,லோப்பஸ்,பிறெமதாஸ் ,லோகநாதன்,துரைலிங்கம் ஆகியோருடன் இணைந்து திருக்கோணமலை இசைக்கழகம் எனும் பெயரில் ஒரு மெல்லிசைக் குழுவை ஆரம்பிக்கிறார்.
கர்நாடக சங்கீதம்,மேலைத்தேய இசை ஆகியவற்றில் புலமை பெற்றதோடு பலவிதமான இசைக் கருவிகளையும் வாசிப்பதில் வல்லவரா இருந்தார் .இசையின் மீதான காதல் இவரை ஒரு இசை வெறியராகவே வெளி உலகு கண்டது.
இலங்கையின் பல இடங்களிலும் இவரது இசைக் கச்சேரி அந்த நாட்களில் புகழ் பெற்றதாக இருந்தது.
திருகோணமலையின் கிராமங்களில் இவரின் இசை வாசம் வீசியது.
அன்றய நாட்களில் நாட்டின் பல பகுதிகளிலூம் இசைக்கழகங்கள் பரவலாக இயங்கின அவை எல்லாம் தென்னிந்திய சினிமாப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இவர் தானே படல்களை இயற்றி தானே இசையமைது மேடைகளீல் பாடினார்.
ஈழத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் மெல்லிசை இவரிடமிருந்து உயிர் பெற்றது.
திருகோணமலை கவிராயரது கவிதைகள் இவரது இசையில் நல்லிசையாய் மலர்ந்தது.இவரது திறனை கொழும்பு நிகழ்வொன்றில் கண்ட ரகுநாதன் தனது நிர்மலா படத்துக்கு இசையமைக்க அழைத்தார்.''
வா என் காதல் நிலவே " "நுரை பெருகும்""கண்மணீ ஆடவா" ஆகிய பாடல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன குறிப்பாக கண்மணி ஆடவா பாடல் தென்னிந்திய சினிமாக் கலைஞர்களையும் கவர்ந்ததாக ரகுநாதன் குறிப்பிட்டதாக திருமலை நவம் தன்னுடய நூலில் குறிப்பிட்டுள்ளார்
"கண்மணி ஆடவா" என்ற பாடலே ஈழத்து தமிழ் பொப்பிசையின் முன்னோடி என குறிப்பிடலாம் . .
ஈழத் தமிழ் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க படமான "தென்றலும் புயலும்"படத்துக்கு இவரே இசையமைப்பை மேற்கொண்டார் . . .
இவரது இசைக்காகவே படம் பெரிதும் பேசப் பட்டது எனலாம்.
இப்படத்தில் வரும் ''சந்திரவதனத்தில் ஒரு இந்திர நீலப் பூ,"துணை தேடி வந்த பறவை,இயற்க மகள்,அரும்பான காதல் " ஆகிய பாடல்கள் தென்னிந்திய இசைக்கு சவால் விடும் பாடல்களாக அமைந்தன.
இலங்கை வானொலியில் பல மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்து ஈழத்து இசையின் தனித்துவத்தை வெளிப்படுத்தியிருப்பார் பத்மநாதன் .
அவரது பல பாடல்கள் இன்றும் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிப்பதை மறுக்க முடியாது.
கே.கே.மதிவதனன் பாடல் இயற்ற ரி.கிருஸ்னனும் கலாவதியும் பாட "சொல்லத்தான் நானும் " எனும் பாடல் உலகப் புகழ் பெற்றது .
இந்த மகா கலைஞனை நாம் மறந்து விட முடியுமா அந்த அற்புத இசைக் கலைஞனுக்கு வாழ்த்துக் கூறி கொண்டாடுவோம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி