வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 4 March 2018

தங்கத்துரை அண்ணன்

தங்கத்துரை அண்ணன்
தங்கத்துரை அண்ணன் இறந்து 19 வருடங்கள் கடந்து விட்டன ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படியே உள்ளது.இதே நாளில்தான் (05.07.1997)தங்கத்துரை அண்ணன் உட்பட சண்முகாவித்தியாலய அதிபர் இராஜேஸ்வரி,கூனித்தீவின் மூத்த அதிபர் ஜீவரத்தினம் என பல கல்வியாளர்களும் படுகொலை செய்யப் பட்ட நாள்.
அண்ணன் தங்கத்துரை அடிப்படையில் இடதுசாரி கொள்கையில் நாட்டம் கொண்டவர் கொழும்பில் வேலை செய்கிற போது சமஜமாஜி தொழிற்சங்கத்துடன் இணைந்து பணியாற்றியவர் இலங்கையின் பல இடது சாரி தலவர்களுடனான நட்பு அவருக்கிருந்தது.
மூதூர் தொகுதி அரசியல் பிரதிநிதித்துவம் தங்கதுரை அண்ணனுக்கு முன்பு மூதூரை சாராதவர்களாலேயே ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.1970ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் மூதூர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவராக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிறார்.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் இயங்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் தங்கத்துரை என்றால் அது மிகையன்று.
மூதூர் தொகுதியில் இன்று வரை அவர் சாதனையயை மிஞ்சியவர் எவருமிலர்.மூதூர் தொகுதியின் படித்த இளைஞர்கள் அவர் காலத்திலேயே பெருமளவில் அரச உத்தியோகங்களை பெற்றுக்கொண்டனர்.பல அபிவிருத்தி திட்டங்கள் அவர் காலத்திலேயே மேற் கொள்ளப்பட்டன.
1977ல் புதிய தேர்தல் தொகுதி வரைவில் முல்லைத்தீவு தொகுதியை வடமாகாணத்தில் பெற்றுக் கொண்டு மூதூர் தொகுதியயை தாரை வார்த்தது தமிழர் கூட்டணி.இரட்டை அங்கத்த்கவர் முறை நீக்கப் பட்டு சேருவில தொகுதி உருவாக்கப் பட்டிருந்தது.
திருகோணனலை மக்களின் ஏகோபித்த எதிற்பையும் மீறி சம்பந்தருக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்கப் பட்டது.சொல்லப் பட்ட காரணம் சம்பந்தர் அப்புக்காத்து என்பது.பின்னாளில் அதே நெஞ்சுரத்துடன் படித்து சட்டத்தரணியாகிறார் அண்ணன் தங்கத்துரை.
1970ம் ஆண்டு நான் 10ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம் அண்ணன் தங்கத்துரை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்துக்கு சேனையூர் வருகிறார் அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி என தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தன.ஆனாலும் மூதூர் தமிழ் மக்கள் தங்கத்துரை அண்ணன் பின்னாலேயே அணி திரண்டனர்.
சேனையூர் பிள்ளையார் கோயில் முன்றலில் முதல் கூட்டம் பல முன்னணி தலைவர்களுடன் தந்தை செல்வாவும் கலந்து கொள்கிறார் நானும் அக்கூட்டத்தில் பிரசார உரையாற்றுகிறேன்.கட்டைபறிச்சான் கனகசிங்கம் ஆசிரியர்,என் ஆசிரியர் செ.விபுணசேகரம் ,அண்ணன் கெங்காலிங்கம் ஆகியோர் பிரசார களத்தில் அணிசேர்கின்றனர் அத்தோடு என் மாமா நாகேஸ்வரன்,நண்பன் இரா.இரத்தினசிங்கம் என அண்ணன் தங்கத்துரைக்காக பல மேடைகளில் பேசுகிறோம்.
சம்பூரில் குழந்தவேல் மாஸ்ரர்,மணி,சித்திரவேலாயுதம்,மூதூரில் பூபா.மதுரநாயகம்,புண்ணிய மூர்த்தி,குலேந்திரன்,அன்ரனி டொக்டர் பள்ளிக்குடியிருப்பில் இரத்தினசிங்கம்,மல்லிகைத்தீவில் பாலசிங்கம் ,சிற்றம்பலம்,நடேசபிள்ளை,
பட்டித் திடலில் யோகேந்திரம்,கவிஞன்,மேங்காமத்தில் கிருபை,
கிளிவெட்டியில் தவகுமார்,துரை,கணேஸ்என மூதூர் தொகுதி எங்கும் அண்ணன் தங்கத்துரையின் வரவு அரசியலில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
என் அப்புச்சி தீவிர தமிழரசுக் கட்சி வெறியர் என்று சொல்லலாம் அண்ணன் தங்கத்துரைக்காகாக மிக தீவிரமாக செயல் பட்டார் எங்கள் வீட்டுக்கு நன்றி சொல்ல வந்த போது அப்புச்சி கையைப் பிடித்து நன்றி சொன்ன காட்சி பசுமை நினைவாய் உள்ளது.
1972ல் குடியரசு யாப்புக்கு எதிரான உண்ணாவிரத போராட்டங்களுக்கு தலைமை தாங்கி மூதூர் தொகுதியெங்கும் இளைஞர்களை அணி திரட்டியவர்,அண்ணன் தங்கத்துரை. அவர் மூட்டிய கனலே பின்னாளில் இயகங்கள் மூதூர் பிரதேசத்தில் வெற்றிகரமான செயல் பாட்டிற்கு தளம் அமைத்தன எனலாம்.
1981 மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் அண்ண் மிகப் பெரிய வெற்றி பெறுகிறார்.அந்த நாட்களில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்துக்காக அவருடன் பயணித்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்.
மூதூர் பிரதேசத்தில் ஆரம்ப நாட்களில் ஈழ விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியில் முக்கிய ஆதரவு தளமாக அவர் இருந்தார் குறிப்பாக ஈழப்புரட்சி அமைப்பின் தோழர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.இறுதி வரை எத்தனை இடர்கள் வந்த போதும் தன் கட்சிக்கு விசுவாசமாயிருந்த ஒருவர் கொண்ட கொள்கை மாறா தலைவர் அவர்.
அவர் காட்சிக்கு இனியன் கடும் சொல் பேசா பண்பாளன் ,எப்போதும் சிரித்த முகம்.அவர் வாயில் முடியாது என்ற வார்த்தை வரவே வராது.எல்லோருடனும் சகஜமாக பழகும் சுபாவம்.அகம்பாவமற்ற அரசியல்.மற்றவரை மதிக்கும் பண்பு அதிகாரத் தொனியற்ற தோழமை அரசியல் .
இறுதியாக 1995ல் தோழர் பற்குணத்தின் மரண வீட்டில் சந்தித்தமை நீண்ட உரையாடல் திருகோணமலையில் தனி பல்கலைக் கழகம்,மூதூரில் ஒரு தொழில் நூட்ப கல்லூரி என பல கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.
கொட்டியாரத்தின் அரசியல் தலை மகனுக்கு தோழமை மிக்க அஞ்சலிகள்.
LikeShow More Reactions
Comment
52 comments
Comments
Saravanan C Sambasivam
Saravanan C Sambasivam அருமையா பதிப்பு - ஒரு சரித்திர பதிவும்கூட!
Manage
· Reply · 1y
Vijaya Baskaran
Vijaya Baskaran தமிழ் தேசியம் பேசிய அரசியல்வாதிகளில் இனத்துக்காக பணியாற்றி,அதற்காக உயிரையே அர்ப்பணிக்கத் துணிந்து சிறைச்சாலைக்கு சென்ற அரசியல்வாதி இவரே.இவர் 1977 இல் சுயேட்சையாக நின்றிருந்தாலும் வென்றிருப்பார்.அந்தளவு மக்கள் செல்வாக்கு இருந்தும் இன ஒற்றுமை,கட்சி ஒற்றுமை காரணமாக கட்சிக்காக பணியாற்றினார் .-----எனக்குசம்பந்தனை நினைக்கும்போதும் இந்தப் பாடல் நினைவுக்கு வரும்--பதவிக்கு ஆசை வந்தால் கொலை கூட தர்மம் தானே.
Manage
· Reply · 1y
Paheerathan Kuna
Paheerathan Kuna · 52 mutual friends
அப்ப அந்த மாதிரி ஏதும் டீ ல் இருந்திருக்குமோ.
Manage
· Reply · 1y
Vijaya Baskaran
Vijaya Baskaran நான் தங்கத்துரை கொல்லப்பட்ட பின் சம்பந்தன் பதவி ஏற்றதை நினைக்கும்போதே அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.பதவிக்கு ஆசை வந்தால் கொலை கூட தர்மம் தானே.
Manage
· Reply · 1y
Noble Thurai Anthony
Noble Thurai Anthony நன்றி. எனுக்கு ஞாபகம் இருக்கின்றது 1977ல் தமீழர் விடுதலை கூட்டணியில் போட்டியிட்டது மக்கீன் சேர், அப்போது எனக்கு 10 வயது
Manage
· Reply · 1y
Raguvaran Balakrishnan
Raguvaran Balakrishnan அருமையான பதிவு
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Selvadurai Perinpanayagam
Selvadurai Perinpanayagam Thank you for remembering a great soul.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Kumar Vadivelu
Kumar Vadivelu · 42 mutual friends
மிகவும் அருமையான பதிவு
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Ramasamy Thurairatnam
Ramasamy Thurairatnam தங்கத்துரை அவர்களை புலிகள் ஏன் சுட்டார்கள் என்பதற்கு யாராவது காரணம் சொல்ல முடியுமா?
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Subaharan Thampaiya Subash
Subaharan Thampaiya Subash முடியும் ஆனால் முடியாது.ஏன் கொன்றார்கள்..யார் தூண்டியது எல்லாம் தெரியும்.அதன் சூத்திரதாரி ஒரேயொருவர்தான் இப்போது உயிரோடு உள்ளார்.ஏனையோர் போய்விட்டார்கள்..அதில் ஒருவர் புது வீடுகட்டி அந்த வீட்டில் வசிக்கமுடியாமலே நாற்காலியில் இருந்தவாறே தனது உயிரை மாய்த்தார்.அரசன் ஆண்டு கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்..
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Renu Kasan
Renu Kasan அமர்ர் தங்கத்துரை மட்டுமல்ல அண்ணன் ரவிராஜ் ஐயா ஜோசப் பர்ராஜசிங்கம் போன்றோரின் இறப்புக்கு இந்த நபரின் கரங்கள் குத்தியிருக்கு
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Gopalasingam Poopalapillai
Gopalasingam Poopalapillai cமிக அருமையான பதிவு மனமார்ந்தநன்றி அண்ணன்தங்கத்துரை மறக்கமுடியாதஎங்கள்மாமனிதமானிக்கம். தகுதியிருந்தும்,பணபலமும்,அரசியல்பலமுமின்றி அரசபதவிபெறமுடியாதிருந்தபலரை அரசபணிகளிலமர்த்திபலகுடும்பங்களின் வருமையைப்போக்கியபண்பாளர் அவர் இன்றிருந்திருந்தால் இன்றையசூழலில்,தலைமையேற்றிருப்பார். பலதலைமைகள்.மக்களினால்மறக்கடிக்கப்பட்டிருப்பார்கள்.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Divakalala Sundaram
Divakalala Sundaram It is not that easy to replace Thanka. I can remember the day and unfortunate and foolish act, when I went to the hosital within very few minutes, I felt my best friend was sleeping, what a pity. If Thanka is alive he should have be our leader. He was leader witha common man touch and in feeling.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nalinakanthan Kumarasamy
Nalinakanthan Kumarasamy tharisanam mikka thalyver
Manage
LikeShow More Reactions
· Reply · See translation · 1y
Nalinakanthan Kumarasamy
Nalinakanthan Kumarasamy kilivaty mahavidiyalayam.Thangathuri Mahavidiyalayam kilivety enna peyar(NAME) marttaam seiyappada verndum,ithu averukku narm seiyum gowravem(respect) arhum nanbarkalay,
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Tharisanam Toc
Tharisanam Toc பதவிக்காக கூலிப்படையால் கொல்லப்பட்ட மாவீரனூக்கு புரட்சிகர வணக்கங்கள்
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Param Nandha
Param Nandha He was a true parliamentarian.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
நிந்த மணாளன்
LikeShow More Reactions
· Reply · 1y
Daya Mayuran
Daya Mayuran சுகுமார் ஐயா! எங்கய்யா இருக்கிறியள் அருமையான பதிவு எழுதுங்கள் எழுதுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணனை எக்காலத்திலும் தோற்கடிக்க முடியாது எனும் காரணத்தினால் என்னவோ மூதூரான் வேடன் என்று கொச்சைப்படுத்தியவர்களுக்கு இன்று சிலர் கொடி பிடிக்கின்றனர் அவரது கட்சியே இச்சேவையாளனை மறுத்துரைக்கின்றது அப்படி ஒருவர் இருந்தாரா? எனஇளைய சமூகம் கேட்குமளவிற்கு.நானும் இங்கு ஒரு விடயத்தை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன் 1994ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலை திருமலை மாவட்டத்தில் எதிர்கொள்ளவேண்டுமென கட்சி என்னைப்பணிக்கின்றது நான் பிறந்த மண் சம்பூருக்குச்
சென்று உறவுகளோடு உரையாடிக்கொண்டிருக்கையில் என்னுடன் வந்த நண்பர் எனதந்தையாரிடம் நான்தேர்தலில் போட்டியிடவிருக்கும் செய்தியை தொிவித்தபோது தங்கத்துரைக்கே எனது வாக்கு எனப்பதில் அமைந்தது அம்முறை எனது கட்சி திருமலை மாவட்டத்தில் போட்டியிடவில்லை அத்தேர்தலை நான் சந்தித்திருந்தால குடும்பவாக்கே விழுந்திருக்கமாட்டாது என்பதே உண்மை இவ்வாறான சரித்திர புரிசரை மறந்து இன்று சிலர் செயற்படுவது கவலை தரும் விடயமாகும்.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y · Edited
Chelvaranjan Chellathamby
Chelvaranjan Chellathamby மான்பு மிகு மனிதன்.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Thulasi Pathman
Thulasi Pathman என்னுடைய 6 (1996)வயதில் குமாரபுரத்தில் எங்களுடைய உடலிலுள்ள,ஆடையிலுள்ள இரத்தமும் காய முதல் ஓடோடி வந்தவர். அழியாத நினைவு
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Chenthooran Kalirajah
Chenthooran Kalirajah சிறப்பான பதிவு
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nadesalingam Sabapathippillai
Nadesalingam Sabapathippillai என் அண்ணனின் மாற்றுஎன்பது பேச்சுக்கேஇடம்இல்லை
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Ahilan Croos
Ahilan Croos Exactly. I strongly agree with your statement.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Mohammed Faiz
Mohammed Faiz sir, thanks for your information.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Suntharalingam Sivasankaran
Suntharalingam Sivasankaran தங்கத்துரை MP யின் ஆழத்தைக் காட்டியிருக்கிறீர்கள். உண்மையில் மிகவும் அருமையான பதிவு. அரசியலில் கூசா தூக்குவதுதான் அடிப்படை என்று திரியும் அரசியல் வாதிகளுக்கு இவரின் அரசியல் கணக்குகள் சிறந்த பாடமாக இருக்கும் என் நம்புகிறேன்.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Thangavel Jeyakanthan
Thangavel Jeyakanthan · 2 mutual friends
Ella arasijal vathikalum niraija vidaijankala solla varenkal ! Enkada makkalra apilasaikala jaravathu niraiveththija erukkinka? C vedkam
Manage
LikeShow More Reactions
· Reply · See translation · 1y
Yogendrean Vaheeshan
Yogendrean Vaheeshan அருமையான பதிவு.. எனது தந்தை யோகேந்திரனையும் தங்கள் பதிவினூடாக நினைவூட்டியமைக்கு நன்றிகள்..
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Kandiah Thavarajah
Kandiah Thavarajah சுகுமார் தங்கத்துரை அண்ணன் தொடர்பான பதிவுக்கு முதலில் நன்றிகள்
தூய்மையான அரசியல் வாதிக்கு முன்னுதாரணம்.தமிழ்த்த்தேசியம் மூதூரில் வேரூன்ற வித்தாக இருந்தவர்.அவரது மறைவு நியாயப்படுத்த முடியாத ஒன்று.
அவரை நினைவுபடுத்த வேண்டியவர்கள்

மறந்தாலும் அவரை நேசித்த எம்போண்றவர்களுக்கு நினைவுபடுத்தியதற்கு மீண்டும்நண்றிகள
ஒவ்வொரு மூதூரானின் மனங்களிலும்தங்கத்துரை அண்ணண் நிலையாக வாழ்வார்
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nageswaran Kumarasami
Nageswaran Kumarasami அண்ணன் சாதித்தவற்றில் நூற்றில் ஒன்றை சாதித்தாலே அது இன்றய அரசியலில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமையும் அரசியலில் அண்ணனின் வரவும் அவர் பதித்த தடமும் மூதூரில் என்றும் அழியாத வரலாறு அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பாதவரை திருமலைமாவட்ட தமிழர் அரசியலில் தொய்வு நிலையே தொடரும் அண்ணனுக்காய் அஞ்சலிப்போம்
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Subaharan Thampaiya Subash
Subaharan Thampaiya Subash இவரின் திருவுருவச்சிலைய கிளிவெட்டியில் நிறுவுவதற்கு சிலர் முன்வந்த போது அதனைத் தடுக்கும் முகமாக மூதூர் பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டு நிறுவுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஒரு மேலிடம் அச்சுறுத்தியதாக ஒரு செய்தி அடி படுகின்றதே அது பற்றி அறிந்தீர்களா அத்...See more
Manage
LikeShow More Reactions
· Reply · 1y · Edited
Nazeer Mohamed
LikeShow More Reactions
· Reply · 1y
Nazeer Mohamed
LikeShow More Reactions
· Reply · 1y
Sivalingam Arumugam
Sivalingam Arumugam அருமையானதும் அவசியமானதுமான பதிவு! வாழ்த்துக்கள்!!
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Anish Rai
Anish Rai இந்த படுகொலைக்குள் ஒழிந்திருக்கும் சூச்சுமங்களை நானும் நன்கறிவேன்... அதில் மறைமுக பிரதேசவாதமும் ... சாதியமும்கூட ஒழிந்திருந்ந்து திருகோணமலை மண்ணை மண்ணின் மைந்தர்களா ஆளுகிறார்கள் எல்லாம் வந்தான்வரத்தான்தானே ஆளுகிறார்கள் .... ஈழ விடுதலை நாசமாய்ப்போனதே யாழ்ப்பாண வஞ்சக நஞ்சக கஞ்சக மனோபாவம் கொண்ட சமூகத்தினால்த்தானே ஒழிய வேறயாராலுமல்ல... இன்னும் இன்னும் எழுத எனது கை தூண்டுகிறது ஆனாலும் தமிழர்களின் ஒற்றுமை கருதி என் கரங்கள் மறுதளிக்கின்றன.....
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Sandralingam Kanapathipillai
Sandralingam Kanapathipillai தங்கத்துரை அண்ணன் தொடர்பான அவசியமானதுமான பதிவு நன்றி
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nadesalingam Sabapathippillai
Nadesalingam Sabapathippillai இவர் உயிருடன்இருந்தால் எமக்கு அரசியல் இல்லைஎன்று எண்ணிய மோசமான அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைஇது இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா . அண்ணன் கொலைசெய்யப்பட்ட போது ஒரு BBC வெள்ளைக்கார நிருபர் " திருகோனமலை தமிழ் மக்கள் தங்களது சிறந்த மனிதரை இழந்துள்ளார்கள்" என்று சொன்னான் . அண்ணன் படுகொலை நடந்தபோது நான்சிலரை குறிப்பிட்டுசொன்னபோது அதைஎனது இட்டுகதைஎன்று சொன்னார்கள். ஆனால்அது உண்மைஎன அவர்கள் சந்தேகத்தின்பேரில் இலங்கை காவல்துறை விசாரித்த போது உண்மைவந்தது
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nadesalingam Sabapathippillai
Nadesalingam Sabapathippillai இவர் உயிருடன்இருந்தால் எமக்கு அரசியல் இல்லைஎன்று எண்ணிய மோசமான அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைஇது இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா . அண்ணன் கொலைசெய்யப்பட்ட போது ஒரு BBC வெள்ளைக்கார நிருபர் " திருகோனமலை தமிழ் மக்கள் தங்களது சிறந்த மனிதரை இழந்துள்ளார்கள்" என்று சொன்னான் . அண்ணன் படுகொலை நடந்தபோது நான்சிலரை குறிப்பிட்டுசொன்னபோது அதைஎனது இட்டுகதைஎன்று சொன்னார்கள். ஆனால்அது உண்மைஎன அவர்கள் சந்தேகத்தின்பேரில் இலங்கை காவல்துறை விசாரித்த போது உண்மைவந்தது
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Balasingam Sugumar
Balasingam Sugumar நண்பர்களே ,தோழர்களே அண்ணன் தங்கதுரை பற்றிய பதிவுகளை சேகரித்து கொண்டிருக்கிறேன் அவர் பற்றிய நினைவு மலர் விரைவில் வெளி வர இருக்கிறது அது திருகோணமலை நகரிலேயே வெளியிட்டு வைக்கப் படும் அவருடனான அனுபவங்களையும் அவர் பற்றிய நினைவுகளையும் எனது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் sugubala18@gmail.com
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Vimalendran Barathithas
Vimalendran Barathithas தமிழ்த் தேசிய செவ்வியல் வரலாற்றை இப்படியான தனிமனித போராட்ட அரசியல் வாழ்க்கை பற்றிய கருத்தாடல்களில் இருந்துதான் தொகுத்தாக்க வேண்டும். நன்றி சேர்
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Varnakulanathan Tharmabavan
Varnakulanathan Tharmabavan அனைவரும் வருந்துகிறோம் திருமலையின் வெற்றிடத்துக்காக.

மூதுர் (ஈச்சிலம்பற்று உள்ளடங்ஆரம்கலாக) தமிழ் அரசுக் கட்சியிலும், பின்னாளில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் தீவிர செயற்பாட்டாளர்கள் விபரங்கள். தற்போது பலர் தமிழரசுக்கட்சியை தாமே உருவாக்கி வளர்த்ததாக
மார்தட்டிக்கொள்கிறார்கள் பலர் தமது ஆசனச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவே கட்சியில் இணைந்தார்கள் .எப்போதும் இவ்வாறான பதிவுகள் உண்மைகளை புலப்படுத்தவும்.எமது விருப்பு வெளியிலும் பார்க்கப்படும் அவசியமாகிறது. இணைக்கப்படுதல் அவசியம். பிரதேச வாதம் பேசமுனையவில்லை இருப்பினும் ஒன்றை உணர்த்துகிறேன். தேர்தல் பட்டியல் தயாரிப்பில் அனைவரும் மூதூர் பிரதேச அங்கத்தவர்கள் தமது பெயரை உட்புகுத்த முனைவதைத் தவிர்த்து . சிந்தித்து செயலாற்றுவது உசிதமான பலனைப்பெறலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
Manage
LikeShow More Reactions
· Reply · 49w · Edited
Thajeswaran Sithiravelautham
Thajeswaran Sithiravelautham மாமனிதர். அருமையான பதிவு என்னுடைய அப்பாவின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (சித்திரவேலாயுதம்)
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Sivarajah Sijethara
Sivarajah Sijethara இவருக்கு மாமனிதர் பட்டத்தை யார் கொடுத்தார்
Manage
LikeShow More Reactions
· Reply · 52w
Thajeswaran Sithiravelautham
Thajeswaran Sithiravelautham தமிழ்பேசும் மக்கள்
Manage
LikeShow More Reactions
· Reply · 52w
Sivarajah Sijethara
Sivarajah Sijethara இந்த துரோகியை எந்த மானமுள்ள தமிழனும் எற்கமாட்டன்
Manage
LikeShow More Reactions
· Reply · 52w
Nazeer Mohamed
Nazeer Mohamed மனிதம் நேயம் கொன்ட ஒரு தனித்துவ தமிழ் அரசியல் தலைவன்
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nazeer Mohamed
LikeShow More Reactions
· Reply · 1y
Thava Prem
Thava Prem மூதூரின் முத்தாக இன்றும் கூட மதிக்கப்படும்.. மாமனிதர்
தங்கத்துரை ஐயா...
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nazeer Mohamed
Nazeer Mohamed அழிக்கப்பட்டடது உடல் மட்டமே ஆண்மா என்றும் எம்மோடு தான்
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Mam Faizar
Mam Faizar · Friends with Edwerd Fernando and 3 others
மனித நேயம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த அரசியல்வாதி அரசியல் வரலாற்றில் சானாக்கியம் பெற்று சொல்லால் மட்டும் காலத்தை வீனடிக்காது செயாலால் செய்து காட்டி வாழ்ந்து மரணித்த ஒரு நல்ல அரசியல் வாதி.
தங்கத்துரை ஐயா.....
Manage
LikeShow More Reactions
· Reply · 1y · Edited
Balakrishnan Kailayanathan
LikeShow More Reactions
· Reply · 1y
Prashankee Umashankar
Prashankee Umashankar பதிவுக்கு நன்றி.
Manage
LikeShow More Reactions
· Reply · 52w
Ponnampalam Mathavan
Ponnampalam Mathavan அருமையான பதிவு, மிகவும் வேதனை அவர் விட்ட இடைவெளியை நிரப்ப எம் மக்களுக்காக உழைக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும்.
Manage
LikeShow More Reactions
· Reply · 51w
Sk Kopal Senthooran
LikeShow More Reactions
· Reply · 45w
Jeevarupan Jeeva
Jeevarupan Jeeva தங்கத்துரை தங்கம்தான் தமிழ் அரசியலில் தலைசிறந்த தலைமகன் என் நேசத்துக்குரிய அரசியல் ஆசான்
Manage
LikeShow More Reactions
· Reply · 45w
Vythilingam Kathiresu
Vythilingam Kathiresu · 66 mutual friends
தமிழ் பாசிசம் கொன்றொழித்த தன்னிகரில்லாத் தலைவன்.
Manage
LikeShow More Reactions
· Reply · 45w · Edited
Divakalala Sundaram
Divakalala Sundaram தங்காவின் இடத்தினை எவராலும் நிரப்ப முடியாது.
Manage
LikeShow More Reactions
· Reply · 18h
Amirthalingam Baheerathan
Amirthalingam Baheerathan அண்ணன் தங்கத்துரையின் பதிவு பார்த்து, படித்து பெருமிதம் கொண்டேன். நன்றி ஐயா. அவர் 1970இல் மூதுரில்்தமிழரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்ற போது அவரது பிரசார கூட்டத்துக்காக எனது தந்தை சென்றபோது முதல் தடவையாக அவரை பார்த்தேன். எத்தனையோ தடவைகள் அதன் பின்னர் அவரை சந்தித்தேன், 1977 தேர்தலில் பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் நடவடிக்கைகளில் , மாநாடுகளில், பின் இந்தியாவில் பல தடவைகள் சந்தித்து பேசியுள்ளேன் பழகியுள்ளேன். கடைசியாக எனது தந்தையின் வீட்டில் 1989ல், எனது தந்தை படுகொலை செய்யப்பட இரண்டு நாட்களின் முன் சந்தித்தேன். 1977ல் அவருக்கு திருமலையை வழங்க முடியாத இக்கட்டான நிலைமை பற்றி என் தந்தை பல தடவைகள் மன வருத்தப்பட்டார். மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் வந்த போது ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
பெயருக்கு ஏற்ற தங்கமான மனிதர். சிக்கலான தனது குடும்ப நிலைமையிலும் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர். எந்த காலத்திலும் கட்சிக்கோ, தான் சார்ந்த இயக்கத்திற்கோ, இனத்திற்கோ எதிராக செயல்படாத தூய்மையான மனிதர் . அன்னாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது உயிரை பறித்த சதியும், கனவான்கள் ஒப்பந்தமும், மிருக கூட்டமும் இறுதியில் சாதித்தது என்ன?.
Manage
LikeShow More Reactions
· Reply · 10h
Paul Sathianesan
Paul Sathianesan May the Good Lord Bless His Soul Rest in Peace Amen
Manage
LikeShow More Reactions
· Reply · 3h
Sivasubramaniam Ranjan
Sivasubramaniam Ranjan தங்கமான தமிழண்ணன் ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!, ஓம் சாந்தி

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி