வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

எதிர்ச் சொல்

எதிர்ச் சொல்
எப்போதும்
எனக்கு பிடித்தது
எதிர்ச் சொல்தான்
எல்லாச் சொல்லும்
பொருள் குறித்தனவே
ஆனால் எதிர்ச் சொல்
தரும் இன்பம்
எந்தச் சொல்லிலும்
நான் கண்டதில்லை

இலக்கியத்தில்
அரசியலில்
எதிர்ச் சொல்லே
எனக்கு
பழக்கப் பட்டு
போன ஒன்று
எதிர்த்து நில்
அனீதிக்கு
எதிராக
எதிர்ச் சொல்
பழகு
பல்கலைக் கழக
வாழ்வில்
மூதவை
பேரவையிலெல்லாம்
நான்
எதிர்ச் சொல்லாகவே
இருந்தேன்
இன்று வரை
அந்த
எதிர்ச் சொல்லின்
வாசம்
என்னில்
மணக்கிறது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி