வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

கூர் நெல் விளையும் கூனித் தீவு

கூர் நெல் விளையும்
கூனித் தீவு

கூனி வளைந்து
கூர் நெல் விளைந்து
வான் பொய்ப்பினும்
தான் பொய்யா
வில்லுக் குளத்தின்
விழியாய் நீண்ட
சொல்லும் செயலும் ஒன்றாய் வாழும்
மாண்புடை மனிதம்
கண்டு மகிழும்
எங்கள் கூனித்தீவு

வெள்ளை கல்லும்
காலடி கொண்டு
வரலாற்று முகத்தை
தன்னுடன் கொண்ட
பண்புடைத் தமிழர்
பண்டை தொட்டு
தொன்மம் மாறா
நன்புடை கொண்ட
அன்புடை மாந்தரின்
ஆதர்ச பூமி
எங்கள் கூனித் தீவு
கமுகும் வாழையும்
கனி தரும் பலாவும்
தென்னையொடு சாய்ந்து
தெருவெங்கும்
இனிக்க இனிக்க
பேசி மகிழ்ந்து
உபசரிப்பின்
உச்சம் தொட்ட
ஈழத் தமிழர்
வீரம் தொட்ட
எங்கள் கூனித் தீவு
குளங்களின் கொடையும்
குடி முறை வாழ்வும்
வகுத்துக் கொண்டு
வளமுடை நெறியில்
வரலாற்றில் சொன்ன
கோணேசர் கல் வெட்டின்
வளமை கொண்ட
இளமை மாறா
எழிலுடையூராம்
எங்கள் கூனி தீவு
ஏத்துக் கட்டி
நீர் இறைத்து
மாத்து நெல்லு
தான் விதைத்து
சோறுடைத்து
சொற்கம் கண்ட
வீறு கொண்ட
மறவர் போற்றும்
பேறு பெற்ற
எங்கள் ஊராம்
கூனித்தீவு என்னும் பேராம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி