வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 12 March 2018

அம்மச்சி அம்மன் அம்மன் நகர் கட்டைபறிச்சான்

அம்மச்சி அம்மன்
அம்மன் நகர் கட்டைபறிச்சான்

இன்று 29.07.2017 பரிகல வேள்வி
அம்மச்சி அம்மன் அமைந்திருக்கும் இடம் இயற்கை வனப்பு மிக்க பிரதேசம்.உலவியாகுளம்,செட்டியாவெளி குளம்,கயமொந்தான் குளம்,ராஜவந்தான் மலை ,பாண்டியாண்டி மலை என வரலாற்று பகைப் புலம் கொண்டதாய் உள்ளது.இப் பிரதேசம் முன்பு ஒரு சிறிய இராசதனி உடையதாய் இருந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன.உலாவியன் என்ற மன்னன் பற்றிய கர்ண பரம்பரை கதைகள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.
''அக்கினிச் சுடர்சடை வலக்கையில் வல்லயம்
அம்பு வில்லு மணி வீரவாழும்
தக்கநல் இடக்கையில் தந்தன உடுக்கையும்
தடுத்திடும் கேடயம் கடகமுமே
உக்கிரப் பார்வையும் ஓங்கிய சூலமும்
உன்னி மிதித்த திருவடியும்
அக்கிரமன் தலை ஏறிநின்றே காளி
அம்மச்சியம்மையே காவல் கொண்டாய்!''
கவிஞர் சுந்தரலிங்கம் சிவசங்கரன் தன் கவியில் இப்படிவர்ணித்திருக்கிறார்.
இலங்கையில் அம்மச்சி அம்மன் வழிபாட்டு சடங்கு இங்கு மட்டுமே உள்ளது.
இங்குள்ள சிலை பல்லவர்கால கடைசிக் கூறுக்கான தொல்லியல் பண்பு வாய்ந்த்ததாக உள்ளது.கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு வருசங்கள் கடந்ததாக இருக்க வேண்டும்.
பன்னெடுங்கால பழமையான மரபு சார்ந்த நம்பிக்கைகளோடு இது இணைந்துள்ளது.
பத்ததி முறையிலான பரிகல வேள்வி முறை இங்கு கையாளப் படுகிறது.இது இப்பிரதேசத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாகும்.
ஏழு கன்னிமார் நம்பிக்கை கரையல் கொடுத்தல் என்பன இங்கு சிறப்பம்சங்களாகும்
தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் துர்க்கையயை அம்மச்சி அம்மனாக வழிபடும் மரபு காணப் படுகிறது.
தமிழ் நாட்டில் மதுரை அருகில் கோயில் பாப்ப குடியூர்
சோனைக் கர்ப்பண்ணாசாமி கோயில் உள்ளது.மூன்று நாள் திருவிழாவில் முதல்நாள் அம்மச்சி அம்மன் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.
நாமக்கல் அடுத்த சின்னமுதலைப்பட்டியில், மற்றொரு அம்மச்சி அம்மன் கோவில் உள்ளது.
மதுரை சென்னகரம் பட்டியிலும் ஒரு அம்மச்சியம்மன் கோயில் பற்றிய செய்திகள் உள்ளன.
தமிழ் நாட்டில் அரச மரம் அம்மச்சி மரம் என அழைக்கப் படுகிறது.
கேரளாவில் மூத்த பெண்கள் தெய்வத் தன்மையுள்ள பெண்களை அம்மச்சி என அழைக்கும் மரபு காணப் படுகிறது.
கேரள கொல்லத்தில் அம்மச்சி வீடு என்னும் கோயில் உள்ளது.வெறும் பீடத்தை மட்டுமே வைத்து வழிபடுகின்றனர். அந்த பீடம் மகிசாசூரமர்த்தினி பீடமாக போற்றப் படுகிறது.

1 comment:

Unknown said...

ஐயா வனக்கம் . .. எனக்கு அம்மச்சி அம்மன் பற்றின தகவல் அதிகமாக வேன்டும் ... இந்த நம்பர்க்கு தொடர்பு கொள்ளுங்கள்... +974 70745513

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி