வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

இன்று அனைத்துலக ஆண்கள் தினமாம்

இன்று அனைத்துலக ஆண்கள் தினமாம்

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"
என்று பாடினான் கவி பாரதி
"கற்பெனும் ஒரு சொல்லை வைத்தால்
இரு கட்சிக்கும் அதனை
பொதுவில் வைப்போம்"
என்றவனும் பாரதிதான்

ஒரு ஆண் எப்போது
மதிக்கப் படுகிறான்
எப்போது
மிதிக்கப் படுகிறான்
ஆண் கதையாடல்கள்
மனித வரலாற்றில்
ஆண் மையப் பட்டிருந்த
சூழ் நிலைகள் மாறி
பெண் மைய சிந்தனைகளும்
அதன் வழி வந்த வரலாறும்
கதைகளும் நெடியதுதான்
யூலிய சீசர் பேசப் பட்ட வரலாற்றில்தான்
கிளியோபாட்ராவும் பேசப் படுகிறாள்
கிட்லர் பற்றி பேசும் உலகுதான்
லக்சம் பேக் பற்றியும் பேசுகிறது
காந்தி பற்றிய கதையாடல்கள் நிறைந்த
இந்திய பாரம்பரியத்தில்தான்
நாம் இன்று இந்திராவையும்
கொண்டாடுகிறோம்
ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் சமம்தான்
ஒன்றில்லாமல் ஒன்றில்லை
ஒன்றிலிருந்து ஒன்று
எதுவும் தனித்த தீவல்ல
அறம் சொல்லி
அதன் வழி நடப்பது
ஆண்மை
மறம் செய்து
மாண்புற வாழ்வது
ஆண்மை
அந்த பேராண்மையயை
போற்றுதும்
ஆண்களைப் போற்றுதும்
ஆண்களைப் போற்றுதும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி