வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Tuesday 13 March 2018

வாழ்வை எதிர் கொள்ளல்

வாழ்வை எதிர் கொள்ளல்



நம்மிலிருந்து நாம் கற்றுக் கொள்ளல்.ஒவ்வொருவரும் ஒவ்வோரு விதமாக வாழ்வை அதன் வழி வரும் சவால்களை எதிர் கொள்வர்.
வறுமையில் வாடி ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி பட்டினியிருந்த நாட்கள்.மழை வரும் காலத்தில் வீட்டில் படுக்க இடமற்று கொடுகி கொடுகி குந்தியிருந்த நாட்கள் .
ஒரு சட்டையயை தோய்த்து உலர்த்தி மாறி மாறி பயன்படுத்திய நாட்கள்.
இவையெல்லாவற்றையும் கடந்து கல்வியில் கவனம் செலுத்தி பட்டம் பெற்று ஆசிரியராகி அதிபராகி,விரிவுரையாளராகி,துறைத்தலைவராகி,பீடாதிபதியாகி பல சந்தற்பங்களில் பதில் துணைவேந்தராகி எல்லா உச்சங்களையும் தொட முடிந்தது.

சுனாமி கடவுளர்கள் காணாமல் போன நாள் என் மகளின் இழப்பு என் இருப்பை கேழ்விக்குள்ளாக்கியது வாழ்வின் நோக்கு விடைகளற்று போன சூனியம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி என் மகளைப் போல வாழ்க்கையென்றால் என்ன ,ஏன் பிறக்கிறோம் ,ஏன் இறக்கிறோம் ,ஏன் எழுதுகிறோம் ,ஏன் இசைக்கிறோம் என சூனியத்தின் வழியான பயணம் விடைகளற்று பயணிக்கும் மனித குலம்.மனிதன் படைத்த கடவுளர்களால் மாறி நிற்கும் மனிதர்கள்.சிலர் புனிதர்கள் என பூசனை வேறு.
சும்மாயிரு என்று யாரோ ஒரு ஞானி சொன்னானாம்.என் வாழ்வில் நான் சும்மாயிருந்தது கிடையாது.செயல் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் ,பல்கலக் கழகத்தில் மற்றவர்களைப் போல சும்மாயிருந்தால் இப்போதும் அங்கு பணியில் இருந்திருக்க முடியும்.இயங்கிக் கொண்டு இருந்தேன் அதனால் நான் ...வெளியேற வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது..துரோகம் பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி என் வாழ்வை சூறையாடியது.
கடந்த பத்தாண்டுகள் வலிமிகுந்த நாட்கள் என் சுயம் இழந்த நாட்கள் என் சுயமரியாதைக்கே சவாலான நாட்கள் வெறும் பத்தாம் பசலித் தனமானவர்கள் முன் நான் கூனி குறுகி நின்ற தருணங்கள் .
வாழ்வை வெறும்குறுகிய வட்டத்துக்குள் பார்க்கும் மனிதர்கள்.கூண்டுச் சிறையாய் மாறிய புலம்பெயர் வாழ்வு.மற்றவர்களை பற்றி கவலைப்படாத மனிதர்கள்.
பொய்மைகள் உடைந்து அரூப ஒவியங்கள் போல முகம் அழிந்து உருகி ஒடும் உருவங்களாய் மனிதர்கள்.
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் சுயமரியாதையுள்ள மனிதனாக பகுத்தறிவு உள்ளவனாக
அறிவுச் சுடர் ஏற்றிய சோக்கிரட்டிஸ் முதல் மாக்ஸ் ஏங்கல்ஸ் மாவோ லெனின் பெரியார் என அவர்கள் வழி நான்.
" தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ"
பாரதி

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி