வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

மூதூர் வரலாறு-1

மூதூர் வரலாறு-1

மூதூர் என நாம் அறியப் படுகிற நகரம் அதன் வராலாறு மிகப் பழமையானது.
மூதூர் என்பதற்கு நாம் இரண்டு வகையாக பொருள் கொள்ளலாம்.ஒன்று மூதூர் மூத்த ஊர் பழைய ஊர் என்பதாகும்.
அடுத்து முத்தூர் முத்துக்கள் விளைந்த ஊர் முன்னய நாட்களில் முத்தெடுக்கும் தொழில் நடைபெற்றதாக கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.ஒரு முறை மூதூரை அடுத்துள்ள எங்கள் சேனையூர் கழியோடையில் எடுக்கப் பட்ட மட்டியிலிருந்து என் அம்மம்மா முத்தெடுத்த சம்பவத்தை இந்த கதைகளினூடு பொருத்திப் பாற்க முடியும்.
மூதூரில் முத்து விளைந்தததைத்தான்
திருஞான சம்பந்தர் தன் தேவாரப் பதிகத்தில் இப்படி சொல்வார்.
'' குரை கடலோதம் நித்திலம் கொலிக்கும்
கோணமா மலை அமர்ந்தாரே''
மாவலியாறு கடலோடு இரண்டு வழிகளில் கலந்து கொட்டியாரக் குடாவுக்கு அழகு சேர்க்கிறது.
திருகோணமலை துறை முகம் பண்டைக் காலம் முதல் உலக அளவில் அறியப்படதாயும் கேந்திர முக்கியத்துவம் உடயதாயும் விளங்கிததைப் போல மூதூரும் ஈழத்தின் பண்டய வியாபார துறைமுகமாக விளங்கியதற்கான சுவடுகள் இன்னமும் உள்ளன.தமிழர்களின் பூர்விக நிலங்களில் மூதூர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நகரம்.
பண்டைக் காலத்தில் ஒரு வணிக நகராக இது இருந்திருக்கிறது.பரதவர் குடியிருப்பு நிலம் சங்க இலக்கியங்கள் பரதவர் பற்றி நிறையவே சொல்கின்றன கடல் வணிகம் இவர்கள் கைகளிலேயே இருந்திருக்கிறது.கப்பல் கட்டுதலும்,கடல் வணிகமும் ,மீன் பிடியும் முக்கியப் பட்ட இடமாயும் ,மாவலியின் கடல் சங்கமிப்பு, அதன் கரை வழி நாகரிகமும் விவசாயம் இணைந்த வாழ்வாய் மூதூர் நெற்களஞ்சியமாய் திகழவும் வழி வகுத்தது.
ஈழத்தின் தமிழர் துறை முகங்களாய் இருந்த வல்வெட்டித்துறை,மன்னார்,நீர் கொழும்பு,அமிர்தகழி ஆகியவற்றுடனான தொடர்புகள் இருந்திருக்கின்றன.
பண்டைய தமிழக துறமுகங்களான தொண்டி,கொற்கை ஆகியவற்றுடனான தொடர்புகளுக்கான சாத்தியப் பாடுகளும் உள்ளன.முத்து வணிகம் செய்வோர் இங்கு வந்து முத்துக்கள் மற்றும் யானைத் தந்தங்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்து பாரசீக நாடுகளுக்கு சென்றிருக்க வாய்ப்புக்கள் உண்டு.
என் இளமை நாட்களில் 1965 மூதூர் பழைய துறைமுகத்தில் சிறிய கப்பல்கள் கட்டும் தொழிலை பார்த்திருக்கிறேன்.பல பாய்மரக் கப்பல்கள் தரித்திருந்து பொருட்களை ஏற்றுவதையும் இறக்குவதையும் கண்டிருக்கிறேன்.சிறிய கப்பல்கள் வத்தை என அழைக்கப் பட்டன.
இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம் தன்னுடைய சந்தானாள் புரவி எனும் நாவலில் இந்த பண்பாட்டை அழகாய் விபரித்திருப்பார்
கடந்த பல நூற்றாண்டுகளில் தமிழக திருநெல்வேலி,தூத்துகுடி துறைமுகங்களினூடான தொடர்புகளும் வணிக உறவுகளோடு திருமண கொண்டு கொடுப்புகளும் இருந்திருக்கின்றன .
சோழர்களின் கடலாதிக்க கால மூதூர் கவனம் பெற்ற ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது.
மூதூர் முகத்துவாரத்துக்கு பக்கத்திலிருக்கும் கங்கைத் துறை வருடம்தோறும் ஆதி கோண நாயகர் தீர்த்தமாடும் கலாசார மையமாக திகழ்கிறது.தம்பலகாமம் ஆலங்கேணி ,கொட்டியாரம் என உறவுகள் சங்கமிக்கும் வரலாற்றின் நீட்சி.
மூதூர் நகரத்தை அண்மியதாய் இருக்கும் மூன்றாம் கட்டை மலை அதன் பழைய பெயர் ராஜவந்தான் மலை.அந்த மலை உச்சியில் ஒரு சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப் படுகின்றன.
மலையின் கிழக்கு அடிவாரத்தில் ,1979ல் நானும் பேராசிரியர் இந்திரபாலாவும் ஒரு சோழர் கால கல்வெட்டை கண்டறிந்தோம் அது இராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு அதில் சுவஸ்தி சிறி பொறிக்கப் பட்டு மலையில் இருக்கும் கோயிலுக்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரையுள்ள வயல்கள் சொந்தம் என பொறிக்கப் பட்டிருந்தது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி