வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

தென்றலைப் போக விடு

தென்றலைப் போக விடு
அதன் திசை வழி செல்ல
அனுமதித்து ஒதுங்கி நில்
காற்றின் மீது உன் காதலை
திணித்து அதனை திணறடிக்காதே


தூது விட்டு துன்பப் படுத்தாதே

மெல்லிசையாய் வருடும் காற்று
காதோரம் உரசி விட்டு செல்லும்
சுகத்துக்குத்தான்
செவி மடல்களின் காத்திருப்பு

காற்றும் கவிதையும் ஒன்றுதான்
இயல்பாய் இருக்கட்டும்
காற்றோடு பேசு கவிதை
தானாய் வரும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி