வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

வெற்றிவேல் விதானையார் சேவையால் உயர்ந்தோன்

நம்மவர்களை நாம் அறிவோம்
வெற்றிவேல் விதானையார்
சேவையால் உயர்ந்தோன்
ஈச்சலம்பற்றில் பிறந்து மல்லிகைத்தீவில் வாழ்ந்து கொட்டியாரம் எங்கும் தன் சேவையால் சிறப்பு பெற்றோன் .
சேனையூரில் உடையார் ஐயா வீட்டில் அவர் அலுவலகம் இருந்தது.ஆற்பாட்டமில்லாத அர்ப்பணிப்பு மிக்க சேவையாளனாய் வாழ்ந்த முன்னுதாரண முனைப்பு பெற்றோன்.
கட்டைபறிச்சான் கிராமசேவையாளர் பிரிவின் விதானையார்களாய் கடமையாற்றியோர்களில் இவரின் பணி மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்துள்ளது.
இன்று நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளாய் கூறு பட்டிருக்கும் கட்டைபறிச்சான் கிராம சேவையாளர் பிரிவு எனும் பெரு நிலப் பிரதேசத்தின் விதானையாராக கடமையாற்றி ஊரவர்களின் அன்புக்கும் நன் மதிப்புக்கும் பாத்திரமானவர்.
சேனையூரில் தன் குடும்பத்தோடு வாசம் செய்து ஊரவர் போலவே எல்லாக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
தன்னுடைய பிள்ளைகளை சேனையூர் மத்திய கல்லூரியிலேயே. கற்க வைத்தவத் ஒரே குடும்பம் என்ற ஈடுபாட்டுடன் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என இவற்றுக்கு இலக்கணமாய் வாழ்ந்த மா மனிதர் என்று சொல்லலாம்.
அந்த நாளில் எங்கள் ஊரில் ஒரு சிறந்த ஒருங்கிணைவு இருந்தமை குறிப்பிடத் தக்கது.
சேனையூர் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் விதானையாருக்கு குறிப்பிடத் தகுந்த இடம் உண்டு.
மல்லிகைத்தீவு இவரால் பெருமையடைந்தது என்றே சொல்லலாம் மண் மாண்புற வாழ்ந்து மறைந்த சமூக சேவையாளர்.தன் உத்தியோக கடமைகளுக்கு அப்பால் தான் வாழ்ந்த சமூகத்தோடு அதன் பிரச்சனைகளுக்கு மக்களோடு மக்களாக முகம் கொடுத்து வாழ்வை வசமாக்கியவர்.
மூதூர் வரலாற்றில் தன் சேவையால் முத்திரை பதித்த மானுட நேயன்.சமூகம் அரசியல் சமயம் என அவரின் இடையறாத தொடர் பணியில் தன்னை இணைத்துக்.கொண்டதோடு மற்றவர்களையும்.அதில் ஈடுபடுத்துவதில் கைதேர்ந்தவர்.
என் அப்புச்சி விதானையார் மீது அளவு கடந்த மரியாதையும் அன்பும் கொண்டவர்.
இன்று அவர் பிள்ளைகள் அவர் நற்பெயருக்கு நம்பிக்கை தருபவர்களாக சமூக அக்கறை உடையவர்களாக தங்கள் வாழ்வில் செம்மை கண்டுள்ளனர்.
விதானையாரின் மகள்கள் பிருந்தா,கிருபா ஆகியோர் என்னோடு படித்தவர்கள் சிறினி என் மிக நெருங்கிய நட்பாய்.சுந்தரம் அண்ணன் சிரிப்பின் மறு உருவம்.
திருமிகு வெற்றிவேல் விதானையார் எப்போதும் வெள்ளை வேட்டி பாலாமணி என உலா வரும் உயர்ந்த உள்ளம்.
விதானையார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்தவர்.
நினைவுகள் அழிவதில்லை

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி