வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறுகிறது

மீண்டும் வேதாளம்
முருங்க மரம் ஏறுகிறது
சறுக்கி விழும்
சக்கடத்தார் போல
குறுக்க வர யாரும் இல்லையோ

பொறுக்கி எடுக்க அலையும் கூட்டத்தில்
வெறுப்பை தவிர
வேறு என்ன இருக்கும்

தடுமாறும் சிந்தனைகள்
இறுமாப்புக்கு
எள்ளளவும் குறைவில்லை

வெற்றுப் பேச்சில்
மயங்க காத்திருக்கும்
மகுடி மயக்க கூட்டம்
வெருட்டிகள் போல
உலா வரும்
வெள்ளுடுப்பு வவ்வால்கள்

கிறுகி அடித்து
சுழன்றெழ
ஒரு புயல் வந்து
பொய்மை அழிய
மாற்றம் ஒன்று நிகழ்ந்து
மலரட்டும் புதிய பூக்கள்
வருக என் இளையோரே
வருங்காலம் உமதாக

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி