வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 13 June 2020

ராஜாவுக்கு செக் செக்மேற்றில் உட்கார வைத்த திரைப்படம்

ராஜாவுக்கு செக்
செக்மேற்றில் உட்கார வைத்த திரைப்படம்

Image may contain: 1 person, smiling, standing, tree and outdoor


நீண்ட நாட்களின் பின் சேரன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப் படம்
பார்வையாளர்களை செக்மேற்றில் உட்கார வைத்து படம் முடியும் வரை ஒரு வகை பதட்டத்தை கொடுத்து சில சமயங்களில் நமக்கே சந்தேகம் வரும் வரைக்கும் ஒன்ற வைத்த உணர்ச்சிகளின் கலவையய் கலவரப் படுத்திய ஒரு தமிழ் திரைப்படம்.

சேரன் தன் நடிக ஆளுமையை மீண்டும் ஒரு தரம் நிருபித்திருக்கிறார்.நெறியாளரின் நேர்த்தியான கதைப் பின்னல் படம் ஒளியிலும் இருளிலும் பயணிக்கிறது. ஒரு நாள் கதை பின்னோக்கி போதல் தேவையோடு நிறைவாய் கையாளப் பட்டிருக்கிறது.சேரன் இயல்பாகவே கதையோடு பயணிக்கிறார் .தேவையில்லாத எந்த பாத்திரமும் இடையீடு செய்யாமல் கதைக்கு உயிர் கொடுக்கும் கதா பாத்திரங்கள் .
ஒரு திரில்லர் படத்துக்கான இசை நம்மை மிரட்டவில்லை அளவாய் அதீதம் காட்டாமல் நம் அச்சத்துக்கு துணை சேர்க்கிறது.அப்பாவுக்கும் மகளுக்குமான உறவின் ஆழம் அந்த ஒரு பாடலில் வண்ண ஓளிக் கலவையாய் அழகியலை வெளிப்படுத்திச் செல்கிறது.

சேரனும் மகளாக வரும் அந்த பெண்ணும் அப்பா மகள் உறவை அரன் அதீத ஆழத்தை புரிய வைக்கிறார்கள்.
புதிய சமூக ஒழுங்குக்குள் பணமும் செல்வாக்கும் வாலிபர்களின் வெறியாட்டம் படிப்பினையான எடுத்துரைப்பாய் முன் நிற்கிறது.அண்மைக் காலமாய் கண் முன் நடை பெறும் வக்கிர அவலங்கள் பேசப் பட வேண்டிய பொருண்மையில் சொல்லப் பட்டிருக்கின்றன்.
மொத்தத்தில் "ராஜாவுக்கு செக்"இந்த காலத்துக்குரிய எடுத்துரைப்பாய் எம்மோடு பேசுகிறது.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி