வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 11 June 2020

நினைவுப் பெரும் கடல் நீ

நினைவுப் பெரும் கடல் நீ
எங்கள் மகள் அனாமிகாவின் முப்பதாவது பிறந்த நாள்.17.04.2020
வாழ்வெனும் பெரும் கடலில்
நினைவெனும் நீள் கடல் நீ
உணர்வொளியாய் என்னுள்ளிருந்து
கனன்றிடும் பெரு நெருப்பு நீ

Image may contain: 1 person, close-up நீ கையசைத்து காலசைத்து
கண் சிமிட்டி மென்னிதழ் விரித்து
பொன் வாய்ப் புன்னகையால்
உலகளந்த நாள் இன்று
வண்ணம் கொண்டாய் வடிவு கொண்டாய்
எண்ணமெல்லாம் எனை அசைத்து நின்றாய்
பொன் மகளாய் பூவுலகில் பூத்த நாள் இன்று
பார்த்த விழி பூத்திருக்க நீ செல்ல மகளாய் வந்த நாள் இன்று
சித்திரமும் தோற்று விடும் உன்
செல்ல விழிப் பார்வை
எத்தினமும் நான் தோற்று விடும் உன்
அன்பு மொழி சிணுங்கல்
கை வழியாய் இசை சொல்லி கண் மொழியாள் காதை நீ
கால் சலங்கை வழி வந்த என்
பெரும் காதை நீயடியோ
இந்த நாள் மட்டுமல்ல
எந்த நாளும் எனக்கு
உன் பிறந்த நாள் தான்
Image may contain: 1 person, standing, plant, outdoor and nature

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி