வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

சேர்மன் இராசரெத்தினம்

 நம்மவர்களை நாம் அறிவோம்

சேர்மன் இராசரெத்தினம்

சேனையூர் மருதநகரை பிறப்பிடமாக கொண்டவர் திருமிகு.செ.இராசதெத்தினம் அவர்கள்.
1970 களில் கட்டைபறிச்சான் கிராம சபைத் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.
நீண்ட காலம் ஆறாம் வட்டார உறுப்பினராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு.


கிராமசபைத் தலைவராக இருந்த காலத்தில் சாலையூரில் பூர்வ குடி மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் அன்னாரின் பங்களிப்பு குறிப்பிடத் தக்க கணிப்பை பெற்றுள்ளது.
கிராமத்துக்கு தேவையான உட் கட்டமைப்பு வேலைகளில் மிகுந்த சிரத்தையுடன் செயலூக்கம் மிகுந்த சேவையாளன்.
சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம் ,சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம் ,சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் அந்த நாட்களில் இளைஞர்கள் மத்தியில் மதிப்புக்குரியவராக இருந்தமை குறிப்பிடத் தக்கது.

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயிலில் அதன் திருவிழாக்க்களில் குறிப்பாக ஏழாம் திருவிழா காரராக இருந்து சிறபுச் சேர்த்தவர்.
ஊரில் நடை பெறும் சமூக நடவடிக்கைகளிலும் தமிழ் உணர்வு சார்ந்த அரசியலிலும் நாட்டம் மிக்கவராக இருந்து தனக்கான அரசியல் கொள்கையில் தடம் பதித்தவர்.


என்னை எப்போதும் என்ன மருமகன் என அழைத்து தன் அன்பை வெளிப்படுத்தும் அக்கறையாளன் .என் அம்மாவின் பள்ளித் தோழியையே அவர் திருமணம் முடித்தார் சம்பூர் தபால் அதிகாரியாய் இருந்த திருமதி இராஜேஸ்வரி அவர்கள்.என் படிப்பில் எப்போதும் அக்கறை அவருக்கு இருந்தது அவர்கள் குடும்பமே அப்புச்சியோடு நெருங்கிய உறவு கொண்டது என்பதை மறக்க முடியாது.
Image may contain: 4 people, people standing and indoor
1990ஆம் ஆண்டு சம்பூரில் அரங்கேறிய படுகொலை களத்தில் அவரும் அவர் மகனும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப் பட்டமை பெரும் துயரச் சுமையாம் மனம் கனத்து கிடக்கிறது.
( கீழே உள்ள படத்தில் இருப்பவர்கள் அப்போதய உள்ளூராட்சி அமைச்சர் திருச்செல்வம்,அப்போதய கட்டைபறிச்சான் கிராமசபைத் தலைவர் திருமிகு.ஏ.சிவபாக்கியம்,திருமிகு.செ.இராசரத்தினம்,கட்டைபறிச்சான் கிராமசபை அலுவலக அதிகாரி.திருமிகு.வைரமுத்து,ஈச்சலம்பற்றின் அப்போதய கிராமசபைத் தலைவர் திரு.ஞானகணேஸ் )


No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி