உலக நடன நாள்
ஈழ நாட்டியம்
இன்று உலக நடன நாள்.மனித நாகரிக வரலாற்றில் நடனம் அவர்கள் வாழ்வில் ஆதிலாலம் முதல் நிகழ்த்து கலையாக தொடர்ந்துள்ளமையை குகைச் சுவரோவியங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.

இன்று உலகில் எஞ்சி வாழுகின்ற ஆதிப் பழங்குடிகளில் நடனம் ஒரு முக்கிய கலாசார நிகழ்வாக தொடர்கிறது.
ஈழத் தமிழ் மக்களும் தொன்மையான வரலாறு கொண்டவர்கள் .காலம் காலமாக அவர்களது கலாசார வாழ்வில் பல்வேறு நடனங்கள் பயில் நிலையில் தொடர்கின்றன.
வசந்தன் ஆட்டம்,காவடியாட்டம்,கரகாட்டம் கும்ப ஆட்டம் ,ஆட்ட வகைகளோடு வடமோடி,தென்மோடி,கோவலன் கூத்து,காத்தவராயன்ப்கூத்து,வடபாங்கு,தென் பாங்கு,மகுடிக் கூத்து,பறமேளக் கூத்து,கோலாடம் ,கும்மி என பல் வகைப் பட்டிருந்தாலும் ஈழத்து நடனம் என்று சொல்லும் அளவுக்கு எதனையும் நாம் வளர்த்தெடுக்கவில்லை.இந்திய மரபிலான பரத நாட்டியத்தையே நம் மரபாக கொண்டாடும் போக்கு காணப் படுகிறது.
நமக்கான நடன மரபு எது நம் கூத்துக்களே நம் நடன மரபு.கூத்துக்களில் இருந்து நாம் ஒரு பொதுமைப் பட்ட நடன மரபை நோக்கி பயணிக்க வேண்டும் .உலகம் முழுவதும் பரந்து வாழும் நாம் நமக்கான அடையாளமாக கூத்து மரபில் இருந்து உருவான ஈழ நாட்டியத்தை நம் மரபாக முன்னெடுக்க வேண்டும் .
ஈழ நாடியம் இன்று ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகியுள்ளமை ஒரு ஆரம்ப முன்னெடுப்பு மாத்திரமே இதில் நாம் செய்ய வேண்டியவை ஏராளம் உண்டு.

No comments:
Post a Comment