வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

தமிழர் திருநாள் தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு

    தமிழர் திருநாள் தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு 
    உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் தேசிய திருநாள் தமிழ்ப் புத்தாண்டாய் மலரும் தைப் பொங்கலாகும்.வரலாற்று வழியாகவும் ,பண்பாட்டடிப்படையிலும்,வாழ்வியல் நோக்கிலும்,காலக்கணிப்பு முறையிலும் தைப் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டாகவே கொண்டாடப் படுகிறது
    “தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
    “தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
    “”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
    “தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
    “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் தை முதல் நாளை சுட்டி சிறப்புறுகிறது

    பொங்கல் என்றால்பொங்குகை,பெருங்கோபம்,மிளகு சீரகம் உப்பு நெய் இட்ட அன்னம்,உய்ர்ச்சி,பெருமை,மிகுதி,கள்,கிளர்தல்,சமைத்தல்,பொலிதல் என தமிழ்ப் பேரகராதி தருகிறது,இவையெல்லாம் இன்றுவரை தமிழர் பொங்கலில் தொடர்கின்றன.
    தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பு முக்கியப் படுகிறது
    1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
    2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
    3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
    4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
    5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
    6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
    காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழர்கள் தங்களுடய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றனர்.
    Image may contain: 1 person, standing பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.



No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி