வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

வெந்து தணியுமா

வெந்து தணியுமா

வெந்து தணியுமா காடு
அந்தமிலா அழிவின் தீயாய்
காய்ந்து கருகி கனல் எழ
பாலையின் முகமாய் மாறிடுமோ

ஆதிக் குடிகளின் அழிவு போல
பாதித்து பத பதைத்து
திசையறியாது தெரு வரை வந்த
அழிவின் ஆழ நெருப்பு
ஊழீத் தி இதுதானோவென
உலகம் முழுவதும் பயத்தின் ரேகை
வலம் வரும் இந்த நாட்கள்
வலிகள் மிகுந்து தொடரும் பொழுதுகள்
தீயே நீயே எழுந்தாய்
நீயே தணிவாய்
மழையின் நாக்குள்
மகிழ்வினை தரட்டும்
அவுஸ்ரேலியா எங்கும்
மகிழ்வை விதைக்கட்டும்
உலக மக்களே உயிர்களுக்காய்
ஒரு தரம் மண்டியிட்டு
இயற்கையை பணிவோம்
நாம் மனிசர்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி