வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

என் தாய் மொழியாம் தமிழே

உலகத் தாய் மொழி நாள்
என் தாய் மொழியாம் தமிழே
முந்தை மொழியாயும்
என் தந்தை மொழியாயும்
பிந்தை வரும் மொழிகளுக்கெல்லாம்
விந்தை மொழியாயும்
விண் தொட்டு மண் தொட்டு
மாறா அழகுடன்
தரணி ஆழும் தமிழாய்


என்னுள் எழுந்த இனியவளே
உன்னில் இருந்தல்லவா நான்
உலகத்தை அறிந்து தெளிந்து
கொண்டேன் எல்லாம் உன்னால்
எனக்கு வாய்த்தது

வற்றாப் பெருங் கடல் நீ

அமுதம் கடைய அவசியமில்லை
அமுதமே நீ அல்லவா
பொற்றாமரைக் குளத்தில்
பூத்து நின்றாயாம்
எற்றி எதிரிகள் குரல் அடைக்க
வெற்றிகள் கைவர
என் நாவில் நடம் புரியும்
கொற்றவள் நீ

சிந்து சம வெளி முதல்
கீழடி என விரிந்து
அரிக்கமேடு தாண்டி
ஈழம் வரை
உன் முது தொல் மரபுகள்
பரந்து விரிந்து படர்ந்து
தெரிந்து கொள்ள
செவ்விலக்கியங்களும்
செழுமை சீர் தொல்காப்பியமும்
சிலப்பதிகாரமும்
திருக்கரசை புராணமும்
என சொல்லாத சேதிகள் பல
இந்த உலகுக்கு தந்தவளே

உன்னைப் போற்றி
ஒரு கவியென்ன
ஓராயிரம் கோடி
கவிதை பாடுவேன்
இன்னும் இன்னும்
காலாதி காலம் முழுவதும்
உன் ஆட்சி
உலகம் முழுமைக்கும்
வாழியவே வாழியவே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி