வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

அண்மய நாட்கள் மலையாளத் திரைப்படங்களோடு நெருங்கிக் கிடக்கிறது வரனே ஆவசியமுண்டு

அண்மய நாட்கள் மலையாளத் திரைப்படங்களோடு நெருங்கிக் கிடக்கிறது
வரனே அவசியமுண்டு
Varane Avashyamundu
நேர்த்தியான கதை சொல்லும் முறை நகர்ந்து செல்லும் காட்சிப் படிமங்கள் சாதண சம்பவங்களால் கட்டமைக்கப் படும் வாழ்க்கை அந்த வாழ்க்கையில் சம்பவிக்கும் சீண்டல் சிணுங்கல் கோபம் நகைச்சுவை என எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விட நினைக்கும் திரை மொழிக்குள் கட்டுண்டு கிடக்கிறது இந்த திரைப் படம்.
சோபனா ,சுரேஸ் கோபி,துல்கர் சல்மான் ,கல்யாணி என நாம் அறிந்த திரை நட்சத்திரங்களும் இன்னும் பலரின் நடிப்பின் கலவையில் ஒரு குடியிருப்பினுள் நெருங்கிக் கிடக்கும் குடும்ப உறவுகளின் சங்கமிப்பாய் கலை நயம் மிக்க இசையும் அதன் வழி விரியும் காட்சிகளும் இத் திரைப்பஅத்தினூடு நம்மை ஒன்றிக்க வைக்கிறது.
பல இடங்களில் சோபனா அப்படியே பத்மினியை பிரதிபலித்து நிற்கிறார் அவர் உடல் மொழி எல்லா அசைவுகளிலும் கை தேர்ந்த கலை நுணுக்கம் வெளிப்பட்டு நிற்கிறது.எல்லா வகை அபிநயங்களிலும் நம்மை கிறங்கடித்து நிமிர வைக்கிறது சோபனாவின் பாவங்களும் பரிதவிப்பும் .
சுரேஸ் கோபி நடித்திருக்கிறார்.கல்யாணி எனும் இக் காலத்து நடிகை போகிற போக்கில் நம்மை கவர்ந்து விடுகிறார். துல்கர் சல்மானும் சளைத்தவர் அல்ல என்பதை நிருபித்து விடுவது இத் திரைப் படத்தின் சிறப்பு.
எல்லா இடங்களிலும் சோபனாவின் கொடியே மேலோங்கி நிற்கிறது அழகு அப்படியே இருக்க நம்மை கவர்ந்து செல்லும் காந்தம் அவர் நடிப்பில் நம்மை ஒன்றித்து நிற்க வைக்கிறது.
காதல் அதன் பரிமாணங்கள் எத்தனை வலுவுள்ளது அது அசையாததையும் அசைய வைக்கும் என்பதற்கு சுரேஸ் கோபியின் பாத்திரம் உணர்த்திச் செல்கிறது.
ஒரு கவிதையைப் போல மயிலிறகின் வருடலாய் சோபனாவின் காதல் வெளிப்படும் இடங்கள் திரைபடத்தின் தரத்தை மேலுயர்த்தி நிற்கிறது.மழைக்கும் காதலுக்கும் எப்போதுமே ஒரு உறவுண்டு அது யதார்த்தத்திலும் .
வரனே அவசியமுண்டு

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி