வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

நம்மவர்களை நாம் அறிவோம் மற்றவர்களுக்காகவே வாழ்ந்த மகோன்னதம் பிரகாசநாயகம் பாய்வா

நம்மவர்களை நாம் அறிவோம்
மற்றவர்களுக்காகவே வாழ்ந்த மகோன்னதம்
பிரகாசநாயகம் பாய்வா
மூதூரில் ஆசிரியராக அதிபராக கல்விப் பணியாற்றியவர். சமூக அக்கறையும் இடதுசாரிக் கொள்கையும் அதன் வழியிலான அரசியலும் தமிழ் உணர்வும் மிக்க தன்னலம் கருதா சேவையாளன்.
மனிதர்கள் சிலர் அபூர்வமான குணாம்சம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் மற்றவர்களால் விளங்கிக் கொள்ள முடியாத அபூர்வங்கள் அவர்களில் நிறைந்திருக்கும் அத்தகைய அபூர்வம்தான் திருமிகு பிரகாசநாயகம் பாய்வா அவர்கள்.
போக்கு வரத்து வசதிகள் சீராக இல்லாத நாட்களில் அதி கஸ்ரப் பிரதேச பாடசாலைகளில் பணியாற்றி கல்வியை உயிர்ப்புடன் நேசித்த ஒருவர்.இலங்கைத்துறை முகத்துவாரம் ,வாழைத் தோட்டம்,மாவடிச்சேனை,தென்னமரவாடி ,மல்லிகைத்தீவு என கிராமப் புறங்களிலேயே அவரது சேவைக்காலம் முழுவதும் ஆசிரியப் பணி செய்தவர்.
மற்றவர் நலனே தன் நலனாய் நினைக்கும் பரந்த மனம் கொண்டவர்.இறுதி வரை திருமணம் முடிக்காமலேயே மற்றவர்களுக்காக வாழ்ந்த மகோன்னதம் அவர்.
எப்போதும் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை கமக்கட்டில் ஒரு புத்தகம் என வலம் வருவார் இறுதி வரை அதுவே அவர் அடையாளமாய் இருந்தமை குறிப்பிடத் தக்கது.
தீவிர வாசிபின் நேசர் தீர்க்கமான அரசியல் கொள்கையின் வழி பயணிற்றவர்.பல சமயங்களில் ஞானியைப் போல நடந்து கொண்டு மற்றவர்களுக்கு வியப்புகள் நிறைந்த மனிதராய் காட்சி தருவார்
பல நேரங்களில் அவரோடு உரையாடக் கிடைத்த சந்தற்பங்களில் என் கருத்துக்களோடு உடன்பாட்டுடன் நகரும் அவர் உரையாடல்கள்.
எப்போதும் மற்றவர்க்கு உதவி செய்வதே அவர் நோக்காக இருந்திருக்கிறது மனிதாபிமானம் மிக்கவராய் தன் சட்டைப்பையில் இருக்கும் கடைசிச் சதத்தையும் கொடுத்துதவும் குணம் அவருக்கு உரியது.
எளிய வாழ்வும் உயரிய நோக்கும் கொண்ட சிந்தனையாளர்.
என் மனைவியின் தாய் மாமன்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி