வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

தோழர் லெனின் 150 ஆண்டுகள்

தோழர் லெனின்
150 ஆண்டுகள்
உலகை மாற்றியமைக்க புறப்பட்ட மகத்தான தோழன் லெனின் எங்கள் மாபெரும் ஆசானும் கூட.
புரட்சி என்ற சொல்லின் அர்த்தத்தை உலகுக்கு செயல் முறையில் நிகழ்த்திக் காட்டிய மகத்தான தோழன்.
1917 வரை இந்த உலகு மாற்ற முடியாத கனவுகளுடன் கட்டமைக்கப் பட்டிருந்தது சர்வாதிகாரமும் சுரண்டலும் பாடாளி வர்க்கத்தை அடிமைப் படுத்தியிருந்த இருள் காலத்திலிருந்து புரட்சிக் கனலாய் உருக் கொண்ட எங்கள் தோழன்.
ரஸ்ய நாட்டுக்கு மட்டுமல்ல உலக முழுமைக்குமான விடுதலையை சிந்தித்து அதன் வழி பயணித்த அவன் செயல் முறைகளும் எழுத்துக்களும் இன்று வரை நமக்கு வழிகாடியாய் பயணப் பட்டுக் கொண்டிருப்பது உலக யதார்த்தமாய் நீள்கின்றமை அண்மைய உண்மையாய் உள்ளது.
முன் எப்போதையும் விட தோழர் லெனின் சிந்தனைகளும் எழுத்திக்களும் அதன் தேவையும் உணரப் படும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மனிதம் பற்றி பேசி வாழ்ந்து அதீதங்கள் பற்றி கவலைப் படாமல் அற்புதங்கள் மனிதர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும் மனிதம் மட்டுமே மேலான சக்தி என்பதை உலகுக்கு உணர்த்திய எங்கள் தோழன்.
நம்பிக்கை மனிதனிடமே உள்ளது வேறு எதிலும் இல்லை என்பதை தன் எழுத்துக்களால் உலகம் முழுவதும் இன்று வரை நம் கை பிடித்து வழி நடத்தும் பெரும் மானுட மீட்புக் குரல் எங்கள் தோழன் லெனின் .
நூற்றியைம்பது ஆண்டுகள் கடந்தும் உன் பிறப்பின் மகத்துவம் இன்னும் குறையவில்லை.
உன் தீட்சண்யம் மிக்க பார்வை எம்மோடு
எங்கள் தோழனை கொண்டாடும் நாள் இன்று
வார்த்தைகளால் மடுமல்ல வாழ்வால் நாம் முன்னெடுக்கும் மானுட நேயத்தால் அதன் வழி செல்லும் முற்போக்கு அரசியலால்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி