வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

பொன் மகள் வந்தாள் பெண் மகளாக

பொன் மகள் வந்தாள்
பெண் மகளாக
பொன் மகள் வந்தாள் தமிழ் சினிமாவின் புதிய வரவும் புதிய திரையிடல் உத்தியும் .உலகம் முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் லட்சக் கணக்கானோர் இப் படத்தை பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் காணப் படுகிறது.
சம காலத்துக்கு தேவையான கதையை பலர் மறந்து போன நடிகர்களின் கூட்டிணைவுடன் படம் வெளி வந்திருக்கிறது .அவரவர்க்கு கொடுக்கப் பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர்
தமிழ் சினிமாவில் பெண் மைய திரைப்படங்கள் வருவதே மிகக் குறைவு கதாநாயகர்களுடன் ஆடிப் பாட மட்டும் விதம் விதமான பெண் பொம்மைகள் தேவைப் படுகின்றனர் அந்த அளவோடுடன் அவர்கள் பங்களிப்பு முடிந்து விடுகிறது.
அண்மையில் பல ஆங்கில இந்திப் படங்களை பார்க்கும் வாய்ப்பு இந்த நாட்களில் எனக்கு மிக அதிகமாகவே கிடைத்தது.பெண்களை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படங்கள் நிறையவே அண்மைக் காலங்களில் வந்திருக்கின்றன .
ஒரு சொல்லுக்காகவே தன் உரிமைக்கு போராடும் பெண்கள்,ஒரு அறை விழுந்ததற்காகவே கொத்தித்தெழும் பெண் ஆளுமைகள் ,தங்கள் குழந்தைகளுக்காக போராடும் பெண்கள்,வர்த்தக சாம்பிராச்சியத்திலும் ,கலைப் பாரம்பரியங்களிலும் சூறையாடப் படும் பெண்கள் அவர்கள் கொதி நிலை திரை மொழியாய் நம்மில் அதிர்வுகளை ஏற்படுத்தி செல்கின்றன.
பொன் மகள் வந்தாள் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டிய கதைகளை பேசுகிறது.பெண் மொழி ,பெண் உணர்வு என்கிற தளத்தில் பிரச்சினைகளை எதிர் கொள்ளல் ஏற்படும் சவால்கள் இவற்றை தாண்டி நீதிக்கான போராட்டமாக எல்லோரது அங்கிகாரத்தையும் பெறுகிறது.
ஜோதிகா புதிய அவதாரமாய் நடிப்பில் அசத்துகிறார்.ஆனால் திரைப் படம் காட்சி மொழி சார்ந்தது என்பதை இயக்குனர் இன்னும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்திருக்கலாம்.
சரவணக்குமாரின் வசனங்கள் நம்மில் சரியாய் வந்து விழுகிறது.
மொத்தத்தில் பொன் மகள் வந்தாள் பெண் மகளாய் நம் முன்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி