வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

அண்டம் கிடு கிடு கிடுவென பாடி அதிர்ந்த குரல்

அண்டம் கிடு கிடு கிடுவென பாடி அதிர்ந்த குரல்

எத்தனை முகங்கள் கொண்டாய் என் தோழா.
மா கலைஞனும் என் தோழமையும் ஆசானுமான,
பேராசிரியர்.கே.ஏ.குணசேகரன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.
"மனுசங்கடா" என்று நீ எழுப்பிய குரல் இன்னும் இன்னும் அர்த்தமுள்ளதாய் ஒலிக்கிறது.
வடு எனும் அவரது சுய சரிதை நூல் தமிழ் நாட்டின் தலித் மக்களின் வாழ்வின் வெட்டு முக தோற்றம் அசுரன் திரைப்படம் பார்த்த பொழுது "வடு" வில் சொல்லப் பட்ட செய்திகள் நிகழ்வுகளாய் வந்து மறைந்தன.
ஒரு கொடுமை மிகு சூழலில் இருந்து தன்னை தகவமைத்துக் கொண்ட பேரறிஞன் கே.ஏ.ஜி அவர்கள்.
Image may contain: 1 person, smiling, text இள வயதில் இடது சாரி சிந்தனைகளால் கவரப் பட்ட அவர் மண்ணின் பாடல்கள் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தமிழ் நாட்டின் மண் சார்ந்த இசைக்கு மகுடம் சூட்டி மாண்பை ஏற்படுத்தினார்.இன்றய தொலைக் காட்சிகள் தாங்கள்தான் நாட்டுப் புற இசையை உலகத்துக்கு அறிமுகப் படுத்தியது போல ஒரு பிரசாரத் தொனி பொருள் பட ஓலமிடுகின்றன கிட்டத் தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னமேயே என் தோழன் மண்ணிசையின் தலை மகனாய் வலம் வந்தான் மக்கள் எழுச்சிப் பாடல்களால் இன்றும் உயிர் கொள்கிறான்.
Image may contain: 1 person தமிழ் நாட்டின் பாரம்பரிய கலை வரலாற்றில் "தன்ன்னானே" இசைக் குழு பெறும் இடம் தனித்துவம் மிக்க்கது அந்த குழுவில் பாடிய பலர் இன்று பிரபலமான பாடகர்களாக பெருமை பெற்றுள்ளனர்.
பல் துறை ஆளுமை பெற்ற ஒரு அறிவு ஜீவி கே.ஏ.ஜி அவர்கள்.
பாடகர்,ஆடகர்,நடிகர்,நாடக நெறியாளர்,நாடக எழுத்தாளர்,இசை அமைப்பாளர்,கவிஞர்,தமிழ் ஆராய்ச்சியாளர் என ஆளுமைத் திறன் கொண்ட ஆற்றல் வல்லான்.
"அண்டம் கிடு கிடு கிடுவென ' பாடி அதிர்ந்த குரல்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி