வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

லண்டனில் ஈழ நாட்டியம் ஈழத் தமிழர் நடனம் தமிழ் மரபுத் திங்கள் விழா 18.01.2020 சனிக்கிழமை

    லண்டனில் ஈழ நாட்டியம்
    ஈழத் தமிழர் நடனம்
    தமிழ் மரபுத் திங்கள் விழா
    18.01.2020 சனிக்கிழமை
    மாலை 6.30 மணி
    ஸரோஸ்ரியன் சென்ரர்
    440அலக்ஸான்ரியா அவனியு
    ஹரோவ்
    HA2 9TL

    எங்கிருந்து நாம் எங்கு வரை
    1960 களில் ஒரு தேசிய எழுச்சியின் தமிழ் விழைவாய் பேராசிரியர் சு.வித்தியானந்தன் நம் வேர்களில் ஊன்றிய கூத்து மரபின் செழுமையை உலகறியச் செய்யும் முயற்சியில் நம் கலை அடையாளங்கள் கிராமங்களிலிருந்து நகர முகம் கண்டன.
    Image may contain: 7 people, including Balasingam Sugumar, people smiling, people on stage and indoor
    வடமோடி,தென் மோடி,பற மேளக்கூத்து ,கோவலன் கூத்து,காத்தவராயன் கூத்து,தென் பாங்கு,வட பாங்கு,வசந்தன் கூத்து என நம் ஆடல் வடிவங்களின் செழுமை நம் கலை பண்பாட்டின் தொன்மையையும் தனித்துவத்தைதும் பறை சாற்றுபவை.
    இத்தனை வடிவங்கள் இருந்தும் இவை உலகப் பரப்பில் முழுமையான அறிமுகம் பெறவில்லை.
    கிராமங்களில் விடிய விடிய அல்லது பல மணி நேர அரங்காடலாக இது நிகழ்ந்து முடிகிறது.கிராமங்களை பெயர்த்து எடுத்து நாம் உலகப் பரப்பில் பயணிக்க முடியாது.சென்ற நூற்றாண்டில் ஆசியா முழுவதும் இத்தகைய மரபுக் கலைகளின் மீள் உருவாக்கம் நவீன சமூகத்துக்கான வடிவ மாற்றம் பெற்று எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்கப் பட்டது.ஜப்பானிய கபுகி,நோ,சீனத்து பீகிங் ஒபேரா,இந்திய கதகளி,ஏன் சதிராட்டமாயிருந்த தேவதாசியாட்டம் பரத நாட்டியமாய் உரு மாறியமையும் நம் கவனத்துக்குரியது.
    இந்த பின்னணியில்தான் பேராசிரியர் வித்யானந்தன் தொடக்கம் பேராசிரியர் மெளனகுரு வழியாக அந்த மரபின் ஒரு கிளை வழியாய் ஈழ நாட்டியம் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுக சிறுக அடி எடுத்து வைத்து இன்று ஈழத் தமிழர் நடன அடையாளமாய்,
    லண்டன் பிரேமநாட்டியாலயாவின் பிரமிளா ரஜனி ரவீந்திரனின் மாணவிகள் இந்த நிகள்வின் பங்கு பற்றி புதிய சாதிப்பின் புள்ளியாய் எதிர்வரும் 18.01.2020 சனிக்கிழமை லண்டனில் தமிழ் மரபுத் திங்கள் பிரகடன நிகழ்வில் முக்கிய நிகழ்வாக உங்கள் முன் வருகிறது.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி