வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

லண்டனில் ஈழ நாட்டியம்- பால சுகுமாரின் பணிகள்- பேராசிரியர் .சி.மெளனகுரு

லண்டனில் ஈழ நாட்டியம்- பால சுகுமாரின் பணிகள்-
பேராசிரியர் .சி.மெளனகுரு
----------------------------------------------------------------------
பாலசுகுமார் பற்றி தனியாக எழுத வேண்டும்
,அந்த அளவு விடயம் என்னிடம் இருக்கிறது.
இது அவர் அண்மையில் லண்டனில் மேடையிட்ட ஈழக்கூத்துக்கான வாழ்த்துரையே
, ,கிழக்கு பல்கலைக் கழக கலைப்பீட வளர்ச்சியில் அவருக்கு ஓர் முக்கிய பங்கிருக்கிறது,
அங்கு அவர் 1992 இல்
தற்காலிக விரிவுரையாளராக சேர்ந்து
நிரந்தர விரிவுரையாளராகி,
பின்னர் சிரேஸ்ட விரிவுரையாளராகி
நுண்கலைத் துறைத் தலைவராகவும்
பின் கலைப்பீடாதிபதியாகவும் இருந்திருக்கிறார்
அவர் நிறைய நாடகங்களை இங்கு செய்தவர்.
பலரை உருவாக்கியவர்
அயராத உழைப்பாளி
எனகோர் வலதுகரமாக அன்று இங்கு திகழ்ந்தார்,
சந்தர்ப்ப சூழ் நிலைகளினால் புலம் பெயர்ந்து புதிய சூழலில் விருப்பமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் கலைஞர் அவர்
. அவரது எழுத்துகளில்
எப்போதும் தாய் நாடுதான் இடம் பெறும்
வரவேண்டும் செயற்பட வேண்டும் என்ற ஆதங்கம் அவ்வெழுத்துகளில் தென் படும்
அதுகண்டு நம் மனம் துயருறும்
இடையில் ஒருமுறை லண்டன் சென்றபோது நானும் சித்திரலேகாவும் அவர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி அவர் அன்பு மனையாள் பிரமிளாவுடனும் மகனுடனும் அளவளாவி மீண்டோம்
ஹீத்ரூ விமான நிலையத்திற்கு எம்மை கொண்டு விட்ட அந்தக்கணங்களில் சுகுமார் பிரமிளா கண்களில் காணப்பட்ட
அந்த ஏக்கம்
பிரிவுத்துயர் இன்னும் கண்ணுள் நிற்கிறது
சுகுமார் 1977 இல் யாழ்பலகலைக்ழகத்தில் தமிழ் சிறப்பு செய்ய மாணவராக வந்து சேர்ந்தார்
,அச்சமயம் புதியதொரு வீடு நாடகத்திற்காக அவருக்கும் இன்னும் சிலருக்கும் கூத்தாட்டம் பழக்கியதும்
1980 களில் சங்காரம் வடமோடி நாடகத்திற்காக அவருக்கு வடமோடி ஆட்டம் பழக்கியதும் ஞாபகம் வருகிறது
1994 இல் கிழக்குபல்கலைக்க்ழகத்தில் புதியதொரு வீட்டிற்காக மீண்டும் கூத்தாட்டம் பழக்கப்பட் ட து
அவர் யோசனையின் பேரில்தான் 1995 இல் கண்ண்கி குளுர்த்தி போட்டோம்
2002 கிழக்கிசையில் அவர் பங்கு அளப்பரியது
2007 இல் லயம் ஆற்றுகையில் அவரும் நானும் ஒன்றாக மேடையேறினோம்
அதில் ஒரு சிறு பகுதியாக
வள்ளியம்மன் இசை நாடகமும்
ஹரிசந்திரன் இசை நாடகமும் இடம் பெற்றது
வள்ளியாகவும் சந்திரமதியாகவும் சஜானன்தி பாக மேற்றாள்.
விருத்த முருகனாக பலசுகுமார் நடித்தார், ஹரிசந்திரனாக நான் நடித்தேன்
அவர் ஆடுவார், பாடுவார், நடிப்பார்
2000 ஆம் அண்டில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இராவணேசன் மேடையிட எண்ணினோம்.
, கூத்துபயிற்சி பெற்ற நடிகர்கள் தேவைப்பட்டனர்
முக்கியமாக 2000 ஆம் ஆண்டுகளில்
ஒரு வருட காலம் வாரம்தோறும் அவருக்கும் அதில் பங்குகொள்ளவிருந்த
ஜெயசங்கர்,
சீவரட்ணம்,
சந்திரகுமார்
பரமானந்தம்
,ரவிச்சந்திரன்,
பரமேஸ்வரி,
தவராஜா
குணசீலன்
கலைமகள்
கௌரீசன்,
மோஹனதாசன்
விமல்ராஜ்,
விவேகானந்தன்
தயாபரன்,
கஸ்தூரி
துஸ்யந்தி
பார்த்திபன்,
உமா முதலாக ஏறத்தாள 30 பேருக்கு வடமோடி ஆட்டம் பழக்கினோம்
Image may contain: one or more people, people standing and indoor அதில் சுகுமாரின் மகள் அனாமிகா முன் நின்று பழகியதும். வந்த அனைவரும் அதில் தீவிரமாக ஈடுபட்டதும் பசுமை நினைவுகளாக மனதில் தோன்றுகின்றன
.
அனாமிகாவின் ஆட்டம் ஒன்றை உலக நாடக தின மேடையில் அரங்கேற்றினோம்.
அவ்வாண்டில் தன் நாம் இன்னிய அணியினை இங்கு ஆரம்பித்தோம் அதற்கு சுகுமாரின் உதவி அளப்பரியது
.அது பற்றி நான் தனியாக எழுத வேண்டும்
2005 இலும் சில புது மாணவர்கள் நம்முடன் இணைந்து கொண்டனர்.
முக்கியமாக சஜானந்தியின் வரவு முக்கியமானது
.
மட்ட்க்களப்புக் கூத்தாட்டங்களைத் தன் வயப்படுத்தி இராவணேசனில் மண்டோதரியாகத் தோன்றினாள் அவள்
சுகுமார் புலம் பெயர்ந்த பின் சும்மா இருக்கவில்லை தான் பயின்ற கூத்துக்கலையை நோர்வே பாரீஸ் முதலாம் நாடுகளில் சென்று பழக்கியதுடன் இன்னிய அணியினையும் அங்கு அறிமுகம் செய்துள்ளார்
ஈழநாட்டியம் என ஓர் கருத்துருவை உருவாக்கி அதுசம்பந்தமாகப் பேசியூம் எழுதியும் வருவதுடன் செயற்படுத்தியும் வருகிறார்,
அவர் வெறும் வாய்சொல் வீரரல்ல
செயல் வீர ர்
அவ் ஈழ நாட்டியம் லண்டனில் அண்மையில் தமிழ் மரபு விழாவில் மேடையேறியதாக முக நூல் மூலம் அறிந்தேன்
மிகவும் மகிழ்வடைந்தேன்
படங்கள் கண்டேன்
அதில் சஜானந்தியையும் கண்டேன் அவள் தைரியநாதன் மகள்
இசை நாடக மரபில் வந்தவள்
கிழக்குப்ல்கலைக்ழகத்தில் எமது கூத்துப்பயிற்சியில் கலந்து கூத்தைத் தனது உடலிடம் கொண்டவள்
என்னுடன் கூத்துப்பழக்க நோர்வேக்கு 2010 இல் வந்தவள் என்னுடன் வந்த இன்னொருவர் மோஹனதாசன்
அவளைச் சுகுமாருடன் மேடையில்நீண்ட
நாட்களுக்குப் பின் காணுகையில் மகிழ்ச்சியுண்டாகிறது
அவள் ஓர் மிகசிறந்த ஆற்றுகையாளி
மேடைக்கென்றே பிறந்தவள்
கொழும்பிலும் சுகுமாருடனும் என்னிடம் பழகிய ஏனைய கலைஞர்களுடனும் சென்று சிங்களக் கலைஞர்களுக்கு வடமோடி தென்மோடி ஆட்டங்களை அறிமுகம் செய்தோம்
ஆட்டங்கள் தொடர்ந்தன
பயிற்சி பெற்றோர் பழ்கிய சிலர் அந்த நிகழ்வுகளையே மறந்தும் போனார்கள்.
அதனைத் தொடர்வார்கள் என எதிர்பார்த்தோம்
. யாரும் தொடரவில்லை.
தொடர விரும்பிய சிலருக்குச் சில தடைகள் தோன்றின
சிலர் சோர்ந்து போனார்கள்
சிலர் வேறு திசைகளில் சென்றார்கள்,
இங்கு சுகுமார் இருந்திருப்பின் கட்டாயம் அதனைத் தொடர்ந்திருப்பார்
, சும்மா ஒன்றும் செய்யாமல் பேசிகொண்டேயிருப்பதும் அதிகாரத்திற்கு பயந்து விடுவதும் என்ற குணங்கள் அவரிடம் இல்லை
. அத்தோடு பெரு வளமும் இங்கிருந்தது
.
அதற்கான சூழலும் இருந்தது.
அதனைத் தீவிரமாகத் தொடர்வார்கள் என நான் நினைத்திருந்த பலர் அதனை இங்கு தொடரவில்லை.
அப்படி ஒன்று நடந்தது என்பதையே சிலர் மறந்தும் விட்டார்கள்
ஆனாலும் என்ன
சென்ற இடத்தில் சுகுமார் அதனை
விதைக்கிறார்
செயற்படுகிறார்.
சென்ற காலங்களை நன்றியோடு நினைவுகூருகிறார்.
அவருக்குப் புலம் பெயர்ந்தோர் பலர் ஆதரவும் தருகிறார்கள்
பாரிசிலும் நோர்வேயிலும் அதனை செய்திருக்கிறார்
இப்போது லண்டனில். பயிற்சி கொடுத்து மேடையிட்டுள்ளார்
. கற்றதைப் பெற்றதை செயல் முறைபடுத்துவோரே உண்மைகலைஞர்கள்.
அதனை அடுத்த தலைமுறைக்கு அளிப்போர் பெரும் மரியாதைக்குரிய பெரும் கலைஞர்கள்.
Image may contain: 7 people, including Balasingam Sugumar, people smiling, people standing
.புலம் பெயர்ந்த இளம் தலைமுறை நமது ஆட்டமுறைகளை தாளக்கட்டுகளை அறிகிறது
உச்சரிக்கிறது.
ஆடுகிற்து
இது மரபின் நீட்சி,
Image may contain: 1 person, on stage and standing பலதடைகள் வந்தும்
உளசோர்வுகள் ஏற்பட்டும்
அவை புறந்தள்ளிச் செயற்படுகிறார் பாலசுகுமார்
. இந்த உளவலிமை நம் மாணவர்க்கும் வாய்க்கட்டும்
' பெரு மகிழ்வடைகிறேன் சுகுமார்
மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்களுக்கும் சஜானந்திக்கும்
.உங்களுக்கு உதவியாக இருந்தோருக்கும்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி