வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 11 June 2020

உலக மரபுரிமை நாள் 2020 ஏப்ரல் 18 World Heritage Day 2020

    உலக மரபுரிமை நாள் 2020
    ஏப்ரல் 18
    World Heritage Day 2020
    ஈழத் தமிழர்கள் அவர்கள் வரலாறு தொல் மரபுகளால் நிறைந்தது.வடக்கு கிழக்கில் கிராமங்கள் தோறும் புதைந்து கிடக்கும் தொல் மரபுக் கதைகளும் அதனோடு இணைந்த கலாசார பழக்க வழக்கங்களும் பண்பாட்டியல் கூறுகளும் ஒரு தொல் வரலாற்றுச் சமூகத்துக்கான வரை படமாய் நீண்டு கிடக்கிறது.
    குன்றுகளிலும் கோயில் மாடங்களும் குகைகளும் தூண்களும் தொல் எழுத்தினால் நம் பண்டை நாட்களை எழுத்தில் கல் வெட்டாய் காலத்தால் அழியாத கரூவூலங்களாய் இன்று வரை சான்று பகரும் சாட்சிகளாய் எம்மவர்க்கு தகை சால் பெரு வெளியாய் சரித்திரத்தை சொல்லி நிற்கின்றன.
    Image may contain: outdoor ஆற்றோரங்களும் கழி முகங்களும் அவற்றில் புதைந்துள்ள வரலாற்று புதையல்களாய் கறுப்பு சிவப்பு மட் பாண்டங்களும் தாழி அடக்க அழிவிடங்களும் நம் மூதாதையரின் காலடிகளை நிலையுறுத்தி நிற்கின்றன.
    பெருங் கற்காலத்தை நினைவுறுத்தும் சுவடுகளும் சுடு மண் சிற்பங்களும் கிழக்கிலும் வடக்கிலும் வன்னியிலும் பண்பாட்டு பரவலை சொல்லும் சாட்சிகளாய் நம் தொல்லியல் வரலாற்றை கட்டியம் சொல்லி நிற்கின்றன.
    நம் கூத்து மரபுகள் தொன்மையான ஒரு கலை மரபை அறிவுறுத்தி நிற்கின்ற அதே வேளை நம் ஈழப் பறையும் அதன் வழி வருகின்ற சொர்னாளியும் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மவர் வாழ்வோடு பயணிக்கும் மரபார்ந்த இசையும் நம் தொல் மரபுரிமைகளாய் நம் வாழ்வின் வழி தோறும் கொட்டிக் கிடக்கின்றன

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி