வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

சம்பூர் தந்த கல்வியாளர் திருமிகு.வ.கனகசிங்கம்

நம்மவர்களை நாம் அறிவோம்
சம்பூர் தந்த கல்வியாளர் திருமிகு.வ.கனகசிங்கம்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் மேனாள் முதல்வர்.
சம்ம்பூர் மண்ணுக்கு கல்வியால் பெருமை சேர்த்த கல்வியாளர்.சம்பூர் மகாவித்தியாலயத்தில் படித்து ஒரு உயர் கல்வியாளனாய் உயர்ந்து ஊருக்கு பெருமை சேர்த்தவர்.
வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் பேராசிரியர் மெளனகுருவோடு ஒன்றாக கல்வி கற்ற பெருமைக்குரியவர்.
இளமையிலேயே மிகச் சிறந்த மாணவனாய் தன் திறனை வெளிப்படுத்திய இவர்.சம்பூர் மண் பெருமை கொள்ளும் பெரு மகனாய் தன் கல்வியால் உயர்ந்த உத்தம பண்பாளர்.
ஆசிரியராய் கல்வி நிர்வாக சேவையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் கற்பிப்பதில் தனித்துவ திறன் கொண்டவர்.அழகாய் பாடம் நடத்தும் திறன் வாய்க்கப் பெற்றவர்.தமிழ் மொழியை அழகுறப் பேசும் ஒருவராக நன் இவரைப் பார்பதுண்டு.
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் வளர்ச்சியில் இவர் பங்கு மகத்தானது.ஆசிரிய மாணவர்களின் திறனை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை காட்டியவர்.கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையோடு இணைந்து ஆசிரிய மாணவர்களுக்கான நாடக பயிற்சிப் பட்டறைகளை நடத்தி ஆசிரியர்களின் திறன் அபிவிருத்தியில் புதிய புதிய அணுகு முறைகளை கையாண்ட உயர் கல்வியாளன்.
1995ம் ஆண்டு உலக நாடக தின விழா கருத்தரங்கு கண்காட்சி என்பனவற்றை நடத்துவதற்கு பயிற்சிக் கலாசாலை மண்டபத்தை தந்து அதற்கு உறுதுணையாய் நின்று எங்களோடு தோழோடு தோழ் நின்று உழைத்தவர்.பேராசிரியர் மெளனகுருவிடம் தீவிர அன்பும் நட்பும் கொண்ட பெருமகன்.
எங்கள் குடும்பத்தோடு மிகுந்த நெருக்கமான நட்பு பாராட்டியவர் என் மாமனார் திரு.டி ஜி.சோமசுந்தரத்திடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.என் மகள் இறந்த போதும் மாமனார் இறந்த போதும் உடன் வந்து ஆறுதல் சொன்னவர்களில் அன்னாரும் ஒருவர்.
மனிதாபிமானமும் மற்றவர்களை மதிக்கும் பண்பும் நிறையப் பெற்றவர்.என் பக்கத்து ஊரான் என்ற வகையில் எனக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகம் கற்றாரை கற்றாரே காமுறுவர்.
என் நடிப்பை பாராட்டி என் நாடக அளிக்கைகளை பாரட்டி கட்டித் தழுவிய அந்த கணங்களை இந்த நாளில் எண்ணிப் பார்க்கிறேன்.
1939ல் பிறந்து 2005ல் காலமாகி தன் வாழ் நாள் முழுவதும் கல்வியை தன் உயரிய நோக்காய் கொண்ட உயர் கல்வியாளர் .
அவரது அட்டகாசமான சிரிப்பு மாறாத ஒன்றாய் மனங்களில் அவரது பதினைந்தாவது வருட நினைவு நாளான இன்று எம்மோடு.
பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி