வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

கடையக் கூத்து

கடையக் கூத்து

Image may contain: 1 person
கடயம் ஆடிய காரிகை இவள்
மாதவி எனும் இந்திரப் பெண்ணாள்
மருத நிலத்து அழகினை அள்ளி
தமிழர் நடனமாய் தந்திட்ட தமிழிச்சி

ஆடியே சுழன்றாள் மருதப் பாடலும்
பண்ணோடு இசையும் பறையும் ஒலிக்க
வாழ் நிலத்தின் அழகைச் சொல்லி
மாதவி ஆடிய கடயக் கூத்து

விஞ்சை வீரனும் அவன் காதலியும்
கண்டு மகிழ்ந்த பதினோராடல்
பழந் தமிழ் மரபை பறை சாற்றி நின்ற
அத்தனை ஆடலும் நம் நிலத்து ஆடல்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி