வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

ஈழத்தின் மா கலைஞன் கலைஞர் ஏ.ரகுநாதன்

அஞ்சலி
ஈழத்தின் மா கலைஞன்
கலைஞர் ஏ.ரகுநாதன் மறைந்தார்.வாழும் வரை கலை வாழ்வே தன் மூச்சாய்க் கொண்ட ஈழத்து மா கலைஞன் ரகுநாதன் அவர்கள்.
நாடகம் திரைப்படம் நடிப்பு அதனோடு இணைந்த எல்லா கலைகளிலும் பாண்டித்தியம் மிக்க கலைஞர் அவர்.
கலையரசு சொர்ணலிங்கத்தின் பள்ளியில் வளர்ந்த நடிப்பாளுமை அவர்.
ஈழத்து சினிமா வரலாற்றில் "நிர்மலா"எனும் திரைப்படத்தின் மூலம் அழியாத தடம் பதித்து "தெய்வம் த்ந்த வீட்டில் " நடிப்பின் பரிமாணங்களை வெளிப் படுத்திய பண்பட்ட கலைஞன் அவர்.
பல நூறு மேடைகளை கண்ட கலை வரலாறு அவருக்குரியது .
புலம் பெயர்ந்து வந்த பின் குறும் திரைப்படங்கள் மூலம் ஈழ சினிமாவுக்கு புதிய முகம் தந்தவர்.
பல தடவைகள் அவரை பாரிசில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றவன் அவர் தயாரித்து வெளி வராமல் இருக்கும் ஒரு நெடும் திரைப்படத்தில் ஒரு சிறு பாத்திரம் ஏற்று நடித்தமை அந்த மா கலைஞனோடு சில நாட்கள் களித்த பொழுதுகளாய் நீண்டு கிடக்கிறது.
கடைசியாக லண்டனில் இரண்டு வருடங்களுக்கு முன் அவர் மகள் நடத்தும் நாட்டியப் பள்ளி ஆண்டு விழாவில் சந்தித்தமை இன்றும் மனதோடு
போய் வருக எம் தோழமையே
ஈழக் கலை வரலாறு எப்போதும் உனைப் பேசும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி