வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

அகவை எண்பதில் ஆசான் பேராசிரியர்.அ.சண்முகதாஸ்

அகவை எண்பதில் ஆசான் பேராசிரியர்.அ.சண்முகதாஸ்
03.01.2020
முதல் சந்திப்பு
1976 ஆம் ஆண்டு சேனையூர் மத்திய கல்லூரியில் முதன் முதல் க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்கப் பட்டு பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன் நடை பெறும் ஒன்று கூடலுக்கு பிரதம விருந்தினராய் பேராசிரியர் அழைக்கப் பட்டிருந்தார்.அன்று அவர் அழகு தமிழில் மயங்கிய நான் இன்று வரை அவர் மாணவனாய்.நாற்பத்தி மூன்று வருட நட்பு.
அன்று அவர் ஆற்றிய உரையும் அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலும் தமிழ் பால் என்னை மேலும் ஈர்த்தது.அவர் குரலும் விடயங்களை அறுத்து உறுத்து தெளிவு படுத்திய விதமும் என்னை வெகுவாக கவர்ந்து அவர் பால் ஈர்த்தது.
தொடர்ந்து பல்கலைக்கழகம் சென்ற பின் யாழ் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் அவர் நேரடி மாணவனாய் அவர் ஆளுமையில் கட்டுண்டவனாய் தொடர்ந்த கற்றலும் கலந்துரையாடல்களும் விரிவுரைகளும் விழாக்களும் என ஆதர்சித்த அற்புத நாட்கள் அவை.
மொழியியலின் கூறுகளை மிகச் சுவாரஸ்யமாக சுவை குன்றாது இலக்கியம் எப்படி நயக்குமோ அவர் மொழியில் மொழியலும் நயந்து வழி விடும்.
Image may contain: 3 people, including Balasingam Sugumar, people smiling, people standing
சிலப்பதிகாரத்தை அவர் கற்பிக்கும் விதமே தனி அழகு இன்று வரை தமிழின் தலை சிறந்த இலக்கியமாக நான் கொண்டாடுவது சிலப்பதிகாரமே.இசையோடு பாடல்களைப் பாடி அவர் கற்பிக்கும் நேரம் நாங்கள் அவர் குரலில் மயங்கிக் கட்டுண்டு கிடப்போம்.
Image may contain: 1 person, suit " திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னி,செங்கோல்-அது ஓச்சி,
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
அறிந்தேன் வாழி காவேரி"
அவரை நினைக்கும் போதெல்லாம் இந்த கானல் வரி என் காதுகளை நிறைத்து நிற்கும்.
வழ்த்துகள் எங்கள் பேராசானுக்கு

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி