கலைஞர் எனும் காந்தம்
கலைஞரின் 97ஆவது பிறந்த நாள் நினைவாய்
கலைஞர் தமிழ் வசீகரித்துக் கொண்ட முத்தமிழ் அறிஞர்.ஒவ்வொரு மொழியிலும் அந்த மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்ற படைப்பாளிகள் காலத்துக்கு காலம் அந்த மொழிக்கு செழுமை சேர்ப்பவராக இருப்பார்கள் அந்த வகையில் தமிழ் கலை இலக்கிய வரலாற்றில் அதன் நவீன முகத்துக்கு ஒரு ஒரு செவ்விய மரபை தன் எழுத்தாலும் பேச்சாலும் உருவாக்கியவர் கலைஞர்.

சேக்ஸ்பியர் ஓரு நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த நாடக
ஆசிரியர் அவர் இன்றும் அவர்களது இலக்கியச் செழுமையின் தலை மகராக கொண்டாடப்
படுகிறார் ஆங்கில இலக்கியத்துக்கு ஒரு செவ்விய மரபை தன் எழுத்துக்களால்
அடையாளப் படுத்தினார் அவருக்குப் பின் அவர் போல எழுத முற்பட்டனர் ஆனால்
அவரை இதுவரை யாரும் மிஞ்சியதில்லை.அது போலவே கலைஞரும் தமிழின் நவீன
இலக்கியத்துக்கு ஒரு செவ்விய மரபை உருவாக்கினார்.
கலைஞர் உருவாக்கிய அந்த செவ்விலக்கிய மரபு என்பது சினிமா,கவிதை,நாவல் ,சிறுகதை சொற்பொழிவு என விரிந்து கிடந்தது அரசியல் மேடைகளை இலக்கிய மேடையாக்கி காட்டியவர் கலைஞர்.
ஒரு காந்தம் போல தன்னைச் சூழ உள்ளவர்களை கவரும் வல்லமை அவருக்கு இருந்தது அது அவர் எழுத்தால் பேச்சால் சாத்தியமாயிற்று.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சாதியம் தாண்டி பொதுமை நோக்கில் சுயமரியாதை தமிழின் தனித்துவம் திராவிடக் கொள்கை பகுத்தறிவு என தன் எழுத்தை போராயுதமாக மாற்றிக் காட்டியவர்.
பாராசக்தி எனும் திரைப்பட வசனம் இன்னமும் உலக சினிமாவில் அதை மீறிய பகுத்தறிவுக் கருத்தை சொல்ல முடியாத அளவுக்கு சொல்ல வைத்தவர் தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய வசனமும் சிவாஜிகணேசனின் வசீகரித்த நடிப்பும்.
சங்க இலக்கியத்துக்கு தன் தமிழ் நடையால் எல்லோரும் எளிதாய் புரிந்து கொள்ள உரை சான்ற எழுத்தன் அவர்.தொல்காப்பிய பூங்காவால் சாதாரணமானவன் கையிலும் பழந்தமிழ் இலக்கணத்தை பதிய வைத்தவர் ,திருக்குறளுக்கு புது உரை எழுதி அதை பொது தளத்தில் எல்லோரும் புரிந்து கொள்ள வகை செய்த வண் தமிழ் உரையாளர் அவர்.
தமிழை எப்படி தன் வயப் படுத்தலாம் என்பதில் கலஞருக்கு நிகர் கலைஞரே.கலைஞரை ஒரு கண்டு பிடிப்பாளர் என்று நான் சொல்வேன் தமிழை எப்படி ஆற்றொழுக்காய் அழகாய் கவித்துவமாய் பேசலாம் என்பதை கண்டு பிடித்தவர் கலைஞர்.அவர் வழி இன்று வரை அந்த மரபில் தமிழை கையாளும் பலரை நாம் பார்க்கிறோம்.
தமிழ் நடையில் புதிய நடையை கண்டு பிடித்தவர் கலைஞர் அது அவருக்கான நடையாக இருந்தாலும் அது கவிதைகளில் கட்டுரைகளில் சினிமா வசனங்களில் கூடு கட்டிக் கிடந்தது.
தமிழ் மேல் ஆர்வம் கொள்ள வைத்த எழுத்துக்களுக்கு பேச்சுக்களுக்கும் சொந்தக்காரன் கலைஞர்.கடல் தாண்டி அவர் எழுத்து வசீகரத்தால் தமிழில் காதல் கொண்டோர் பலர்.
கலைஞர் வாழ்வார் தமிழ் உள்ளளவ

No comments:
Post a Comment