வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

ஓ நண்பனே துயரம் மூழ்கிய மனதோடு நான்.

ஓ நண்பனே
துயரம் மூழ்கிய மனதோடு நான்.
23.01.2020 ல் எழுதியது

நண்பா எதை எழுத எதை விட கிட்டத் தட்ட முப்பது வருட நட்பு.
மூன்று மாதங்களுக்கு முன் நீ பாரிசில் சந்தித்த போது என் கரங்களைப் பற்றிக் கொண்ட அந்த தருணம் இன்னமும் அதே உணர்வுடன்.
நானும் நீயுமாய் சந்தித்த சவால்கள் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் எதிர் கொண்ட விதம் எதிரிகளின் சதி வலை முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் இராஜேந்திரத்துக்கு எதிராக பின்னப் பட்ட நேரம் அதை முறியடித்து பல்கலைக் கழகத்தை அதன் வளர்ச்சியை முன் நகர்த்தியதில் உன் பங்கு அளப்பரியது.
Image may contain: 1 person, suit, text that says "Rest in peace sir Varnakulasingam) (Dr."
கிழக்குப் பல்கலைக் கழக ஜனநாயக ஆசிரியர் சங்கத்து தலைவராக நீ செயலாளராக நான் செயல் பட்ட போது நீ காட்டிய தீவிரம் மறக்க முடியுமா?கொலை அச்சுறுத்தல் வந்த போதும் அச்சமுறாத உன் தைரியம் .ஒரு முறை நம் இருவர் தலையிலும் ஒருவன் துப்ப்பாக்கியை வைத்து மிரட்டி ஜனநாயக ஆசிரியர் சங்கத்தை கலைக்க வேண்டும் என்று சொன்ன போது கலங்காத அந்த மனம் யாருக்கு வரும் .தொடர்ந்தும் தொய்வில்லாமல் சங்கத்தை கொண்டு நடத்தியமையும் எதிரிகளை முறியடித்து வெற்றி கொண்டமையும் வரலாறு.
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவில் கட்டுக் கட்டாய் புகார்களுடன் நம் எதிர் அணி பேராசிரியர்கள் விசாரணைக்கு வந்த போது நம் ஆசிரியர் சங்க தோழமைகளுடன் துணை வேந்தருக்கு எதிரான குற்றச் சாட்டுகளை பொடிப் பொடியாக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கியதை எப்படி மறப்பேன்.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு என நீ கொண்டிருந்த பற்று அந்த சமூகத்தின் மீது நீ கொண்டிருந்த காதல் அதற்காக உன் முன்னெடுப்புகளை எப்படி மறக்க முடியும்.
சுகு சுகு என நீ அழைக்கும் வாஞ்சை மிகு குரலை நான் இனி எப்போ கேட்பேன்
உன் கனவுகள் நிஜமாகும்
போய் வருக நண்பனே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி