வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

மரக்கால் கூத்து (மரக்கால் ஆட்டம்)

மரக்கால் கூத்து (மரக்கால் ஆட்டம்)



கொற்றவை வந்தாள்
கொற்றவை வந்தாள்
மற்றவை எல்லாம்
காலில் பொடி பட
கொற்றவை வந்தாள்




கண்கள் நெருப்பென
கைகள் பொருப்பென
கொற்றவை வந்தாள்
Image may contain: 1 person, smiling, standing மரக்கால் கொண்டு
மானுடம் காக்க
கொற்றவை ஆடிய
கொடுமைகள் தகர்த்த
வெறி மிகு கூத்தை
மாதவிப் பெண்ணாள்
தமிழ் நிலம் காண
தந்தெதிர் கொண்டாள்

ஆடல் அழகும்
அரிவையின் எழிலும்
தேரெனெ நிமிரும்
தென் தமிழ் பாவையும்
போரினை சொல்லும்
மரக்கால் எனும்
தொல் தமிழ் கூத்து

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி