வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

ஈழ நாட்டியம் ஒரு கனவின் நீட்சி

    ஈழ நாட்டியம்
    ஒரு கனவின் நீட்சி
    Image may contain: 7 people, including Balasingam Sugumar, people smiling, people standing
    அறுபது வருடங்களுக்கு முன் ஒரு நாள் பேராதனைப் பல்கலைக்கழக அரீனா அரங்கு தமிழ் சிங்களப் பேராசிரியர் குழாமும் பல்கலைக் கழக மாணவர்களும் அறிஞர்களும் கூடியிருக்கின்றனர்.பேராசிரியர் வித்தியானந்தன் ஆனைக்குட்டி அண்ணாவுயாரை அறிமுகப் படுத்துகிறார் சொக்க வைக்கும் சொர்ணாளி இசைக்கிறது நம் ஈழத்து தமிழ்ப் பறை அதிர்கிறது அரங்கு அமைதியில் உறைய ஒவ்வொரு தாளமாய் உணர்வுப் பரப்பை நிறைக்க தாள லயத்திலும் சொர்ணாளியுன் இசையிலும் மயங்கிக் கிடக்கிறது அரங்கு.
    நிகழ்வு முடிகிறது ,எழுந்த கரவொலி வானை நிறைக்க ஆனைக்குட்டி அண்ணாவியார் குழுவினர் மகிழ்வின் எல்லைகளை தாண்டி நிற்கின்றனர்.நம் மரபுக் கலையின் அறிமுகமாய் அமைந்த அந்த நிகழ்வு நம் ஆடல் மரபின் தொடர்ச்சியான மீட்டுருவாக்க முயற்சிகளின் வழிப்படுத்தல் நாயகனாய் பேராசிரியர் வித்தியானந்தன் .
    தொடர்ந்த தேடல் ஈழத் தமிழர் வாழ்விடங்கள் எங்கிணும் நிறைந்து கிடந்த கூத்து மரபுகளை அதன் ஆட்டக் கோலங்களை கண்டடைகிறார் பேராசான் வித்தியானந்தன்
    Image may contain: one or more people, people standing and indoor மட்டக்களப்பு வருகிறார் வந்தாறுமூலையில் மாணவனாய் பொறிப் பறக்க ஆடும் இளைஞன் மெளனகுரு ஆட்டக் கோலம் விரிய விரிய நம் கூத்து மரபின் அழகியலில் ஆட்பட்டவராக வித்தியானந்தன்.
    Image may contain: 1 person, on stage and standing அப்போதய அரசாங்க அதிபர் தேவநேசன் நேசையா ,கமலநாதன் மாஸ்ரர் துணை நிற்க பின்னர் அண்ணாவியார் மகாநாடு என நிகழ்வுகள் நீள பேராதனைப் பல்கலைக் கழக தமிழ் துறை நோக்கி கூத்து மீளுருவாக்கப் பணிகள் தொடர்கின்றன.
    கூத்து அண்ணாவுயாராய் செல்லையா அண்ணாவியார்.வட மோடி தென் மோடி இரண்டும் தெரிந்த மா கலைஞன்.
    Image may contain: one or more people, people on stage and people standing
    பேராசிரியர் சிவத்தம்பி,பேராசிரியர் கைலாசபதி ஆகிய அறிவுப் படையோடு சண்முகதாஸ்,மெளனகுரு,பேரின்பராஜா,அழகரெத்தினம்,கிருஸ்னமூர்த்தி சீவரத்தினம் என ஆடகர்கள் கர்ணன் போர்,வாலி வதை,இராவணேசன் ,நொண்டி நாடகம் புத்துருப் பெற்று புதிய மாற்றத்துக்கான விதைகளாய் வீரியம் பெறுகின்றன.
    இந்த மரபின் அடுத்த கட்ட நகர்வினை பேராசிரியர் மெளனகுரு முன்னெடுக்க அதன் இன்னொரு பரிணாமாய் இன்று ஈழ நாட்டியம்.
    (இன்னும் பேசுவேன்)
  • Image may contain: one or more people, people on stage, people standing and indoor
    Raveendran Nadesan மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!


  • Vinayakamoorthy Navaratnarajah அருமை
    தொடரட்டும்
  • Yogananthan Kanakasooriyam ம்ரபுகள் பேணப்பட்டு காக்கப்பட வேண்டும் பாராட்டுகள்

  • Maunaguru Sinniah 1978 இல் புதியதொரு வீடு நாடகத்திற்காக உங்களுக்கு கூத்தாட்டம் பழக்கியதும் 1980 களில் சங்காரம் வடமோடி நாடகத்திற்காக உங்களுக்கு வடமோடி ஆட்டம் பழக்கியதும் முக்கியமாக 2000 ஆம் ஆண்டுகளில் ஒரு வருட காலம் வாரம்தோறும் உங்களுக்கும் அதில் பங்குகொள்ளவிருந்978 இல் புதியதொரு வீடு நாடகத்திற்காக உங்களுக்கு கூத்தாட்டம் பழக்கியதும் 1980 களில் சங்காரம் வடமோடி நாடகத்திற்காக உங்களுக்கு வடமோடி ஆட்டம் பழக்கியதும் முக்கியமாக 2000 ஆம் ஆண்டுகளில் ஒரு வருட காலம் வாரம்தோறும் உங்களுக்கும் அதில் பங்குகொள்ளவிருந்த ஜெயசங்கர்,சீவரட்ணம்,சந்திரகுமார் பரமானந்தம்,ரவிச்சந்திரன்,பரமேஸ்வரி,தவராஜா குணசீலன் கலைமகள் கௌரீசன், மோஹனதாசன் விமல்ராஜ், விவேகானந்தன் தயாபரன்,கஸ்தூரி துஸ்யந்தி பார்த்திபன், உமா முதலான் 30 பேருக்கு வடமோடி ஆட்டம் பழக்கியதும் அதில் அனாமிகா முன் நின்று பழகியதும். வந்த அனைவரும் அதில் தீவிரமாக ஈடுபட்டதும் பசுமை நினைவுகளாக மனதில் தோன்றுகின்றன. அனாமிகாவின்
    ஆட்டம் ஒன்றை உலக நாடக தின மேடையில் அரங்கேற்றினோம். அவ்வாண்டில் தன் நாம் இன்னிய அணியினை இங்கு ஆரம்பித்தோம் அதற்கு உங்கள் உதவி அளப்பரியது.அது பற்றி நான் தனியாக எழுத வேண்டும்
    2005 இலும் சில புது மாணவர்கள் நம்முடன் இணைந்து கொண்டனர்.முக்கியமாக சதானந்தியின் வரவு முக்கியமானது.மட்ட்க்களப்புக் கூத்தாட்டங்களைத் தன் வயப்படுத்தி இராவணேசனில் மண்டோதரியாகத் தோன்றினாள் அவளை உங்களுடன் மேடையில் காணுகையில் மகிழ்ச்சியுண்டாகிறது அவள் ஓர் மிகசிறந்த ஆற்றுகையாளி கொழும்பில் நாம் நம் குழுவினருடன் சென்று சிங்களக் கலைஞர்களுக்கு வடமோடி தென்மோடி ஆட்டங்களை அறிமுகம் செய்தோம் ஆட்டங்கள் தொடர்ந்தன பயிற்சி பெற்றோர் பழ்கிய சிலர் அந்த நிகழ்வுகளையே மறந்தும் போனார்கள். அதனைத் தொடர்வார்கள் என எதிர்பார்த்தோம். யாரும் தொடரவில்லை. சிலர் சோர்ந்து போனார்கள் சிலர் வேறு திசைகளில் சென்றார்கள், இங்கு நீங்கள் இருந்திருப்பின் கட்டாயம் தொடர்ந்திருப்பீர்கள், சும்மா ஒன்றும் செய்யாமல் பேசிகொண்டேயிருப்பதும் அதிகாரத்திற்கு பயந்து விடுவதும் என்ற குணங்கள் உங்களிடம் இல்லை. அத்தோடு பெரு வளமும் இங்கிருந்தது.அதற்கான சூழலும் இருந்தது. அதனைத் தீவிரமாகத் தொடர்வார்கள் என நான் நினைத்திருந்த பலர் அதனை இங்கு தொடரவில்லை.அப்படி ஒன்று நடந்தது என்பதையே சிலர் மறந்தும் விட்டார்கள் ஆனாலும் என்ன சென்ற இடத்தில் விதைக்கிறீர்கள் செயற்படுகிறீர்கள்.
    சென்ற காலங்களை நன்றியோடு நினைவுகூருகிறீர்கள் உங்களுக்குப் புலம் பெயர்ந்தோர் பலர் ஆதரவும் தருகிறார்கள் பாரிசிலும் நோர்வேயிலும் அதனை செய்திருக்கிறீர்கள்.இப்போது லண்டனில். பயிற்சி கொடுத்து மேடையிட்டுள்ளீர்கள். கற்றதைப் பெற்றதை செயல் முறைபடுத்துவோரே உண்மைகலைஞர்கள்.அதனை அடுத்த தலைமுறைக்கு அளிப்போர் பெரும் மரியாதைக்குரிய பெரும் கலைஞர்கள். .புலம் பெயர்ந்த இளம் தலைமுறை நமது ஆட்டமுறைகளை தாளக்கட்டுகளை அறிகிறது உச்சரிக்கிறது.ஆடுகிற்து இது மரபின் நீட்சி, பலதடைகள் வந்தும் உளசோர்வுகள் ஏற்பட்டும் அவை புறந்தள்ளிச் செயற்படுகிறீர்கள். இந்த உளவலிமை நம் மாண்வர்க்கும் வாய்க்கட்டும்' பெரு மகிழ்வடைகிறேன் சுகுமார் மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்களுக்கும்.உங்களுக்கு உதவியாக இருந்தோருக்கும் எனது வாழ்த்துகள்
    2

    • Saurysrithar Saury Maunaguru Sinniah sri நீங்கள் முதன்முதலில் மேடையேறிய இராவணேசன் கூத்து பயிற்சியில் பலமாதங்கள் பயிற்சி பெற்றேன் கூத்தாட்டம் நேர்த்தியாக வரவில்லை பாடல்குலுவில் இனைத்தீர்கள் எனக்கு அப்போது இருந்த குடும்பச்சுமை என்னை தொடர்ச்சியாக வருவதற்கு தடுத்தது இருந்தும் இராமருக்குரிய வில்லையும் இராவணனுக்குரிய தண்டாயுதத்தையும் வடிவமைத்த பெருமை சந்தோசமாக இருக்கிறது
      அத்துடன் உங்களது இன்னிய அணியில் முக்கிய இடம் தந்தீர்கள் நன்றி sir
  • Priya Jetheeswaran நல்வாழ்த்துக்கள் சேர். சுஜானந்தி இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.நாங்கள் லயம் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவரது மயானகாண்ட காட்சியும் பைரவி ராக பாடலும் அந்த உருக்கமும் இன்னும் நெஞ்சில் நிற்கிறது.அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள்
  • Saurysrithar Saury எனது ஆசானை வாழ்த்துகிறேன்

  • Arulmoli Thurai ஈழ மண்ணின் மணம் கமழும் கூத்துக்களை மீட்டுருவாக்கம் செய்தது சிறப்பபு
  • திலகா அழகு அற்புதம் சேர்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி