வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

நாமும் நமது கல்வி முறையும்

நாமும் நமது கல்வி முறையும்
இலங்கையில் இப்போது உள்ள கல்வி முறைமை பிரித்தானியர் காலத்தில் அறிமுகப் படுத்தப் பட்டு கன்னங்கரா அவர்களால் இலவசக் கல்வியாக மேம் படுத்தப் பட்டு காலத்துக்கு காலம் புதிய கல்வி சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு பாலர் பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரை எல்லாம் இலவசக் கல்வியில் ஆசியாவில் எழுத்தறிவு மட்டத்தில் முதன்மை நிலை பெற்ற நாடுகளில் இடம் பெற்றிருந்தாலும் நம் கல்வி முறை மாற்றங்கள் வேண்டி நிற்கிறது.
அண்மைக் காலங்களில் அரச பாட்சாலைகள் வெறும் முகவரிக்காக மட்டுமே பயன்பாடு உடையதா என்ற கேள்வியயை வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு பல்கிப் பெருகி இருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களும்.தனிப்பட்ட பிரத்தியேக வகுப்புக்களும் விளம்பரப் பலகைக்களில் தங்கள் தனியார் கல்வி நிலையம் இந்த ஆண்டு செய்த சாதனையென மாணவர்களின் ஆசிரியர்களின் புகைப்படத்துடன் காட்சியளிக்கும் விளம்பரப் பலகைகள் அரச பாடசாலைகளை அவற்றின் அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளன அத்தோடு சமூக வலைத் தளங்களில் தங்கள் கல்வி நிலையங்களை விளம்பரப் படுத்தும் விதமும்,அரச பாட்சாலைக்களுக்கு அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் அதே நேரத்தில் பாடசாலகளில் என்ன நடை பெறுகிறது என்ற கேள்வியயையும் எழுப்பியுள்ளது.
நேற்று 08.02.2018
என் மகனின் பாடசாலை
Neale-Wade Academy March நீல் வேட் அகடமி எனும் இரன்டாம் நிலைக் கல்வி பாடசாலை ஏழாம் ஆண்டு முதல் பதின் மூன்றாம் ஆண்டு வரை வகுப்புகள் கொண்டது என் மகன் ஏழாம் ஆண்டு படிக்கிறான்.செப்டம்பர் முதல் பெப்ரவரி வரை முதல் அரையாண்டுக்கான மதிப்பீடு பற்றிய கலந்துரையாடல் மாலை 4.30 மணி முதல் இரவு எட்டரை மணி வரை நீடித்தது ஒவ்வோரு பாடத்துக்கான ஆசிரியர்க்களும் தனித் தனி மேசைகளில் இருந்து கொன்டு பிள்ளைகளின் முன்னேற்ற அறிக்கை பற்றி கலந்துரையாடினர் ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு மடிக் கண்ணனி அதில் பிள்ளைகளின் விபரங்கள் தனித்தனியாக பதிவிட்டிருக்கிறது.அவர்கள் நிலையென்ன எவை எவற்றில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் எதில் அவர்களது அதி உயர் தேர்ச்சி இருக்கிறது.எதில் குறைந்து இருக்கிறார்கள் என்பன பற்றி பிள்ளைகளை வைத்துக் கொண்டே அந்த கலந்துரையாடல் நடை பெற்றது. ஆசிரியர்களின் அக்கறையும் தலமை ஆசிரியரின் வழி நடத்தலும் அதன் சிறப்பும் உணர முடிந்த சிறப்பான தருணம் அது.
இங்கு பாடசாலைகள் 8.40 மணிக்கு ஆரம்பமாகிறது ஆசிரியர்கள் எட்டு மணிக்கே சமூகமளிக்கின்றனர் பாடசாலை 3.15 மணிக்கு கலைகிறது ஆசிரியர்கள் பாடசாலை விட்ட பின் 5 மணி வரை அடுத்த நாள்
ஆயத்தம் இன்றைய வேலைகளின் நிறைவு என கடமையாற்றுகின்றனர் இங்கும் இலவசக் கல்விதான்
மற்றுமொரு சிறப்பு இங்கு பலகோடி செலவில் பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதில்லை.ஆசிரியர்களே பாடப் புத்தகங்கள் பாடத் திட்டம் உண்டு பாடத் திட்டத்துக்கு அமைய பாடங்களை படிப்பிக்க வேண்டியது ஆசிரியர் கடமை மகன் பாடப் புத்தகங்களை சுமப்பதில்லை..
நம் நாட்டுப் பாடசாலைகளும் ஆசிரியர்களும் கல்வி நிர்வாக முறையும் மாற வேண்டும்..மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை கல்வி முறைமை

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி