செல்லையா அண்ணாவியார்
ஒரு மாலைப் பொழுது பேராதனைப் பல்கலைக் கழக அரங்கு நிறைந்து கிடக்கிறது அந்த அரங்கில் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் இன மொழி பேதங்களுக்கு அப்பால் ஒரு கலை நிகழ்வுக்காகாக காத்துக் கிடக்கின்றனர் .
இடுப்பில் மத்தளத்துடன் ஒரு எளிய கலைஞன் தான் தான் இராஜா என கம்பீரத்துடன் பாடத் தொடங்குகிறான் விருத்தப் பாடலுடன் ஆரம்பித்த மட்டக்களப்பு வடமோடி பாடல் அதன் கம்பீரத் தொனிக்குள் மடை திறந்த வெள்ளமாய் பாய்கிறது .ஆட்ட அசைவும் பாடலுமாய் உருமாறிய போது சூழ இருந்த பார்வையாளர்கள் மந்திரத்தில் மகுடிக்கு கட்டுப் பட்டவர்கள் போல இரசனையின் கொடுமுடியயை தொட்டு விடுகின்றனர்.

நிகழ்வு முடிகிறது எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்புகின்றனர்
பேராசிரியர் வித்தியானந்தன் அந்த கலைஞனை அறிமுகப் படுத்துகிறார் சரத்சந்திர
முதலான கலை ஆளுமைகள் கட்டித் தழுவி தம் பாராட்டை தெரிவிக்கின்றனர்.
அது நம் போற்றுதலுக்குரிய கலைஞன் வந்தாறு மூலை செல்லையா அண்ணாவியார்

No comments:
Post a Comment